For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பொருட்களை தானமாக கொடுப்பது உங்கள் வாழ்வில் பெருந்துயரத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?

தானம் கொடுப்பது எவ்வளவு நன்மையை வழங்குகிறதோ அதே அளவிற்கு தவறான பொருட்களை தானம் கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் துன்பத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

|

இந்த உலகத்தில் மிகவும் புனிதமான ஒரு காரியம் என்றால் அது தானம் செய்வதுதான். தன்னிடம் இருக்கும் ஒரு பொருளை தேவைப்படுபவர்களுக்கு தானமாக கொடுக்கும்போது அது அவர்களுக்கு புண்ணியத்தையும், வாழக்கையில் மகிழ்ச்சியையும், மகத்துவத்தையும் வழங்கும்.

Never give away these things in donation

தானம் கொடுப்பது எவ்வளவு நன்மையை வழங்குகிறதோ அதே அளவிற்கு தவறான பொருட்களை தானம் கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் துன்பத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. சாஸ்திரங்களின் படி சில குறிப்பிட்ட பொருட்களை தானம் கொடுப்பது உங்கள் வாழ்வில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று இந்த பதவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிளாஸ்டிக்

பிளாஸ்டிக்

நாம் அனைவருமே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருப்போம். சாப்பிட, பொருட்களை சேமிக்க என பலவற்றில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம். எதுவாக இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்களை ஒருபோதும் தானம் செய்யக்கூடாது. இது உங்கள் வாழ்வில் வறுமையையும், துயரத்தையும் ஏற்படுத்தும்.

துடைப்பம்

துடைப்பம்

துடைப்பத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது என்பது லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பும் செயலாகும். இதனை செய்தால் உங்கள் சேமிப்பு அனைத்தும் விரைவில் கரையும். உங்கள் வீட்டில் ஒருபோதும் பணம் தங்காது.

உபயோகித்த துணிகள்

உபயோகித்த துணிகள்

ஏழைகளுக்கு உங்களின் உபயோகித்த துணிகளை தானம் கொடுப்பது என்பது நல்ல செயல்தான். ஆனால் ஒருவருக்கு தானம் என்ற பெயரில் உங்களின் துணிகளை கொடுப்பது என்பது தவறான செயலாகும். நீங்கள் செய்த நல்ல செயல்களால் கிடைக்கும் புண்ணியங்கள் கூட பழைய துணிகளை மற்றவர்களுக்கு கொடுப்பதன் மூலம் பாவங்களாக மாறக்கூடும்.

MOST READ: இந்த ராசிக்காரங்க உங்க மேல அக்கறை காட்டுனா நம்பிராதீங்க... எல்லாம் வெறும் நடிப்புதான்...!

எண்ணெய்

எண்ணெய்

எண்ணெயை தானமாக கொடுப்பது சனிபகவானை வழிபடஉதவும் ஒரு வழியாகும். ஆனால் பயன்படுத்தப்பட்ட, பழமையான எண்ணெயை தானமாக சனிபகவானின் சாபத்தை பெற்றுத்தரும்.

கெட்டுப்போன உணவு

கெட்டுப்போன உணவு

உணவு முற்றிலும் கெட்டு போகாவிட்டாலும் பழைய உணவுகளை தானமாக கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். மேலும் இது குடும்பத்தினரிடையே பல சிக்கல்களை உண்டாக்கலாம்.

கூரான பொருட்கள்

கூரான பொருட்கள்

கத்தரிக்கோல், கத்தி போன்ற கூரான பொருட்களை ஒருபோதும் தானமாக கொடுக்காதீர்கள். இவ்வாறு செய்வது உங்கள் வீட்டில் பல கஷ்டங்களை ஏற்படுத்தும், மேலும் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுக்கு துரோகம் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

ஸ்டேஷனரி பொருட்கள்

ஸ்டேஷனரி பொருட்கள்

நல்ல நிலையில் இருக்கும் புத்தகங்கள், பேனா போன்றவற்றை பிறருக்கு கொடுப்பது நல்லதுதான். மாறாக கிழிந்த புத்தகங்கள், உடைந்த பேனா போன்றவற்றை ஒருபோதும் தானமாக கொடுக்காதீர்கள். இது உங்கள் வாழ்வில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.

MOST READ: நீங்கள் சாப்பிடும் உணவுப்பொருள்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிவது எப்படி தெரியுமா?

தேவையற்ற பொருட்கள்

தேவையற்ற பொருட்கள்

உங்களுக்கு தேவைப்படாத பொருட்கள் என்று நினைக்கும் எதையும் தானம் செய்யாதீர்கள். மற்றவர்களுக்கு தேவைப்படுவது எதுவோ அதனை தானம் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Never give away these things in donation

According to Shastras never give away these things in donation.
Story first published: Thursday, June 27, 2019, 17:40 [IST]
Desktop Bottom Promotion