For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...

நாய்களை தத்தெடுத்து வளர்க்கும் அதிசய மனிதன். அவருடைய கதையைக் கொஞ்சம் படித்து பாருங்கள். எல்லாருக்கும் செல்லப் பிராணிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஒரு சில பேருக்கு இந்த ஆசை ரொம்ப தீவிர

|

எல்லாருக்கும் செல்லப் பிராணிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஒரு சில பேருக்கு இந்த ஆசை ரொம்ப தீவிரமாகவும் இருக்கிறது. அது ஒரு வெளியாகக் கூட சில பேருக்கு மாறி விடுகிறது எனலாம்.

Man Runs Into Debt

அப்படித்தான் இந்த மனிதர் தன் நாய் போன கவலையை மறக்க தெருவில் இருக்கும் நிறைந்த நாய்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கிட்டத்தட்ட 300 நாய்களை தத்தெடுத்து வளர்த்து வரும் இவர் ஆச்சர்யத்திற்குரியவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷாங் ஹை வாழ்க்கை

ஷாங் ஹை வாழ்க்கை

சீனாவைச் சேர்ந்த 41 வயதான இவர் தன்னுடைய வாழ்க்கையை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தார். அவர் செல்லமாக ஒரு நாயையும் வளர்த்து வந்துள்ளார். அது இறக்கும் வரை அவருடைய வாழ்க்கை சந்தோஷமாகவே இருந்துள்ளது. அதற்குப் பிறகு தான் அவர் தன்னுடைய வாழ்க்கையே மாற்றியுள்ளார். அரசு நிறுவனத்தில் மேலாளராகவும், சொந்தமாக பயண நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

MOST READ: வேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு பாருங்க...

வெற்றிடம்

வெற்றிடம்

13 வயதில் அவர் வளர்த்த வந்த நாய் இறந்து விட்டது. ஷாங்கால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த இழப்பு அவருடைய வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.

இந்த வருத்தத்தை சமாளிக்க அவர் தெருவில் நடமாடும் நாய்களின் மேல் தன்னுடைய அக்கறையை செலுத்தினார். முதலில் இரண்டு தெருநாய்களை தத்தெடுத்து வளர்த்தவர் பிறகு தன் முழு நேரத்தையும் அதனுடைய செலவழிக்க முடிவு செய்தார்.

அடைக்கலம்

அடைக்கலம்

தத்தெடுக்கப்பட்ட நாய்களுக்கு ஏதுவாக ஒரு அடைக்கலமான இடத்தை கண்டறிந்தார். அந்த இடத்தை அப்படியே லிட்டில் ஏஞ்சல் அனிமல் ப்ரெக்ட்ஷன் சென்டர் என்று மாற்றிக் கொண்டார். இப்படியே ஒவ்வொன்றாக தத்தெடுத்து 2 வருடங்களில் கிட்டத்தட்ட 300 நாய்களை தத்தெடுத்து பராமரித்து வருகிறார்.

நன்கொடை

நன்கொடை

இவரது அர்ப்பணிப்பை கண்ட நிறைய பேர்கள் இவருக்கு உதவி செய்தனர். நிறைய நன்கொடைகளையும் வழங்கினர். ஆனால் நாய்களின் எண்ணிக்கை கூட கூட அது போதுமானதாக இல்லை. வருவாயை விட செலவு அதிகமாக இருந்தது.

இதனால் அவற்றை பராமரிக்க வங்கியில் லோன் வாங்கி உள்ளார். மாதத்திற்கு 20,000 யான் வரை செலவழிக்கிறார். தினமும் குறைந்தது 40 கிலோகிராம் உணவு தேவைப்படுகிறது. பராமரிக்க 2 ஆட்களை போட்டு அவருக்கு மாதம் 6000 யான் வரை சம்பளமும் தருகிறார்.

MOST READ: குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா?

செலவு அதிகம்

செலவு அதிகம்

ஆரம்பத்தில் எப்படியாவது லோனை அடைத்து விடலாம் என்று எண்ணினார். ஆனால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவரால் சமாளிக்க முடியவில்லை. 600,000 யான் வரை கடனை வாங்கி அவர் வருந்துவதை நினைத்து அவரது பெற்றோர்களும் கவலை கொண்டு உள்ளனர். இருப்பினும் அவர்களும் கடனை அடைக்க உதவி செய்கின்றனர். எது எப்படி இருந்தாலும் ஷாங் தன்னுடைய நாய்களை விடுவதாக இல்லை என்று கூறியுள்ளார்.

இத பத்தி நீங்க என்ன நினைக்கீங்க, அவரவர்களுக்கு உணர்வுகள் என்பது மாறுபட்டது. ஷாங்கிற்கு நாய் தான் இப்பொழுது உலகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Man Runs Into Debt After He Adopted 300 Dogs In 2 Years

Owning a pet dog is one of the most amazing feelings. But the sad fact is that these animals do not live as long as we wish them to! Hence losing them is no less than a huge loss for the entire family. This is something people who do not have a pet will never understand
Desktop Bottom Promotion