Latest Updates
-
புதன் மிதுன ராசிக்குள் நுழைவதால் உருவாகும் பத்ர யோகம் இந்த 3 ராசிகளை ஜெயிக்கிற குதிரையாக மாத்தப்போகுதாம் -
இந்த 4 விஷயங்களை பின்பற்றுபவர்கள் சீக்கிரம் கோடீஸ்வரர் ஆவார்களாம் - சாணக்கியர் சொல்லும் வாழ்க்கை ரகசியம் -
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 07 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு விபத்தும் நடக்க வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம் -
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
உங்க பிறந்த தேதி படி உங்களுக்கு கொஞ்சம் கூட ராசியில்லாத கலர் எது தெரியுமா?
ராசியான நிறம் உள்ளது போல நீங்கள் பிறந்த தேதியின் படி ராசியில்லாத நிறமும் நிச்சயம் இருக்கும். இந்த நிற ஆடை அணிவது முடிவை உங்களுக்கு எதிரானதாக மாற்றலாம்.
நிறங்கள் என்பது நமது வாழ்க்கையில் முக்கியபங்கு வகிப்பதாகும். நமது சருமத்தின் நிறம் முதல் நாம் அணியும் உடையின் நிறம், பயன்படுத்தும் பொருளின் நிறம் என அனைத்துமே நமது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நம் அனைவருக்குமே பிடித்த நிறம் என்ற ஒன்று இருக்கும். அதேபோல ராசியான நிறம் என்ற இருக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் பிறந்த தேதிக்கென ஒரு ராசியான நிறம் இருக்கும். முக்கியமான காரியங்களுக்கு செல்லும்போது அந்த நிற உடையணிவது அதன் முடிவை உங்களுக்கு சாதகமானதாக மாற்றும். ராசியான நிறம் உள்ளது போல நீங்கள் பிறந்த தேதியின் படி ராசியில்லாத நிறமும் நிச்சயம் இருக்கும். இந்த நிற ஆடை அணிவது முடிவை உங்களுக்கு எதிரானதாக மாற்றலாம். இந்த பதிவில் உங்கள் பிறந்த தேதிக்கான ராசியான மற்றும் ராசியில்லாத நிறம் எதுவென்று பார்க்கலாம்.

பிறந்த தேதி 1, 10, 19, 28
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகிறவர்கள். எனவே இவர்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்கள் மிகவும் ராசியானதாக இருக்கும். இவை தைரியம், நேர்மை மற்றும் துணிச்சலின் அடையாளமாகும். இந்த நிற உடை அவர்களுக்கு அதிக ஆற்றலையும், அதிர்ஷ்டத்தையும் வழங்கும் அதேநேரம் கருப்பு மற்றும் மெரூன் போன்ற நிறங்களை இவர்கள் அணியக்கூடாது. இதனால் அவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாத மாறாக தீமைகள் மட்டுமே ஏற்படும்.

பிறந்த தேதி 2, 11, 20, 29
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுபவர்கள். இவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நிறம் என்றால் அது பச்சைதான். மெல்லிய பச்சை நிற உடையணிவது இவர்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது மஞ்சள் நிறமாகும். இவர்களுக்கு கொஞ்சம் கூர் ராசியில்லாத நிறம் என்றால் அது சிவப்பும், கருப்பும்தான்.

பிறந்த தேதி 3, 12, 21, 30
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வியாழன் அல்லது குருவால் ஆளப்படுகிறார்கள். பேசுவதில் சிறந்து விளங்கும் இவர்களுக்கு ராசியான நிறம் என்றால் அது ஆரஞ்சு மற்றும் பிங்க் ஆகும். சிவப்பு சாயல் உள்ள அனைத்து நிறங்களுமே இவர்களுக்கு நல்ல பலனை தரக்கூடியதாக இருக்கும். இவர்களுக்கு தோல்வியை வழங்கும் நிறங்கள் என்றால் அது கருப்பு, அடர் ஊதா மற்றும் அடர் பச்சை ஆகும்.

பிறந்த தேதி 4, 13, 22, 31
இந்த தேதிகளில் பிறந்தவர்களை ஆள்பவர் ராகுபகவான் ஆவார். இவர்களுக்கு மிகவும் சிறந்த நிறமாக இருப்பது நீலம் ஆகும், அதிலும் மெல்லிய ஊதா நிறம் இவர்களுக்கு வெற்றியை தேடித்தரும். இவர்களுக்கு கொஞ்சம் கூட ராசியில்லாத நிறம் கருப்பு ஆகும். மற்ற அனைத்து நிறங்களும் இவர்களுக்கு சமநிலையான பலன்களைஏற்படுத்தும்.

பிறந்த தேதி 5, 14, 23
இந்த தேதிகளுக்கு சொந்தகார கடவுள் புதன் ஆவார். மற்றவர்களை எளிதில் கவரும் இவர்களுக்கு ராசியான நிறம் சாம்பல் ஆகும். இவர்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை சாம்பல் நிறம் பெற்றுத்தரும். மெல்லிய எந்த நிறத்தையும் இவர்கள் அணியலாம். இவர்களுக்கு ராசியில்லாத நிறங்கள் அடர் பச்சையும், அடர் சிவப்பும் ஆகும்.

பிறந்த தேதி 6, 15, 24
இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சொந்தக்காரர் சுக்கிரன் ஆவார். இவர்களுக்கு ராசியான நிறம் என்றால் அது அடர் பச்சையும், அடர் ஊதாவும்தான். சிவப்பு மற்றும் ஊதா சாயல் இருக்கும் ஆடைகள் கூட அவர்களுக்கு ஏற்றதுதான். இவர்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் நிறங்கள் வெள்ளை, மஞ்சள் மற்றும் பிங்க் ஆகும்.

பிறந்த தேதி 7, 16, 25
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவால் ஆளப்படுபவர்கள். இவர்கள் பிறந்த தேதியின் படி இவர்களுக்கு ராசியான நிறங்கள் என்றால் அது வெள்ளை, மஞ்சள், மெல்லிய பச்சை மற்றும் மெல்லிய ஊதா நிறம் ஆகும். இவர்களுக்கு அடர் நிறங்கள் எப்பொழுதும் இவர்கள் விரும்பும் முடிவுகளை தராது.

பிறந்த தேதி 8, 17, 26
இவர்களின் பிறந்த தேதியின் படி இவர்களை ஆள்பவர் அனைவரும் பயப்படும் சனிபகவான் ஆவார். இவர்களுக்குராசியான நிற மஞ்சள் ஆகும். எந்த சூழ்நிலையிலும் மஞ்சள் நிறம் இவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும். முக்கியமான காரியங்களுக்கு செல்லும்போது மஞ்சள் நிற ஆடை அணிந்து செல்வது நல்லது. அடர் பச்சையும், அடர் நீலமும் கூட அணியலாம். இவர்கள் சிவப்பு நிறத்தை அணியக்கூடாது, அது இவர்களுக்கு தோல்வியை ஏற்படுத்தும்.

பிறந்த தேதி 9, 18, 27
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் செவ்வாயால் ஆளப்படுபவர்கள். இந்த எண் ஒரு மாயாஜால எண் ஆகும்.இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு ராசியான நிறம் எனில் அது சிவப்புதான். வெள்ளை நிறமும், மெல்லிய நிறங்களும் இவர்களுக்கு நல்லதாக அமையாது.



Click it and Unblock the Notifications