Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி திருமணமாகாத ஆண்கள் தூங்கும்போது இந்த தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது...!
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வாஸ்து அவர்களின் திருமண வாழ்க்கையிலும் முக்கியத்துவம் வகிக்கிறது.
வாஸ்து சாஸ்திரம் நமது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் முக்கியப்பங்கை வகிக்கிறது. வீடு கட்டும்போது சரியாக வாஸ்து பார்த்து கட்டிவிட்டால் போதும் உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல்கள் சீராக இருக்கும். வாஸ்து சாஸ்திரம் திசைகளை அடிப்படையாக கொண்டது. ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு பண்புகள் இருக்கிறது.

எட்டு திசைகளும் நமது வாழ்வில் இருக்கும் குறிப்பிட்ட எட்டு விஷயங்களை குறிக்கிறது. இந்த எட்டு திசைகளிலிருந்தும் வரும் சரியான ஆற்றல் நம் வாழ்க்கையை ஒரு மேம்படுத்த உதவும். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வாஸ்து அவர்களின் திருமண வாழ்க்கையிலும் முக்கியத்துவம் வகிக்கிறது. குறிப்பாக ஆண்களின் திருமண வாழ்க்கையை பொறுத்த வரையில் இது அதிக முக்கியத்துவம் வகிக்கிறது.

திருமண வாழ்க்கை
திருமண பந்தம் என்பது மிகவும் அழகான ஒன்றாகும். ஆனால் அது உடையக்கூடியது. நீங்கள் செய்யும் சிறுதவறு கூட உங்கள் திருமண வாழ்க்கையை சிதைக்கைக்கூடும். திருமணம் செய்ய திட்டமிடும் போது அதிக கவனித்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். திருமண உறவை பாதுகாப்பதில் ஆண், பெண் இருவரின் பங்கும் முக்கியமானதாகும். ஆண்கள் திருமணம் செய்ய தயாராகும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும். திருமணத்தில் ஏற்படும் தவறுகளை தடுக்கும் வாஸ்து குறிப்புகளை மேற்கொண்டு பார்க்கலாம்.

தூங்கும் நிலை
திருமண வயதில் இருக்கும் ஆண்கள் அவர்கள் தூங்கும் நிலையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களுக்கும் இது பொருந்தும். வாஸ்து சாஸ்திரத்தின் படி திருமணமாகத ஆண்கள் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் தலைவைத்து தூங்குவவதை தவிர்க்க வேண்டும். இது அவர்களின் திருமணத்திற்க்கு பிறகான வாழ்க்கை அல்லது திருமணம் நடப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

துணையை கண்டுபிடிப்பதில் தாமதம்
தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் தொடர்ந்து தூங்குபவர்களுக்கு சரியான வாழ்க்கைத்துணை கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மேலும் சரியான வாழ்க்கைத்துணையை சந்திக்க நீண்டகாலம் எடுத்துக்கொள்வார்கள்.

படுக்கை
உங்கள் படுக்கையின் இடத்தை சரியான இடத்தில் வைக்க வேண்டும், ஒருபோதும் நீங்கள் தூங்கும்போது உங்கள் கால்கள் தெற்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்கக்கூடாது. இது உங்கள் திருமண உறவில் பல சிக்கல்களை உண்டாக்கும்.

இரண்டாவது கதவு
அறையில் இரண்டு வாசல்கள் இருந்தால் திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண்கள் அந்த அறையில் தூங்குவதை தவிர்ப்பதை நல்லது.

காற்றோட்டமான அறை
எந்த வீடாக, அறையாக இருந்தாலும் அங்கு காற்றோட்டம் என்பது மிகவும் அவசியமானதாகும். இது ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு அவசியமாகும். காற்றோட்டம் இல்லாத அறையில் திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண்கள் தூங்காமல் இருப்பது நல்லது.

வெளிச்சம் அவசியம்
ஒரு குறிப்பிட்ட படுக்கையறையில், சூரிய ஒளி தடைபட்டு ஓரளவு மட்டுமே நுழைகின்றன. அதுபோன்ற அறைகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். அந்த அறையில் தொடர்ந்து தூங்கினால் அவர்கள் திருமணத்தில் தாமதம் ஏற்படும்.

தலையணை மற்றும் உடை
மென்மையான வண்ணங்கள் தூக்க முறையையும், மனநிலையையும் மேம்படுத்தும். எனவே அறையில் அடர் நிறங்களை தவிர்ப்பது நல்லது. வாஸ்துவின் படி மஞ்சள் மற்றும் பிங்க் நிற தலையணைகளை பயன்படுத்தவுது நல்லது. பொதுவாக தூங்கும்போது கருப்பு நிற உடையணிந்து தூங்குவதை தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications