For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Read more about: birds animals symptoms

உங்கள் உயிருக்கு வரப்போகும் ஆபத்துக்களை இந்த பறவைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்..!

|

நமது பூமி என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல. பறவைகள், விலங்குகள், மரங்கள் என அனைத்திற்கும் பூமியின் மீது பங்குள்ளது. இவைகளுடன் இணைந்து வாழ்வது மட்டுமே நமது வாழ்க்கையை அழகானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றும். பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் நமக்கும் இருக்கும் வேறுபாடுகள் பேசுவது மட்டுமல்ல.

பொதுவாக பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் மனிதர்களை விட உணர்திறன் மிகவும் அதிகம். அவற்றை சுற்றி நடக்கபோகிற நல்லது மற்றும் கெட்டது அனைத்தையும் அவற்றால் முன்கூட்டியே உணரமுடியும். அவற்றை அவை நமக்கு சில செயல்கள் மூலம் உணர்த்த முயலும். அதனை நாம் சரியாக புரிந்து கொண்டால் நடக்கப்போவது எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராகி கொள்ளலாம். இந்த பதவில் பறவைகள் மற்றும் விலங்குகள் கூறும் நல்ல மற்றும் கெட்ட சகுனங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காகம்

காகம்

காகம் என்பது இந்திய வீடுகளை பொறுத்தவரையில் மிகவும் பொதுவான ஒரு பறவையாகும். இதன் வருகைக்கு பின்னர் சில முக்கியத்துவங்கள் உள்ளது. உங்கள் வீட்டிற்கு அருகிலேயோ, உள்ளேயோ காகம் வருவது சிறந்த நல்ல சகுனமாகும். இதன் வருகை மட்டுமின்றி இதன் தனித்துவமான சத்தம் உங்களுக்கு நல்ல செய்தி வரபோவதற்கான அறிகுறி ஆகும்.

நாய் ஊளையிடுவது

நாய் ஊளையிடுவது

நகரங்களில் அதிகம் காணப்படும் விலங்குகளில் ஒன்று நாயாகும், நாய்கள் நடிகை ஊளையிடுவதை நாம பார்த்திருப்போம். ஆனால் அவை சில முக்கிய காரணங்களுக்காக இரவில் ஊளையிடும். பொதுவாக இது மரணத்தின் அறிகுறி என்று கூறப்படுகிறது.

குருவிக்கூடு

குருவிக்கூடு

பொதுவாக உங்கள் வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் குருவி கூடு கட்டிவிட்டால் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டுமே, விருந்தாளிகளுக்கு எதுவும் தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது போன்ற கவலைகள் உங்களுக்கு எழும். ஆனால் மறந்து விடாதீர்கள் உங்கள் வீட்டிற்குள் குருவிக்கூடு கட்டுவது உங்களை தேடி அதிர்ஷ்டம் வரபோவதன் அறிகுறி ஆகும்.

மயில்

மயில்

பயணத்தின் போது உயரமான இடத்திலோ அல்லது சாலை ஓரமாகவோ மயிலை பார்ப்பது நல்ல சகுனமாகும். ஆனால் அதன் அகவல் சத்தத்தை கேட்பது நல்ல சகுனமல்ல. எனவே வெளியே செல்லும்போது மயிலின் சத்தத்தை கேட்டால் ஜாக்கிரதையாக இருக்கவும்.

MOST READ: இந்த இடங்களில் மச்சம் இருப்பவர்கள் திருமணத்திற்கு பிறகு ராஜவாழ்க்கை வாழ்வார்களாம் தெரியுமா?

யானை

யானை

இந்தியாவில் அடிக்கடி பார்க்க முடியாத மிருகங்களில் ஒன்று ஏனெனில் யானை அவ்வளவு மாண்பு மிகுந்த மிருகங்களில் ஒன்றாகும். இதற்கும் விநாயகருக்கும் உள்ள தொடர்பின் காரணமாக இது மிகவும் புனிதமான மிருகமாகவும் இதனை பார்ப்பது நல்ல சகுனமாகவும் கருதப்படுகிறது.

பல்லி

பல்லி

பல்லிகள் பொதுவாக கலவையான அதிர்ஷ்டங்களை வழங்கக்கூடியதாகும். பெரும்பாலும் அனைவரின் இல்லங்களிலும் பல்லிகள் இருக்கும். வீட்டின் கூரைகளிலோ அல்லது வறண்ட இடங்களிலோ பல்லிகளை பார்ப்பது அந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு கலவையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அவற்றின் சத்தங்கள் நல்ல சகுனமாக கருதப்படும், ஆனால் அது தலையில் விழுவதோ மற்ற இடங்களில் விழுவதோ எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கழுதை

கழுதை

கழுதைகள் பெரும்பாலும் மற்றவர்களை கிண்டல் செய்வதற்காக பயன்படுத்தப்படும். ஆனால் உண்மையில் கழுதையின் சத்தத்தை கேட்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாகும். இதை கேட்பது அவ்வளவு எளிதானதல்ல ஆனால் கேட்டால் உங்களுக்கு விரைவில் நல்லது நடக்கப்போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.

வௌவால்

வௌவால்

வௌவால் பொதுவாக அனைவரையும் பயமுறுத்தும் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் வௌவால் உங்கள் வீட்டிற்குள் வருவது மகிழ்ச்சியின்அறிகுறியாகும் . அதேசமயம் வௌவால் சில சமயங்களில் துர்சகுனமாகவும் இருக்கும், ஒரு வீட்டை சுற்றி மூன்று முறை வௌவால் வட்டமடித்தால் அங்கு விரைவில் ஒரு உயிர் பிரியும்.

MOST READ: இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைல இருந்து போதாத காலம் ஆரம்பிச்சிடுச்சு... எப்படி நடந்துக்கணும்?

அணில்

அணில்

அணில்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை. இவை பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமில்லாமல் இவை விளையாடுவதை பார்ப்பதே ஒரு சிறந்த பொழுதுபோக்காகும். இது உங்கள் வீட்டிற்குள் வருவது உங்களை நோக்கி பெரிய மகிழ்ச்சி வரப்போகிறது என்பதன் அறிகுறியாகும்.

கழுகு

கழுகு

கழுகு பற்றிய நம்பிக்கையானது உலகம் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் கழுகு என்பது எதிரிகளின் வருகையையும் அதனால் ஏற்பட போகும் ஆபத்தையும் குறிப்பதாக உள்ளது. ஆனால் நமது நாட்டில் கழுகை பார்ப்பது நல்ல சகுனமாக கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lucky And Unlucky Omens: What Birds And Animals Tell Us

Generally birds and animals can tell us what is going to happen to us in future.