For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செலவில்லாம இந்த எலுமிச்சை தாந்தீரிகத்த வீட்ல பண்ணுங்க... 2 வாரத்துல வீட்ல பணமழை கொட்டும்

By Mahibala
|

பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும், பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று பணத்தின் முக்கியத்துவம் பற்றி நிறைய பழமொழிகளைச் சொல்லி வைத்திருக்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள். அத்தகைய பணத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிற வேளையில், பணம் மட்டும் தான் வாழ்க்கை. பணம் இல்லாதவன் வாழவே தகுதியில்லாதவனாகவும் வெற்று மனிதனாகவே இந்த உலகில் பார்க்கப்படுகிறான்.

சரி. நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணமே தங்க மாட்டேன் என்கிறது. தேவையில்லாத ஏதாவது விரயச் செலவுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன என்றால் அதற்கு என்னதான் செய்வது என்று புலம்புவர்கள் தான் நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். சரி.

lemon tantric for getting more money at home

நமக்கு இதற்கென்று எ்நத தீர்வுமே இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏன் இல்லை. நிச்சயம் இருக்கிறது. தாந்திரீக முறைகளில் சில சடங்குகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் போதும், பொருளாதார சிக்கல்கள் நீங்கி, இதுவரைக்கும் கையில் தங்காத பணம் உங்களோடு கை கோர்க்க ஆரம்பிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாஸ்து

வாஸ்து

வாஸ்து என்பது நம்முடைய வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களை எப்படி அமைக்க வேண்டும், எந்தெந்த பொருள்கள் எந்தெந்த இடத்தில், திசையில், நிறத்தில் இருந்தால் அவை என்ன மாதிரியான விளைவுகளைக் கொடுக்கும் என்பது தான். இந்த வாஸ்து முறையில் நம்முடைய ஆரோக்கியம், பணம், கல்வி, வீட்டில் மகிழ்ச்சி ஏற்படுதல் என பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.

MOST READ: செக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்... நீங்களே படிச்சுப் பாருங்க

தாந்திரீகம்

தாந்திரீகம்

தாந்திரீகம் என்பது என்னவென்றால் அது ஏதோ மாய மந்திரம், சூன்யம் செய்தல் என்று எல்லோரும் பயப்படுகிறார்கள். அது அப்படியெல்லாம் கிடையாது. நம்மைச் சுற்றிலும் நம்முடைய இருப்பிடம் மற்றும் தொழில் நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள சில எதிர்மறை ஆற்றல்கள் தான் காரியத் தடைகள், பணத் தடை ஆகியவற்றை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அந்த எதிர்மறை சக்திகளை நீக்கி நேர்மறை சக்திகளை உள்ளுக்குள் இழுத்து கொண்டு வருவது தான் தாந்திரீகமே தவிர அதில் எந்த மாய மந்திரமும் கிடையாது.

பணம் பெருக

பணம் பெருக

சிலர் கை நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால் வீட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்பே விரயமாகிவிடும். சிலருக்கு என்ன தான் தொழில் செய்தாலும் பணம் கையிருப்பு இருக்காது. நஷ்டத்தில் முடியும். இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க நிறைய வாஸ்து முறைகளும் தாந்திரீக முறைகளும் உண்டு. அதில் மிகவும் எளிமையாக செலவே இல்லாமல் எளிமையாக வீட்டில் செய்யக்கூடிய எலுமிச்சை பழ தாந்திரீகம் தான் மிகச் சிறந்த பலன்களைத் தருகிறது.

எலுமிச்சை தாந்திரீகம்

எலுமிச்சை தாந்திரீகம்

பொதுவாகவே மாந்திரீக, தாந்திரீகங்கள் எலுமிச்சைப் பழம் பயன்படுத்தப்படுவது நம் எல்லோருக்குமே தெரியும். அதேபோலத்தான் இறை வழிபாடுகளிலும் எலுமிச்சை முக்கிய இடம் பெறுகிறது. அந்த எலுமிச்சை பழத்தை வைத்து எப்படி தாந்திரீகம் செய்வது, வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்வது என்பது பற்றி கீழே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

MOST READ: கொஞ்சம் சாப்பிடறவங்க குண்டாவும் நிறைய சாப்பிடறவங்க ஒல்லியா இருக்கறது ஏன் தெரியுமா?

செம்பு (அ) கண்ணாடி டம்ளர்

செம்பு (அ) கண்ணாடி டம்ளர்

முதலில் ஒரு செம்பு அல்லது கண்ணாடி டம்ளர் ஒன்றை நன்கு சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற எவர் சில்வர், பித்தளை, அலுமினியம் போன்ற உலோகங்களைப் பயன்படுத்தக் கூடாது. செம்பு மற்றும் கண்ணாடிப் பாத்திரங்களுக்கு என்று சில உட்கிரகிக்கும் சக்தி உண்டு. அதனால் உங்களுடைய வசதிக்கு ஏற்றபடி கண்ணாடியோ செம்பு பாத்திரமோ எடுத்துக் கொள்ளுங்கள்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

சுத்தமான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை முன்பே சுத்தப்படுத்தி எடுத்து வைத்திருந்த செம்பு அல்லது கண்ணாடி டம்ளரில் இந்த நீரை நிரப்புங்கள். அப்படி நிரப்பிய தண்ணீரில் நன்கு பழுத்த எலுமிச்சை கனி ஒன்றைப் போடுங்கள். தண்ணீரைக் குறைக்க வேண்டாம்.

MOST READ: அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது... ஏன் தெரியுமா? தெரிஞசிக்கங்க

எந்த திசையில்?

எந்த திசையில்?

இப்படி நீருக்குள் எலுமிச்சை போட்டு வைக்கப்பட்ட டம்ளரை வீட்டின் வடகிழக்கு மூலையில் கொண்டு போய் வைத்துவிடுங்கள். அந்த நீருக்குள் இருக்கும் எலுமிச்சை நாம் வைத்திருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள எதிர்மறை சக்திகள் அனைத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும்.

இப்படி வைக்கப்பட்ட தண்ணீரை அடுத்த நாள் காலையில் எடுத்து ஏதேனும் நீர்நிலைகள் அல்லது வீதிக்கு வெளியே தூரமாக ஊற்றி விடுங்கள். எலுமிச்சையோடு சேர்த்து ஊற்றிவிடுங்கள். அடுத்த நாள் மீண்டும் இதேபோல் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை போட்டு வைக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வாருங்கள். உங்களுக்கு கைமேல் பலன் கிடைத்திருப்பதை உணர்வீர்கள். வீட்டில் பணப்புழக்கம் அதிகமாகும். பணம் சேரும். விரயச் செலவு குறையும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

lemon tantric for getting more money at home

Many people use lemon in tantric activities but lemon has its moral and satvik uses too. Lemon is beneficial in terms of health but here we will see how lemon can make you wealthy and shoo away your problems
Story first published: Tuesday, February 5, 2019, 17:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more