For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ம ரௌடி பேபி அறந்தாங்கி நிஷா பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள் இதோ...

By Mahi Bala
|

விஷய் டீவியோட நயன்தாரா என்று செல்லமாகவும் கிண்டலாகவும் அழைக்கப்படுகிற நம்ம அறந்தாங்கி நிஷா விஜய் டீவிக்குள் ஒரு ரௌடி பேபியாகவே வலம் வந்து கொண்டிருந்தார்.

கருப்பாக, குண்டா இருந்தாலும் கூட அவரைப் பார்த்தாலோ அவருடைய காமெடி என்ற சேட்டைகளைப் பார்த்தாலே நம்முடைய மனதுக்குள் இருக்கிற குழப்பங்களும் கவலைகளும் மறந்து போகும். அப்படிப்பட்டவர் நம்முடைய தனுஷின் மாரி 2 படத்தில் நிஜமாகவே ரெண்டாவது ரௌடி பேபியாக அட்டகாசம் செய்து கொண்டு இருக்கிற அறந்தாங்கி நிஷா பற்றியும் அவர் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் பற்றியும் பற்றிய ஒரு சுவாரஸ்ய தொகுப்பு தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெறும் 32 தான். நம்புங்க...

வெறும் 32 தான். நம்புங்க...

நிஷா பார்ப்பதற்கு கொஞ்சம் பருத்த உடலாகவும் நல்ல மை கருப்பாகவும் இருப்பதால் அவருக்கு நாற்பது வயதைக் கடந்திருக்கும் என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒன்று தெரியுமா? இப்ப தான் அவருக்கு 31 வயது முடிந்து 32 வயதுதான் ஆகிறதாம். இதெல்லாம் நம்பற மாதியா இருக்கு? ஆனா அதுதாங்க உண்மை. அவர் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி தான் பிறந்திருக்கிறார்.

MOST READ: விந்து கொஞ்சமா வர்றதுக்கு காரணம் என்ன தெரியுமா? நீங்க பண்ற இந்த ஒரே தப்புதான்...

டிகிரி ஹோல்டர்

டிகிரி ஹோல்டர்

அவருடைய கள்ளம் கபடமில்லாத பேச்சும் செயல்பாடுகளும் ஏதோ பள்ளியிலேயே படிப்பை கைவிட்டு விட்ட, கிராமத்து பெண் போன்று தான் தோற்றமளிக்கிறார். அதனால் அவரை லேசுப்பட்டவர் என்று நினைக்காதீர்கள். அவர் ஒரு டிகிரி ஹோல்டர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாங்க. புதுக்கோட்டையில இருக்கிற ஜே.ஜே. ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் 2008 - 2011 பேட்ஜ்ல அம்மணி டிகிரி முடிச்சிருக்காங்க.

அவருக்கு வாய்த்த அடிமை

அவருக்கு வாய்த்த அடிமை

Image Courtesy

நமக்கே நன்றாகத் தெரியும் நம்ம நிஷாவோட வாயைப் பத்தி. அது என்ன வாயா? இல்ல காவாயான்னு கேட்குற அளவுக்கு பேசும். அப்ப அத கல்யாணம் பண்ணவரு அந்த அம்மாவுக்கு வாய்ச்ச அடிமைன்னு தானே சொல்லணும். ஆமாங்க. நிஷா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே ரியாஸ் அலி என்பவருடன் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 10 நாள் திருமணம் முடித்து வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அவரே நிஷாவின் எல்லா செயல்களுக்கும் ஊக்கம் கொடுத்து உடன் நிற்கிறார். ரியாஸ் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகப் பணியாளர்.

பேஸ்புக் ஐடி

பேஸ்புக் ஐடி

நம்ம நிஷா தன்னோட பேஸ்புக் ஐடில என்னென்ன வெச்சிருக்காங்க தெரியுமா? அறந்தாங்கி நிஷாங்கிறது தான் யூசர் ஐடி. ஆனா அதுக்கு பக்கத்துல பிராக்கட்ல இருக்கிற விஷயம் தான் மேட்டரே. பேருக்கு பக்கத்துல ஒரு பிராக்கெட்ல ஹன்சிகான்னு வெச்சிருக்காங்க. ஒரு வேளை கருப்பு ஹன்சிகானு நெனப்பு போல.

MOST READ: மாரடைப்பு வர்றதுலயும் ஆண் - பெண் வித்தியாசம் இருக்காம்... எப்படி வரும் என்ன அறிகுறிகள்னு தெரிஞ்சிக்க

பட்டிமன்ற பேச்சாளர்

பட்டிமன்ற பேச்சாளர்

Image Courtesy

விஷய் டீவியில் காமெடி ஷோக்களில் பங்கேற்பதற்கு முன்னதாக, ஆரம்ப காலங்களில் பட்டி மன்றங்களில் நகைச்சுவை பேச்சாளராக பங்குபெற்று மைக்கை கடித்து தின்று கொண்டிருந்தார்.

விஜய் ஷ்டார்

விஜய் ஷ்டார்

Image Courtesy

விஜய் டீவியில் கலக்கப்போவது யாரு சீசன் 5 இல் கலந்து கொண்ட இவர் தன்னுடைய முழு திறமையையும் காட்டி ரன்னர் அப்பாக வந்தார். அதைத் தொடர்ந்து சிரிச்சா போச்சு புான்ற ஏராளமான விஜய் டீவி ஷோக்களிலும் அவ்வப்போது சூப்பர் சிங்கரிலும் தலைகாட்டி வந்த இவர் சமீபத்தில் விஷய் டீவியில் தொடங்கப்பட்ட விஜய் ஸ்டார்கள் தங்கள் துணையுடன் சேர்ந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து போட்டியாளராகக் களம் இறங்குகிறார்.

நடித்த குறும்படம்

நடித்த குறும்படம்

டீவியில் நகைச்சுவை நடிகையாக மட்டுமே அறந்தாங்கி நிஷாவை நமக்குத் தெரியும். ஆனால் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? முக்கியமான நாயகியாக நம்ம நிஷா கரீம் என்றும் குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார். அதில் முக்கிய காதாபாத்திரமாகவே இவர் தான் இருக்கிறார். இவரைச் சுற்றித் தான் அந்த கதை நகர்கிறது.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

என்னப்பா புதுசா ஒரு குண்ட தூக்கிப் போடறீங்கன்னு நெனக்கிறீங்களா? பதட்டப்படாதீங்க. நீங்க பயப்படற மாதிரிலாம் எதுவும் இல்ல. இவர் வெறும் குறும்படத் தயாரிப்பாளர் தான். ஆமாங்க. ஆரம்பத்திலிருந்து தன்னுடைய எல்லா செயல்களுக்கும் தனக்கு தோள் கொடுக்கும் அவருடைய கணவருக்கு தானும் தன்னுடைய மனைவியைப் பார்த்துப் பார்த்து நடிக்க வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டதாம். அதனால் அவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக தன்னுடைய கணவரை வைத்து குறும்படம் ஒன்றைத் தயாரிக்கிறாராம்.

பின்னணி பாடகி

பின்னணி பாடகி

நம்முடைய நிஷா பின்னணிப் பாடகி என்றால் நம்புங்கப்பா... ஆமாங்க. நீங்க கூட அந்த பாட்டை கேட்டிருப்பீங்க. கஜா புயல் பாதிப்புல வட மாவட்டங்களை ஒரு புரட்டு புரட்டிப் போட்ட போது, பேஸ்புக் வழியாக நிஷா ஓடி ஓடி உதவி தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்ததை நாம் எல்லோருமே பேஸ்புக் வழியாகப் பார்த்தோம். அதேபோல் கஜா புலலைப் பற்றியும் அதனால் மக்கள் அடைந்த அத்தனை பிரச்சினைகளையும் பற்றி நம்முடைய உயிர் உருக்கும் அளவுக்கு ஒரு ஆல்பம் பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த பாதிக்கப்பட்ட மண்ணைச் சேர்ந்தவர் என்பதால் இன்னும் கூடுதல் ஆழம் அந்த பாடலில் இருக்கிறது.

MOST READ: நம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க

ரௌடி பேபி

ரௌடி பேபி

தொடர்ந்து டீவி ஷோக்களில் இவரைப் பார்த்து வந்த தனுஷ் அவரை அழைத்து மாரி2 வில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறார். தனுஷ் மட்டுமல்ல அவருடைய வீட்டிலும் எல்லோரும் நிஷாவின் ஃபேன்கள் என்றால் பாருங்களேன். அப்படி மாரி 2 வில் வாய்ப்பு கிடைத்ததும் தனக்காக இடத்தைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் ரௌடி பேபியின் தோழியாகவும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். இதற்கு முன்பாக சமுத்திரகனி நடித்த ஆண்தேவதை படத்தில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life வாழ்க்கை
English summary

Intresting Life Story About Rowdy Baby Aranthagi Nisha

Aranthangi Nisha is an Indian Actress and a Television star who become famous for her comedy skills. She had participated in Kalakka Povathu Yaaru Season 5 and bagged the Runner-up title.> Aranthangi Nisha was born in Aranthangi, Pudhukottai in TamilNadu. She did many stage performance from 2010 onwards.she become famous only after participating in vijay TV.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more