Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
உங்க உடம்புல எங்க மச்சம் இருக்குனு சொல்லுங்க..உங்க கல்யாண வாழ்க்கை எப்படியிருக்கும்னு நாங்க சொல்றோம்
சாமுத்ரிகா சாஸ்திரத்தில் முக்கியமான இடத்தை வகிப்பது எதுவெனில் அது நமது உடலில் இருக்கும் மச்சங்கள்தான்.
இந்து மதத்தின் நம்பிக்கைகளின் படி நமது வாழ்க்கை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் நமது சாஸ்திரங்களிலும், வேதங்களிலும் பதில்கள் கிடைக்கும். நமது எதிர்காலத்தை பற்றி தீர்மானிக்கும் சாஸ்திரங்களில் முக்கியமான ஒன்று சாமுத்ரிகா சாஸ்திரம் ஆகும். ஜோதிடம் நமது பிறந்த நேரம், நட்சத்திரம், ராசி போன்றவற்றை கொண்டு நமது எதிர்காலத்தை தீர்மானிப்பது போல சாமுத்ரிகா சாஸ்திரம் நமது உடலில் உள்ள அடையாளங்களை கொண்டு நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

சாமுத்ரிகா சாஸ்திரத்தில் முக்கியமான இடத்தை வகிப்பது எதுவெனில் அது நமது உடலில் இருக்கும் மச்சங்கள்தான். நமது உடலில் இருக்கும் மச்சத்தின் இடத்தையும், நிறத்தையும், அளவையும் கொண்டு நமது கடந்த காலம் மற்றும் எதிர்காலம் இரண்டையுமே தெரிந்து கொள்ளலாம் என்று சாமுத்திரிகா சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் மச்சங்கள் எப்படி உங்கள் திருமண வாழ்க்கையை தெரிந்து கொள்ள உதவுகிறது என்று பார்க்கலாம்.

மச்சங்கள்
பொதுவாக மச்சங்கள் நாம் பிறக்கும் போதே நமது உடலில் தோன்றிவிடும். ஆனால் அனைத்து மச்சங்களும் தெரியும்படி இருக்காது. நாம் வளர வளர நமது கர்மாவை பொறுத்தே சில மச்சங்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். நமது எதிர்காலத்தை பொறுத்து இதன் வடிவம் மற்றும் நிறம் போன்றவை மாறுபடும்.

மருக்கள்
பொதுவாக மச்சங்கள் நமது சருமத்துடன் ஒட்டிதான் காட்சியளிக்கும். ஆனால் சில மச்சங்கள் மட்டும் சருமத்திலிருந்து சிறிது வெளிநோக்கி காட்சியளிக்கும். இதனை மருக்கள் என்று கூறலாம். இதுவும் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கிறது.

திருமண வாழ்க்கை
மச்சங்கள் உங்களுடைய அதிர்ஷ்டங்கள், துரதிர்ஷ்டங்கள், வெற்றி, செல்வம் போன்றவற்றை குறிப்பதாக இருக்கும். ஆனால் சில மச்சங்கள் திருமணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை குறிப்பவையாக இருக்கும். எந்தெந்த இடங்களில் மச்சம் இருந்தால் உங்கள் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு சிறப்பாக மாறும் என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

மூக்கின் ஓரத்தில்
இந்த இடத்தில் உங்களுக்கு மச்சம் இருந்தால் இப்போது தடைகள் நிறைந்திருக்கும் உங்கள் வாழ்க்கையை நினைத்து கவலைப்படாதீர்கள். உங்களின் ஆசைகளும், கனவுகளும் உங்கள் திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக நிறைவேறும். திருமணம் முடியும் வரை நீங்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், திருமணத்திற்கு பிறகு ஆடம்பரமான வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது.

வலது கன்னம்
வலது கன்னத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் அது திருமணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை திடீரென அதிர்ஷ்டமாக மாறப்போவதை குறிக்கும். பணரீதியாக ஏற்படும் நெருக்கடிகளை திருமணம் வரையில் மட்டும் பொறுத்துகொள்ளுங்கள். அதற்குபின் உங்களுக்கு அந்த கவலையே வராது.

புருவங்களுக்கு மத்தியில்
ஒருவேளை உங்களுக்கு புருவங்களுக்கு மத்தியிலோ அல்லது கண்களுக்கு இடைப்பட்ட இடைவெளியிலோ மச்சங்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் தாலியை கட்டியபிறகு வெற்றிகள் வந்து குவியும். திருமணத்துக்கு முன் உங்களின் வளர்ச்சி குறைவானதாகவே இருக்கும்.

கையிலிருக்கும் திருமண ரேகை
திருமண ரேகையின் மீது பொதுவாக கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் மச்சம் இருக்கும். சிவப்பு நிற மச்சம் இருந்தால் உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். அதுவே கருப்பு நிறத்தில் இருந்தால் இதற்கு நேர் எதிராக நடக்கும்.

பாதம்
இந்த இடத்தில் மச்சம் இருப்பது நீங்கள் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்க நேரிடும் என்பதை குறிப்பதாகும். அது உள்ளூர் பயணமாகவும் இருக்கலாம், வெளிநாடு பயணமாகவும் இருக்கலாம் ஆனால் உங்கள் திருமண வாழ்க்கை வெற்றிகரமானகக இருக்கும்.

மார்பு
மார்பின் ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் அன்பானவராக இருப்பார், ஆனால் திருமணத்திற்கு முன் அதிக சோதனைகளை அனுபவிப்பவராக இருப்பார். திருமணத்திற்கு பிறகுதான் உங்கள் வாழ்க்கை முழுமைப்பெறும்.

சுக்கிரமேடு
கையிலிருக்கும் சுக்கிர மேட்டில் மச்சம் இருந்தால் அவர்களின் திருமணத்திற்கு பிறகான பாலியல் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக இருக்கும். வாழ்க்கையில் அவ்வப்போது சில பிரச்சினைகள் வந்தாலும் தாலி கட்டிய பிறகு இவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.

புருவங்களுக்கு கீழே
இந்த இடத்தில் மச்சம் காணப்பட்டால் அவர்களின் திருமண வாழ்க்கையானது ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்திற்குள் அடிக்கடி குழப்பங்களும், பிரச்சினைகளும் எழும். இதனால் மகிழ்ச்சி கேள்விக்குரியதானதாக மாறிவிடும்.

மூக்கின் நடுவில்
இந்த இடங்களில் மச்சம் இருப்பவர்கள் பாலியல்ரீதியான பிரச்சினைகள் சந்திக்க நேரிடும், இதனால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக மாறிவிடும். இந்த இடத்தில் மச்சம் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படும்.

கீழ் உதட்டிற்கு கீழ்
இந்த இடத்தில் மச்சம் உள்ளவர்களுக்கு பலருடன் பாலியல்ரீதியான தொடர்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் மற்ற விஷயங்களில் நேர்மையானவராக இருந்தாலும் இந்த தொடர்புகள் உங்கள் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியானதாக மாற்றிவிடும்.

கழுத்து
கழுத்தில் பெரிய, பிரகாசமான மச்சம் இருப்பவர்கள் சிறந்த அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இவர்கள் நல்ல மற்றும் அனைத்து விதத்திலும் இவர்களுக்கு உறுதுணையாய் இருக்கும் மனைவியை பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications