Just In
- 6 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 9 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 10 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
- 11 hrs ago
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
Don't Miss
- News
எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வரதட்சணைக்காக ஒரு மாசம் பட்டினி போட்டே கொடூரமாக கொன்ற மாமியாரும் கணவரும்...
திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள் 27 வயதுடைய பெண்ணை வரதட்சணை அதிகமாகக் கேட்டு கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் கணவனும் மாமியாரும். இதற்கான அவர் செய்த உச்சபட்ச காரியம் என்ன தெரியுமா?
ஒரு மாதம தொடர்ந்து அந்த பெண்ணுக்கு சாப்பாடே கொடுக்காமல் பட்டினி போட்டிருக்கிறார்கள். இறுதியாக அந்த பெண் எலும்பும் தோலுமாக ஒரு பிளாஸ்டிக் பை போன்று சுருங்கி 20 கிலோவாக ஆகி இறந்திருக்கிறார். இது நடந்தது நம்முடைய கேரளாவில் தான். சரி என்ன தான் நடந்தது வாங்க பார்க்கலாம்.

குடும்ப வன்முறை
இப்படியெல்லாமா இரக்க குணமே இல்லாமல் கொடூரமான குணம் கொண்ட மனிதர்கள் இந்த உலகத்தில் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தாலே பயமும் கோபமும் சேர்ந்து தான் நமக்கு வருகிறது. நாளுக்கு நாள் பெண்களும் குழந்தைகளும் நம் நாட்டில் இயல்பாக வாழ முடியாத அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டே போகிறது. அவர்கள் மீதான வன்முறையும் அதிகமாகிறது. சரி. இந்த பெண்ணுக்கு அப்படி என்ன தான் நடந்தது என்று பார்க்கலாம்.
MOST READ: இனிமேல் எந்த பழத்தோட தோலையும் தூக்கி வீசாதீங்க... இப்படிலாம் கூட அத யூஸ் பண்ணலாம்...

திருமணம்
கேரளாவில் உள்ள கொல்லத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் தான் இந்த சந்துலால் என்னும் 30 வயதுடைய இளைஞர். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாகத் தான் துசரா என்னும் 27 வயதுடைய பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள்.

வரதட்சணை
திருமண சமயத்தில் பெண் வீட்டார் கொடுப்பதாகப் பேசிய வரதட்சணை முழுமையாகக் கொடுக்க முடியவில்லை போல. அதற்காக மாமியார் தன்னுடன் மகனை உசுப்பேற்றி இருவரும் சேர்ந்து அவ்வப்போது அடித்து உதைத்திருக்கிறார்கள். படாத கொடுமைப் படுத்தி இருக்கிறார்கள் மாமியாரும் கணவனும்.

நடமாட்டம் ஏதுமில்லை
இப்படி தொடர்ந்து புதுப் பெண்ணை கொடுமைப் படுத்தி இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக துசராவின் நடமாட்டமே அந்த பகுதியில் இல்லாமல் இருந்திருக்கிறது. வீட்டை விட்டு வெளியே அவர் வரவேயில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் யாரும் துசராவைப் பார்க்கவில்லை.
MOST READ: பக்காவா சும்மா நச்சுனு ஒரு பர்ஃபெக்ட் முத்தம் கொடுப்பது எப்படி? படிச்சு தெரிஞ்சிக்கங்க...

தனி அறையில்
துசராவை கொடுமைப் படுத்தி தனி அறையில் வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தார். இவர் அழும் சத்தமோ வேறு எந்த சத்தமும் வெளியில் கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்து கை, கால்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.

பட்டினி
அந்த பெண்ணுக்கு எந்த திட உணவும் கொடுக்காமல் பட்டினி போட்டு கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள். காலையில் ஒரு டம்ளர் சர்பத்தும் ராத்திரி ஒரு டம்ளர் சர்பத்தும் தான் உணவு. மதியம் வெறும் ஒரு கிளாஸ் தண்ணீர். அவ்வளவு தான் அந்த பெண்ணுக்கான உணவு.

மருத்துவமனையில் அனுமதி
தொடர்ந்து தண்ணீர் மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்ததால் அந்த பெண்ணின் உடல் மிக மோசமானது. இதற்கு மேலும் இவரை வீட்டுக்குள்ளே வைத்திருந்தால் வீணாக மாட்டிக் கொள்வோம் என்று, அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறாகள். சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் இறந்துவிட்டார்.
MOST READ: கிட்னியில எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராம இருக்கணும்னா இந்த 6 பொருள சாப்பிடாதீங்க...

60 கிலோ - 20 கிலோ
இந்த பெண்ணின் இறப்பில் சந்தேகம் கொண்ட மருத்துவர் போலீசில் புகார் செய்திருக்கிறார். இதற்கு முன் 60 கிலோவாக இருந்த பெண் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டு இருந்ததால் 20 கிலோவாக உருகியிருக்கிறார்.
போலீஸ் கைது செய்து விசாரித்ததில் பட்டினி போட்டே கொலை செய்தோம் என்று அந்த பெண்ணின் கணவனும் மாமியாரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.