Just In
- 1 hr ago
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
- 5 hrs ago
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
- 6 hrs ago
அகோரிகள் ஏன் மனித உடல்களை சாப்பிடுகிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!
- 11 hrs ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
Don't Miss
- Automobiles
டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...
- Finance
41,000 தொட்டு முடிந்த சென்செக்ஸ்..! 12,075-ஐக்கு மேல் நிறைவடைந்த நிஃப்டி..!
- News
விஜய் திவஸ் டிசம்பர் 16: இந்திய ராணுவத்தின் வரலாற்று பெருமை வாய்ந்த வங்கதேச விடுதலை போர்!
- Sports
தம்பி.. உங்க வண்டவாளம் ஊருக்கே தெரிஞ்சுடுச்சு.. டகால்டி வேலை செய்து வசமாக சிக்கிய வெ.இண்டீஸ் வீரர்!
- Movies
நினைவுகள் மறைவதில்லை... கல்யாண போட்டோவை வெளியிட்டு பிரியதர்ஷன் உருக்கம்
- Technology
சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...
பார்ட்டி என்றாலே ஒரே மஜாதான்! நண்பர்களாக கூடிவிட்டால், யார் அதிகம் குடிக்கிறார்கள் என்ற போட்டியும் எழும். அதற்குத் கைகளை தட்டி உற்சாகப்படுத்த பலர் ரெடியாக இருப்பர்.
ஆனால், இதுபோன்ற விளையாட்டு வினையில்போய் நிற்கும் என்பதை அதிகமாக யாரும் யோசித்து பார்ப்பதில்லை. மது அருந்தும்போட்டியில் சிலர் உயிரையும் இழந்துள்ளனர்.

தாய்லாந்து பார்ட்டி
தாய்லாந்து நாட்டில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறவர்கள் ஓய்விடத்தில் (ரிசார்ட்) விருந்து (பார்ட்டி) வைத்துள்ளனர். அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. விருந்தில் பீர் அருந்துவதற்காக பலர் வரிசையில் நிற்கின்றனர். பீர் அருந்தும் உயரமான குவளை ஒன்றில் வாங்கி ஒரே மடக்கில் அருந்திவிட்டு, வெற்றியை காட்டுவதற்கு குவளையை உயர்த்திய ஒரு நபர், அப்படியே நிலைகுலைந்து விழுகிற காட்சி அதில் பதிவாகியுள்ளது.
MOST READ: குழந்தைங்க அடம்பிடிக்கறப்ப இந்த வார்த்தைய மட்டும் சொல்லுங்க... கப்...சிப்னு ஆகிடுவாங்க...

சிங்கிள் கல்ப்
நம்ம ஊர் குவாட்டர், ஆஃப் போன்று 'பின்ட்' என்ற அளவீடு ஒன்று உள்ளது. பிரிட்டன் போன்ற சில இடங்களில் 568 மிலியும் அமெரிக்காவில் 473 மிலியும் ஒரு 'பின்ட்' என்று குறிப்பிடப்படுகிறது. தாய்லாந்து மனிதர், ஒரு பின்ட் அளவான பீரை அரை நிமிட நேரத்துக்குள் குடித்துள்ளார். உடனே கீழே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
MOST READ: உட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா? இதுதான் காரணம்... இப்படி செய்ங்க சரியாயிடும்...

பீரால் பிரிந்ததா உயிர்?
அவர் அருந்திய மது விஷமாகிவிட்டது என்று பலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அப்பகுதி சுகாதார கட்டுப்பாட்டு துறை, குறிப்பிட்ட அம்மனிதர் மதுவினால்தான் உயிரிழந்தார் என்பதை உறுதி செய்வது கடினமான காரியம் என்ற கருத்து தெரிவித்துள்ளது.
அசம்பாவிதம் நடந்தபோது அங்கிருந்த பெண்மணி ஒருவர், பீர் அருந்தியவருக்கு வலிப்பு வந்தது போல் தெரிந்தது என்றும், அவரது வாய் மற்றும் மூக்கின் வழியே பீர் வெளியே வந்தது என்றும் தெரிவித்துள்ளார். நிலைகுலைந்து விழுந்த அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னரே உயிர் பிரிந்ததுதான் சோகம்!