Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தூங்கத்துல இயர்போனை விழுங்கிட்டு, மலத்தின்வழியே எடுத்து மறுபடி பயன்படுத்துறான்... வேற லெவல்...
தன்னுடைய ஹெட்போனை விழுங்கிவிட்டு தேடிய இளைஞர் பற்றிய சுவாரஸ்யமான கதை தான் இந்த கட்டுரை. அது பற்றிய சுவாரஸ்யமான கதை தான் இது.
தைவானிலுள்ள கௌஷியங் என்ற ஊரில் வித்தியாசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. 'இப்படியுமா பண்ணுவாங்க?' என்று வியக்க வைக்கும் அந்த நிகழ்வு என்ன என்று பார்ப்போம். தன்னுடைய ஹெட்போனை விழுங்கிவிட்டு தேடிய இளைஞர் பற்றிய சுவாரஸ்யமான கதை தான் இந்த கட்டுரை பேசுகிறது.

இதைப் படித்த பின் நிச்சயம் இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? இப்படிக்கூட நடக்குமா என்று ஆச்சர்யப்படுகிற நிலைக்கு நிச்சயம் இந்த கதை இருக்கும்.

காணாமல் போன ஏர்பாட்
ஸு என்பவர் உறங்கி விழித்தார். அவரது ஏர்பாட்-களை தேடினார். இடக்காதுக்கான ஏர்பாட்-ஐ இருந்தது. வலக்காதுக்குரிய ஏர்பாட்-ஐ காணாமல் திகைத்தார். எங்கெங்கோ தேடியும் அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆகவே, ஐபோனை தேடக்கூடிய Find My iPhone என்ற செயலியை பயன்படுத்தி, வலப்பக்கத்துக்கான ஏர்பாட்-ஐ தேட முடிவு செய்தார்.
செயலியை பயன்படுத்தி தேடியபோது, ஏர்பாட் இருக்கும் இடத்திலிருந்து சத்தம் வந்தது. ஆனால், எங்கிருந்து வருகிறது என்று அவரால் திட்டமாய் கண்டுபிடிக்க இயலவில்லை.

விழுங்கப்பட்ட ஏர்பாட்
மிகவும் கூர்ந்து கவனித்தபோது, தனது உடலுக்குள் இருந்துதான் சத்தம் வருகிறது என்று கண்டுகொண்டார். அதன்பிறகுதான், தூங்கும்போது, வலப்பக்க ஏர்பாட்-ஐ தான் விழுங்கியிருப்பது ஸுவுக்கு தெரிய வந்தது. வயிற்றுக்குள் ஏர்பாட் இருந்ததால் அவருக்கு உடல்ரீதியாக எந்த பிரச்னையும் எழவில்லை. ஆனாலும், ஏர்பாட் உடலுக்குள் இருப்பது அவருக்கு அச்சத்தைக் கொடுத்தது.

எக்ஸ் ரேயில் தெரிந்த ஏர்பாட்
மருத்துவர் ஒருவரிடம் சென்று தன் பிரச்னையை கூறினார் ஸு. மருத்துவர், எக்ஸ் ரே எடுத்துப் பார்த்ததில், ஸுவின் செரிமான உறுப்புகளுக்குள் ஏர்பாட் இருப்பது தெரிய வந்தது.

வெளியில் வந்த ஏர்பாட்
நிலைமையை உணர்ந்த மருத்துவர், வயிறு கழிவதற்கு மருந்து எழுதினார். மலத்தோடு சேர்ந்து ஏர்பாட் வெளியே வருகிறதா என்பதை கவனிக்குமாறு ஸுவிடம் கூறினார். மறுநாள், ஏர்பாட் மலத்தோடு வெளியே வந்தது.

அட, இப்படியுமா பண்ணுவாங்க?
வயிற்றுக்குள் இருந்து வெளியே வந்த ஏர்பாடை ஸு தூக்கி வீசினாரா? இல்லை. அதை சுத்தப்படுத்தி திரும்ப பயன்படுத்தி வருகிறாராம். விடாகண்டன்தான் அவர்!



Click it and Unblock the Notifications