For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணக்கார குபேரனுக்கே பணக்கஷ்டம் வந்தபோது என்ன செய்தார் தெரியுமா? தெரிஞ்சிகங்க... நீங்களும் ட்ரை பண்ணு

குபேரனுக்கே பணக் கஷ்டம் வந்தபோது கடவுள் சிவபெருமான் தான் நிறைய பணத்தை அள்ளிக் கொடுத்தாராம். அந்த சுவாரஸ்யமான கதையைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

By Mahibala
|

உலகத்துலயே பணக்காரக் கடவுள் யார்னு கேட்டா உடனே எல்லோரும் கண்ணை மூடிக்கிட்டு சொல்ற பேர் திருப்பதி வெங்கடேச பெருமான் தான். அதற்கு அடுத்ததாக, நினைவுக்கு வருவது குபேரன் தான்.

Kubera

எல்லோருமே குபேரன் மாதிரி வாழணும்னு ஆசைப்படுவாங்க. ஆனால் அவருக்கே ஒருமுறை பணக்கஷ்டம் வந்ததாம். அவருக்கு சிவபெருமான் தான் அள்ள அள்ளக் குறையாத பணத்தைக் கொடுத்தாராம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பணக்கஷ்டம்

பணக்கஷ்டம்

என்னது குபேரனுக்கு பணக்கஷ்டமா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆமாங்க. குபேரனோட பணக்கஷ்டத்த அவராலயே சமாளிக்க முடியலயாம். அப்பதான் சிவபெருமான் ஒரு அற்புதமான ஐடியாவை குபேரனுக்குக் கொடுத்திருக்கார். அப்புறம் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுச்சாம். அந்த கதையை நாம இப்ப பார்க்கலாமா?

MOST READ: உங்க குலதெய்வத்தை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா? இந்த 6 பொருள வாசல்ல கட்டுங்க...

செல்வம் அழிந்தது

செல்வம் அழிந்தது

குபேரன் ஆண்ட நாட்டுக்கும் மற்ற எதிரி அரக்கர்களுக்கு போர் நிகழ்ந்ததாம். அந்த சமயத்தில் எதிரிகள் செய்த சூழ்ச்சியின் காரணத்தால், தன்னிடம் இருந்த அத்தனை சொத்துக்களும் செல்வங்களும் இழந்து விட்டான். பெரும் பணக்கஷ்டத்தைச் சந்தித்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாராம்.

சிவனின் ஐடியா

சிவனின் ஐடியா

அப்போது தான் சிவபெருமானின் ஞாபகம் வந்ததாம். உடனே இந்த விஷயத்தை சிவபெருமானிடம் சென்று முறையிட்டிருக்கிறார். அப்போது சிவனும் ஒரு நிமிடம் நன்கு யோசித்துவிட்டு, நீங்கள் நெல்லிக்காய் மரங்களை நட்டு வளருங்கள். அவை வளர்ந்ததும் வந்து என்னை சந்தியுங்கள் என்று கூறியிருக்கிறார். குபேரனும் அப்படியே செய்கிறேன் என்று சொல்லி விட்டு வந்திருக்கிறார் குபேரன்.

நெல்லிக்காய் மரம்

நெல்லிக்காய் மரம்

நெல்லிக்காய் மரம் வைப்பதற்கும் செல்வத்துக்கும் என்ன சம்பந்தம் என்று குபேரனுக்கும் புரியவில்லை. அதை சிவபெருமானிடமும் கேட்க முடியவில்லை. சரி என்று சொல்லிவிட்டு அதுபற்றியே யோசித்துக் கொண்டே சென்றார். சிவபெருமான் சொன்னது போலவே, ஆயிரக்கணக்கான நெல்லி மரங்களை நட்டு வளர்த்து வந்தார். அந்த மரங்களைப் பராமரிப்பதில் எந்த குறையும் வைப்பதில்லை.

எப்படி குறை வைக்க முடியும்?...

எப்படி குறை வைக்க முடியும்?...

எப்படி குறை வைக்க முடியும்?... அது சிவபெருமானின் ஆணை அல்லவா? மிக சிறப்பாக எல்லா மரங்களும் வளர்ந்து பூ பூக்கத் தொடங்கி, காய்க்கத் தொடங்கி விட்டது. அந்த மரங்களில் விளைந்த அத்தனை நெல்லிக் காய்களும் மிக இனிப்பாக இருந்தது. குபேரனின் வாழ்க்கையும் செல்வம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பி பெரும் செல்வந்தனான்.

MOST READ: ராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு?

செல்வம் குவிந்தது

செல்வம் குவிந்தது

எதிரிகள் சூழ்ச்சியின் மூலம் குபேரனிடம் இருந்து பறித்துக் கொண்டு போன அத்தனை செல்வங்களையும் மீண்டும் குபேரனிடமே கொண்டு வந்து கொடுத்தார்கள். இழந்த நாடுகள் அத்தனையும் திரும்பக் கிடைத்தது. குபேரனை விட பெரிய அரசர்களாக இருந்தவர்கள் எல்லாம் வழிய குபுரனிடம் வந்து கப்பம் கட்டிவிட்டுச் சென்றார்கள். தான் இழந்த செல்வங்களையும் விட பல புதிய செல்வங்களும் வந்து சேர்ந்தன.

குபேரனின் கேள்வி

குபேரனின் கேள்வி

அதனால் பெரும் குழப்பமடைந்த குபேரனுக்கு மனதில் சில கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. சிவபெருமான் வேறு மரங்கள் வளர்ந்ததும் வந்து பார்க்கும்படி சொல்லியிருந்தார். சரி. அவரைப் பார்த்துவிட்டு வருவோம் என்று கிளம்பிச் சென்றார்.

சிவனின் கேள்வி

சிவனின் கேள்வி

குபேரனை சிவபெருமான் பார்த்ததும் முதலில் கேட்ட கேள்வி என்ன நெல்லி மரங்கள் நன்றாக வளர்ந்ததா? இழந்த செல்வமெல்லாம் திரும்பக் கிடைத்ததா? என்பது தான். அதற்கு குபேரனும் நெல்லி மரம் வளர வளர செல்வமும் வளர்ந்தது. அதனுடைய காரணமே எனக்குப் புரியவில்லை என்றார்.

லட்சுமிதேவி அம்சம்

லட்சுமிதேவி அம்சம்

நீ நட்டு வைத்தது நெல்லி மரங்கள் அல்ல. அவை லட்சுமி தேவிகள். நீ சரியான முறையில் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றினாய். அதனால் நீ செய்த பாவங்களைத் தொலைத்து லட்சுமி தேவியினுடைய அருளைப் பெற்றுவிட்டாய் என்று சிவபெருமான் நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதையைச் சொன்னார்.

MOST READ: 13 வயசுல 4 இன்ச் அளவு இருந்தா நார்மலா? பிறப்புறுப்பின் சரியான அளவை தெரிந்து கொள்வது எப்படி?

இந்திர அமுதம்

இந்திர அமுதம்

தேவலோகத்தில் இருந்து இந்திரன் அமுதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, அதில் ஒரு துளி இந்த பூலோகத்தில் விழுந்து விட்டதாம். அதிலிருந்து முளைத்தது தான் நெல்லிக்காய் மரமாம். அதனால் தான் நெல்லிக்காய் மரத்தை தெய்வீகத் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. அதனால் தான் லட்சுமி சொரூபமான நெல்லிக்காய் மரத்தை உங்கள் வீடுகளில் நட்டு லட்சுமி கடாட்சத்தைப் பெறுங்கள். இப்போது தெரிகிறதா குபேரனின் அருளும் செல்வமும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Kubera Wealth A Boon By Lord Shiva?

According to Purana, Kubera was a Yaksha. He had a ugly and stout body, so he was always ignored by people and because of this, he was ever unhappy. He wanted to have name, fame and recognition. So, Kubera started a rigorous penance for Shiva.
Story first published: Wednesday, June 19, 2019, 17:01 [IST]
Desktop Bottom Promotion