For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்க்கையில் பணத்தை குவிக்க உங்கள் வீட்டில் வைக்க வேண்டிய பொருள் என்ன தெரியுமா?

ஜோதிடத்தின் படி நாம் பிறந்த தேதியின் எண்ணிற்கென ஒரு தனி குணம் இருக்கும். அதன்படி உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை உண்டாக்க சில குறிப்பிட்ட பொருட்களை வீட்டில் வைக்க வேண்டும்.

|

இந்தியாவில் குழந்தைகள் பிறக்கும் நேரம், அவர்கள் பிறக்கும் ராசி, நட்சத்திரம், பிறக்கும் தேதி என பலவும் அவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகளாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவர் பிறக்கும் நாளானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.ஏனெனில் நமது ஆளுமையை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக நாம் பிறந்த தேதி கருதப்படுகிறது.

Keep These Things at Home for Wealth Based on Your Birth Date

ஜோதிடத்தின் படி நாம் பிறந்த தேதியின் எண்ணிற்கென ஒரு தனி குணம் இருக்கும். அதன்படி உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை உண்டாக்க சில குறிப்பிட்ட பொருட்களை வீட்டில் வைக்க வேண்டும். இந்த பொருட்களை உங்கள் வீட்டில் வைப்பது உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், செல்வ செழிப்பையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த பதிவில் உங்கள் பிறந்த தேதியின் படி உங்கள் வீட்டில் வைக்க வேண்டிய அதிர்ஷ்ட பொருள் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண் 1

எண் 1

உங்கள் பிறந்த தேதியின் எண் 1 ஆக இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க நீங்கள் வீட்டில் வைக்க வேண்டிய பொருள் புல்லாங்குழல் ஆகும். இந்த புல்லாங்குழலை உங்கள் வீட்டின் வடக்கு திசையில் வைக்கவும். நீங்கள் வைக்கும் புல்லாங்குழல் மரத்தால் செய்யப்பட்டதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

எண் 2

எண் 2

எந்த மாதத்திலும் இரண்டாவது எண்ணில் பிறந்தவராக நீங்கள் இருந்தால் உங்கள் வீட்டில் வடக்கு திசையில் வெள்ளை நிற சங்கை வைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் இல்லத்திற்கு நேர்மறை தோற்றத்தை வழங்கும், மேலும் உங்கள் இல்லத்தை நோக்கி வரும் எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்கும்.

எண் 3

எண் 3

உங்களுடைய பிறந்த எண் 3 ஆக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் திசை வடகிழக்கு ஆகும். எனவே உங்கள் வீட்டில் வடகிழக்கு திசையில் ருத்திராட்சத்தை வையுங்கள். இந்த ருத்திராட்சம் உங்களுக்கு ஈசனின் அருளை பெற்றுத்தருவதோடு உங்கள் வாழ்க்கையில் உள்ள இருளையும் அகற்றும்.

எண் 4

எண் 4

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டுத்தொகை 4 ஆக இருந்தால் நீங்கள் வீட்டில் வைக்கவேண்டிய பொருள் சில கண்ணாடித் துண்டுகளாகும். இதனை உங்கள் வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த கண்ணாடி துண்டுகள் உடைந்ததாக இருக்கக்கூடாது, அதேசமயம் கலைந்தும் இருக்கக்கூடாது. உடையாத கண்ணாடி துண்டுகளை ஒரே இடத்தில வைக்கவும். காயம் ஏற்படுத்தாத வகையில் கண்ணாடிகளை வைக்கவும்.

MOST READ: இந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆளப்பிறந்தவர்களாம்... உங்க நட்சத்திரமும் இதுல இருக்கா?

எண் 5

எண் 5

பிறந்த நாளின் கூட்டுத்தொகை 5 ஆக இருக்கும்போது உங்கள் வாழ்க்கையில் லட்சுமி தேவியின் அருள் குறைவாக இருக்கும். எனவே உங்கள் வீட்டில் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி தேவியின் உருவப்படத்தை வைக்கவும். வீட்டில் லட்சுமி தேவி இருப்பது உங்கள் வீட்டிற்கு செல்வ செழிப்பை கொண்டுவரும்.

எண் 6

எண் 6

உங்கள் பிறந்த எண் 6 ஆக இருந்தால் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் அதிர்ஷ்ட பொருள் மயில் இறகு ஆகும். இந்த மயிலிறகை தென்கிழக்கு திசையில் வைக்கவும். கிருஷ்ணரின் அடையாளமாக கருதப்படும் இந்த மயிலிறகு உங்கள் வாழ்வில் செல்வத்தையும், அமைதியையும் கொண்டுவரும்.

எண் 7

எண் 7

உங்களின் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 7 ஆக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் பொருள் ருத்திராட்சம் ஆகும். அடர் பழுப்பு நிறமுள்ள பஞ்சமுக ருத்திராட்சத்தை உங்கள் இல்லத்தின் தென்கிழக்கு திசையில் வைப்பது உங்களுக்கு வாழ்க்கையில் மேன்மையையும் தரும்.

எண் 8

எண் 8

உங்கள் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 8 என அமைந்தால் நீங்கள் கருப்பு படிகத்தை உங்கள் வீட்டில் வைக்க வேண்டும். இதனை தெற்கு திசையில் வைப்பது சிறப்பான விஷயமாகும். இந்த கருப்பு படிகம் உங்கள் வீட்டிற்குள் நுழையும் அனைத்து எதிர்மறை சக்திகளையும் விரட்டுவதோடு உங்கள் இல்லத்திற்குள் நல்ல சக்திகளை கொண்டுவரும்.

MOST READ: பெண்கள் குழந்தைக்கு ஒருநாளைக்கு அதிகபட்சம் எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்கலாம்?

எண் 9

எண் 9

உங்கள் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 9 ஆக இருந்தால் நீங்கள் வீட்டில் வைக்க வேண்டிய பொருள் பிரமிட் ஆகும். இதனை தெற்கு திசையில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: astrology ஜோதிடம்
English summary

Keep These Things at Home for Wealth Based on Your Birth Date

Do you know that your date of birth can also determine the kind of things you should keep in your house?
Desktop Bottom Promotion