Just In
- 1 hr ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 3 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 3 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 8 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- Movies
இவர்தான் ஆசியாவின் செக்ஸி லேடி... பிரியங்காவுக்கு எத்தனையாவது இடம்?
- Automobiles
கம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனையில் தொடரும் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...
- News
ஃபைன் மட்டும் போடறீங்க.. ரசீது எங்கே.. பைக்கில் வந்தவர் வாக்குவாதம்.. வைரலான வீடியோ.. எஸ்ஐ சஸ்பெண்ட்
- Sports
3 கோல்.. தெறிக்கவிட்ட ஒடிசா எஃப்சி அணி.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி!
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி பழைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்த முடியாது..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு எந்த வயதில் சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்கிறது தெரியுமா?
" நாம் ஏழையாக பிறப்பது நம் தவறல்ல, ஆனால் ஏழையாகவே இறப்பது நம் தவறுதான்" என்று கூறுவார்கள். இது முற்றிலும் உண்மையான கூற்றாகும். ஏனெனில் இப்போதுள்ள சூழ்நிலையில் நமக்கான அங்கீகாரம் என்பது நம்மிடம் இருக்கும் பணத்தின் அளவை பொறுத்துதான் இருக்கிறது.பணம்தான் ஒருவருக்கு அடையாளம், கௌரவம் புகழ் போன்றவற்றை பெற்றுத்தரும் என்ற மாயையை இந்த சமுதாயம் உருவாக்கிவிட்டது.
இந்த வேகமான உலகத்தில் நாம் அனைவருமே உணவு, உடை, இருப்பிடம் என்ற அடிப்படை தேவைகளுக்காகத்தான் போராடி கொண்டிருக்கிறோம். இதில் இருப்பிடம் என்னும் போது அது சொந்த வீடாக இருப்பதே நமக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது அனைவருக்குமே இருக்கும் அடிப்படை ஆசையாகும். உங்கள் ஜாதகத்தின் படி உங்களுக்கு எந்த வயதில் சொந்த வீடு வாங்க வாய்ப்புள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

எப்போது வீடு வாங்குவேன்?
நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பலரை பார்க்கிறோம், அதில் சிலர் மிகக்குறுகிய காலத்திலேயே சொந்தமாக வீடு வாங்கியிருப்பார்கள். அதேசமயம் வேறு சிலரோ முதிர்ந்த வயதில் கூட இதனை செய்ய இயலாமல் தவிப்பார்கள். இதற்கு காரணம் என்னவென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கு காரணம் அவர்களின் விதி ஆகும். நமது ஜாதகப்படி நாம் பிறப்பதற்கு முன்பே நம் தலையெழுத்து நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. அதன்படிதான் திருமணம், குழந்தைகள், வெற்றி போன்றவை நம் வாழ்க்கையில் நடக்கிறது.

நான்காவது வீடு
ஜோதிடத்தின் படி நம் ஜாதகத்தின் நான்காவது வீடுதான் நமது வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சிக்கும், சாதனைகளுக்கும் காரணமாக இருப்பதாகும். உங்கள் தாயின் ஆரோக்கியம், நீங்கள் பெறப்போகும் வெற்றிகள், வாங்கப்போகும் வாகனங்கள் மற்றும் வீடு என அனைத்தும் இந்த வீட்டில் உள்ள கடவுளால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது.

நான்காம் வீட்டின் முக்கியத்துவம்
நான்காவது வீடு நிலையான செல்வத்திற்கு பொறுப்பாகும், இது பணம் மற்றும் தொடர்புடையதல்ல. உங்களுடைய மகிழ்ச்சி தொடர்பான அனைத்தும் நான்காம் வீட்டை பொறுத்துதான் இருக்கிறது. உங்களின் நான்காம் வீடு வலிமையாக இருந்தால் உங்களின் கையில் பணமே இல்லையென்றாலும் கூட மற்றவர்கள் பொறாமை படும் அளவிற்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
MOST READ: இந்த பொருட்களை கொண்டு சிவபெருமானை வழிபட்டால் அவரின் கோபத்தால் நீங்கள் அழிவது உறுதி...!

ஜாதகத்தின் நான்காம் வீடு
இந்த வீடு நீங்கள் எந்த வயதில் வீடு மற்றும் வாகனங்கள் வாங்குவீர்கள் என்று காட்டும், மேலும் அது நீங்கள் வாங்கியதாக இருக்குமா அல்லது யாராவது உங்களுக்கு பரிசளிப்பார்களா? உங்கள் தாயுடனான உங்களின் உறவு எப்படி இருக்கும்? அவர்களின் ஆயுட்காலம் என்ன? உங்கள் வாழ்க்கையில் கடன் எவ்வளவு வாங்குவீர்கள் போன்ற பல கேள்விகளுக்கு இந்த வீடு பத்தி கூறும். நான்காம் வீட்டில் வலிமையான நேர்மறை கடவுள்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதேசமயம் வலிமையில்லாத எதிர்மறை கடவுள்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் படாதபாடு படுவீர்கள்.

நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்
உங்கள் ஜாதகத்தின் நான்காம் வீட்டில் மங்கல கிரகமான செவ்வாய் இருந்தால் அது ஒரு நல்ல அறிகுறி ஆகும். இந்த ஜாதகம் உடையவர்கள் தங்களின் 40 வது வயதில் சொந்தமாக வீடு வாங்குவார்கள். ஒருவேளை செவ்வாய் கிரகத்துடன் அதன் எதிரி கிரகமும் ஏதாவது சேர்ந்து இருந்தால் அவர்கள் அண்டை வீட்டுக்காரர்களுடன் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒருவேளை சனிபகவான் செவ்வாய் கிரகத்துடன் இருந்தால் சொத்து பிரச்சினைக்காக நீதிமன்றம் வரை செல்ல வேண்டியிருக்கும்.

நான்காம் வீட்டில் சுக்கிரன் இருந்தால்
ஒருவேளை உங்கள் ஜாதகத்தின் நான்காம் வீடு செல்வத்தின் கடவுளான சுக்கிரனால் ஆளப்பட்டால் உங்கள் 45-50 வயதில் பெரிய பங்களாவிற்கு செல்ல தயாராகி கொள்ளுங்கள். ஆடம்பரமான வீடும், நீங்கள் வாழும் வாழ்க்கையும் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இருக்கும். உங்களின் கடைசி காலம் நீங்கள் விரும்பி கட்டிய வீட்டில்தான்.

நான்காம் வீட்டில் சனி இருந்தால்
உங்கள் ஜாதகத்தின் நாங்கள் வீட்டில் சனிபகவான் இருந்தால் நீங்கள் உங்களுடைய 40 வது வயதிற்கு பிறகுதான் சொந்த வீட்டில் வசிப்பது பற்றி யோசிக்கவே முடியும். அதன் அர்த்தம் என்னவெனில் ஒருவேளை நீங்கள் முன்னாடியே வீடு கட்டிவிட்டாலும் 40 வயதிற்கு பிறகுதான் நீங்கள் அந்த வீட்டில் வசிக்கும் படி சூழ்நிலைகள் இருக்கும். நான்காம் இடத்தில் சனிபகவான் இருப்பது அதிர்ஷ்டமாகும், இவர்களின் இறுதிக்காலம் புகழ் வாய்ந்ததாக இருக்கும்.
MOST READ: ஒரே வாரத்தில், வறட்சியான உங்க முடியை மென்மையாக்க இந்த 8 பொருட்கள் போதும்..!

நான்காம் வீட்டில் சூரியன் இருந்தால்
உங்கள் ஜாதகத்தின் நான்காம் வீடு சூரியபகவானால் நிர்வகிக்கப்பட்டால் நீங்கள் மரபுகளையும், பழைய பழக்க வழக்கங்களையும் மதிப்பவராக இருப்பீர்கள். நேர்மையாக வாழ விரும்பும் நீங்கள் உங்களின் 50 வது வயதில் உங்களின் சொந்த வீட்டில் வசிக்க தொடங்குவீர்கள்.