For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க நியூமராலஜி எண் ரெண்டா? அப்போ இதெல்லாம் உங்க வாழ்க்கையில நடக்கப் போகுது...

|

தனிமை மற்றும் பிரிவை முடிவிற்கு கொண்டு வரும் ஒரு எண்ணாக அறியப்படுவது எண் 2. இந்த எண்ணைப் பிறப்பு எண்ணாகக் கொண்டவர்கள் தனது சொந்த விருப்பங்களுக்கு முன்னுரிமைக் கொடுப்பார்கள்.

Numerology

இந்த விதத்தில் மற்றவர்களில் இருந்து இவர்கள் முற்றிலும் மாறுபடுவார்கள். இப்படி எண் 2 க்குரிய தனிப்பட்ட குணாதிசயங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண் 2

எண் 2

எண்கணிதத்தில் நிபுணர்கள் கூற்றுப்படி, இரண்டாம் எண்ணைப் பற்றி குறிப்பிட பல்வேறு தகவல்கள் உள்ளன. ஒரு தனி நபரின் குணாதிசயங்களைக் குறிப்பிடும் சில குறிப்பிட்ட விஷயங்கள் எண் இரண்டில் உள்ளது. ஒரு கூட்டத்தில் தனித்து நிற்க வைக்கும் சில குணநலன்கள் இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு உண்டு. இவர்கள் செல்லும் இடமெல்லாம் சமாதானமும் சந்தோஷமும் நிறைந்து இருக்கும்..

இரண்டாம் எண்ணுக்குரிய சிறப்பு பண்புகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

MOST READ: எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்?

பிறப்பு எண்ணை கணக்கிடுவது எப்படி?

பிறப்பு எண்ணை கணக்கிடுவது எப்படி?

எண்கணிதப்படி உங்கள் பிறப்பு எண்ணைப் பற்றி சரியாக கணக்கிடுவது எப்படி என்பதை நாம் இப்போது காணலாம். உங்கள் பிறந்த நாளை ஒற்றை இலக்க எண்ணாகக் கணக்கிடுவதன் மூலம் உங்கள் பிறப்பு எண்ணை அறிந்து கொள்ள முடியும். உங்களின் பிறந்த நாள் முதன்மை பிறப்பு பாதையாகவும், உங்கள் பிறந்த மாதம் மற்றும் வருடன் இரண்டாம் பிறப்பு பாதையாகவும் குறிப்பிடப்படுகிறது. உதாரணதிற்கு, உங்கள் பிறந்த நாள் 16, அக்டோபர் 1986 என்றால் உங்கள் பிறப்பு எண் 5 ஆகும்.

16-10-1986= 1+6+1+0+1+9+8+6=32, 3+2=5

சமாதானத்தை பரப்புபவர்

சமாதானத்தை பரப்புபவர்

எந்த இடத்திற்கு சென்றாலும் சமாதானத்தை பரப்புபவராக இருப்பார்கள்

இரண்டாம் எண்ணைப் பிறப்பு எண்ணாகக் கொண்டவர்கள் வலிமையான குணம் கொண்டவர்கள். மனித குலத்திற்கு சமாதானத்தை வழங்கும் நபராக இருப்பார்கள். எதையும் காது கொடுத்து கேட்கும் நபராக விளங்குவதால், பல தகவல்களை சேகரிக்கும் திறன் உள்ளவராக இருப்பார்கள். சின்னச் சின்ன விஷயங்களையும் கவனத்தில் வைத்துக் கொள்வதால், வாழ்க்கையில் எந்த ஒரு சூழலையும் உங்கள் அறிவால் வெற்றி கொள்ளும் திறன் உங்களுக்கு இயல்பாகவே அமைத்திருக்கும்.

கருணை மிக்கவர்கள்

கருணை மிக்கவர்கள்

இரண்டாம் எண் உங்களுடைய பிறப்பு எண்ணாக இருந்தால், நீங்கள் மிகவும் கருணை மிக்கவர்கள். சிறந்த ராஜதந்திரம் மிக்கவர்கள். சோர்வடையாத சேவை, வழிகாட்டுதல் மற்றும் அரவணைப்பை மற்றவர்களுக்கு வழங்கும் தன்மைக் கொண்டவர்கள். எல்லா நேரத்திலும் சமாதானத்தை விரும்புகிறவர்கள். ஆனால் பல நேரங்களில் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியாது.

MOST READ: அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்?

உணர்ச்சி மிக்கவர்கள்

உணர்ச்சி மிக்கவர்கள்

இரண்டாம் எண் நபர்கள், உணர்ச்சி மிக்கவர்கள். தனது துணைக்கு விசுவாசமாக இருப்பார்கள். நளினம் மிக்கவர்கள். சில நேரங்களில் சற்று குரலை உயர்த்தும் நிலை உங்களுக்கு ஏற்படும், ஆனால் அதனால் சில சிக்கல்களும் உண்டாகும்.

உறவுகளில் விசுவாசத்தை எதிர்பார்ப்பீர்கள்

உறவுகளில் விசுவாசத்தை எதிர்பார்ப்பீர்கள்

தற்காலிக உறவுகளுக்கு எந்த ஒரு மதிப்பும் கொடுக்க விரும்பாதவர்கள் இரண்டாம் எண்ணைப் பிறப்பு எண்ணாகக் கொண்டவர்கள். நம்பிக்கை மற்றும் பொறுப்பு கொண்ட நீடித்து நிலைக்கும் உறவை மட்டுமே விரும்புவார்கள். உண்மையான அன்பை அதிகம் நம்பும் தன்மைக் கொண்டவர்கள் இரண்டாம் எண்ணுக்குரியவர்கள்.

உங்கள் பலவீனம்

உங்கள் பலவீனம்

இரண்டாம் எண் நபர் அதிக உணர்ச்சி மிக்கவர்கள். மென்மையான ஈகோ உள்ளவர்கள் என்பதால், விரைவில் காயப்படுவார்கள். சில நேரங்களில் கோழையாகவும் இருப்பார்கள்.

MOST READ: எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க? நீங்களும் அப்படிதானா?

இரண்டாம் எண்ணுக்குரிய அதிர்ஷ்டக் கூறுகள்

இரண்டாம் எண்ணுக்குரிய அதிர்ஷ்டக் கூறுகள்

அதிர்ஷ்ட தனிமம் - தண்ணீர்

அதிர்ஷ்ட தினம் - திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

அதிர்ஷ்டக் கல் - முத்து

அதிர்ஷ்ட எண் - 2, 3, 7, 8, மற்றும் 29

அதிர்ஷ்ட மாதங்கள் - பிப்ரவரி, ஏப்ரல், ஆகஸ்ட், நவம்பர்

அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி

அதிர்ஷ்ட எழுத்துக்கள் - B, D, K, M, O, R, T, மற்றும் Z

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Importance Of Number Two In Numerology

The number two brings an end to separation and loneliness. Individuals who are born under number two have their own priorities, and this is something that differs from the rest of the numbers. Here in this article, we are revealing you the details about the number 2 and its significance.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more