இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்பவுமே விளையாட்டுல கெத்து காட்டுவார்களாம் தெரியுமா?

உலகத்தை நம்மை உற்று பார்க்க வைக்கும் ஒரு துறை என்றால் அது சினிமாதான், ஆனால் சினிமாவையும் தாண்டி பெயரும், புகழும் நாட்டிற்கான கடமையை செய்த திருப்தியும் பெற்றுத்தரும் ஒரு துறை என்றால் அது விளையாட்டுத்து

இந்த உலகத்தில் எத்தனையோ துறைகள் உள்ளது. ஆனால் அலுவலகம் சென்று வேலை செய்பவர்கள்தான் பெருமளவில் இருக்கின்றனர். இவர்கள் உலகத்தோடு சேர்ந்து வாழும் பிரிவுக்கு கீழ் வருவார்கள். மற்றோரு பிரிவு உள்ளது அதுதான் தனக்கென தனித்துறையை தேர்ந்தெடுத்து உலகத்தையே தன்னை திரும்பி பார்க்க வைக்கும் சாதனை செய்ய விரும்புபவர்கள்.

Most Athletic Zodiac Signs

உலகத்தை நம்மை உற்று பார்க்க வைக்கும் ஒரு துறை என்றால் அது சினிமாதான், ஆனால் சினிமாவையும் தாண்டி பெயரும், புகழும் நாட்டிற்கான கடமையை செய்த திருப்தியும் பெற்றுத்தரும் ஒரு துறை என்றால் அது விளையாட்டுத்துறைதான். விளையாட்டுத்துறையில் ஆர்வமும், திறமையும் நாம் வளர்த்து கொள்வதில் மட்டுமில்லை, அது சிலருக்கு பிறவியிலேயே இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே விளையாட்டில் ஆர்வம் இருக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்கார்களுக்கு தடகளத்தில் இயற்கையாகவே ஆர்வம் இருக்கும். உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். புதிய பயிற்சி முறைகளை கையாண்டு தொடர்ந்து உடலை பராமரிப்பார்கள். போட்டி இருந்தால்தான் பயிற்சி எடுக்க வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள் சாதாணரமாகவே பயிற்சியில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு எல்லை என்பதே கிடையாது. ஒரு காரியத்தை செய்யமுடியாது இவர்களிடம் கூறினால் அதனை செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதி இவர்களுக்குள் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ஆற்றல் நிறைந்தவர்கள், எப்பொழுதும் மற்றவகர்களின் கவனத்தை வெற்றி மூலம் பெற வேண்டும் என்று நினைப்பார்கள் குறிப்பாக விளையாட்டுகளில். இவர்கள் அணியுடன் சேர்ந்து பணிபுரிவதில் சிறந்தவராக இருப்பார்கள், அணியுடன் இருக்கும்போது இவர்களின் வெற்றியின் மீதான கவனம் அதிகரிக்கும். தனது அணியினரை எப்பொழுதும் இவர்கள் கைவிட மாட்டார்கள். இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பவராக இருப்பார்கள். இவர்கள் உங்கள் அணியில் இருந்தால் உங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

 விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அதிக கவனம் நிறைந்தவர்கள், கடினமாக இருப்பதாக தோன்றினால் கூட அவர்கள் அதனை வெற்றிகரமாக முடிக்க கூடியவர்கள். இவர்கள் விளையாட்டுகளில் மட்டும்தான் சிறந்து விளங்குவார்கள் என்று அர்த்தமல்ல, மற்றவர்களை பயமுறுத்தும் விளையாட்டிலும் சிறந்தவராக செயல்படுவார்கள். அனைத்து வலியும் மோசமானது என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை, ஏனெனில் உடலை வலுப்படுத்த இவர்கள் எந்த வலியையும் பொறுத்து கொள்வார்கள்.

கன்னி

கன்னி

இவர்கள் உடல் வலிமை, மனவலிமை இரண்டையுமே வலுப்படுத்த பயிற்சியை மேற்கொள்வார்கள். புதிய விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சியை கற்றுக்கொள்வதிலும், கற்றுக்கொண்டு அதனை வைத்து அனைவரையும் ஆச்சரியப்படுவதிலும் இவர்க்ளுக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும். குறிப்பிட்ட பயிற்சிக்குள் இவர்கள் எப்பொழுதும் தங்களை அடைத்து கொள்ள மாட்டார்கள். தன்னுடைய உணவுமுறையில் இவர்கள் எப்பொழுதும் அதிக கவனத்துடன் இருப்பார்கள். உடல் சீராக இயங்குவதற்கு சரியான உணவுதான் பெற்றோ என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள்.

தனுசு

தனுசு

இவர்கள் பல வழிகளில் விளையாட்டு துறையில் சிறந்தவர்களாக இருப்பார்கள். உடற்பயிற்சி செய்தல், விளையாட்டு குழுவில் இருத்தல்,தனிப்பட்ட சாகசங்கள் என அனைத்திலும் இவர்கள் ஆர்வம் செலுத்துவார்கள். சாகசங்களுடன் உலகை பார்ப்பதிலும் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு தன் விளையாட்டுக்கும், பயிற்சிக்கும் ஏற்ற சூழ்நிலையை இவர்கள் உருவாக்கி கொள்வார்கள்.

மகரம்

மகரம்

மகர ராசிக்கார்கள் ஒரு முடிவெடுத்து விட்டால் அதனை சாதிக்க என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்காக அனைத்து முயற்சியிலும் இறங்குவார்கள். அவர்களை பொறுத்தவரை இப்போதைய கடின உழைப்பு எதிர்காலத்தை எளிமையாக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். தங்களின் எதிர்பார்ப்புகளுக்காக தங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வருத்திக்கொள்வார்கள். இவர்களிடம் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் இவர்கள் வேலையில் மூழ்கிவிடுவதால் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதை மறந்து விடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, May 11, 2019, 17:52 [IST]
Desktop Bottom Promotion