Just In
- 10 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 13 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 13 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 17 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிவபெருமானை வழிபடும் மந்திரங்களிலேயே இந்த மகா மிர்துஞ்சிய மந்திரம்தான் சக்தி வாய்ந்ததாம் தெரியுமா?
வேதங்களின் இதயமாக கருதப்படுவது மகா மிர்துஞ்சிய மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை பற்றி அனைத்து வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. இந்த மந்திரம் சிவபெருமானால் உருவாக்கப்பட்ட மந்திரம் ஆகும். இது சிவபெருமானால் சுக்ராச்சாரியாருக்கு போதிக்கப்பட்ட மந்திரம் ஆகும். சுக்ராச்சாரியார் அசுரர்களின் குருவாக இருந்தார்.
மகா மிர்துஞ்சிய மந்திரம் மரணமில்லா வாழ்வை வழங்கக்கூடியதாகும். மேலும் இந்த மந்திரத்தை வசிஷ்டர் தன்னுடைய தவத்தின் மூலம் சிவபெருமானிடம் இருந்து பெற்றார். இந்த மந்திரத்தைக் கூறுவது சிவபெருமானின் அருளை பெறுவதற்கு சிறந்த வழியாகும். இந்த பதிவில் மகா மிர்துஞ்சிய மந்திரம் கூறுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மகா மிர்துஞ்சிய மந்திரம்
" ஓம் த்ரியம்பகம் யஜமஹே சுகந்திம் புஷ்டி-வர்தனம் ஊர்வருகாமிவா பந்தானன் மிருத்யோர் முகியா மம்ரிதத் " சிவபெருமான் போதித்த மரணமில்லா வாழ்வை வழங்கும் மந்திரம் இதுதான்.

மகா மிர்துஞ்சியவின் அர்த்தம்
மூன்று உலகங்களையும் ஆளும் மூன்று கண்ணுடைய அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஈசனே, பழுத்த வெள்ளரிக்காய் அதன் கொடியிலிருந்து விடுவிக்கப்படுவது போல நானும் மரணத்திலிருந்து அழியாத நிலைக்கு செல்கிறேன். இதுதான் மகா மிர்துஞ்சிய மந்திரத்தின் அர்த்தமாகும். இதன் பலன்கள் என்னென்னெ என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

மனஅழுத்தம் மற்றும் பயத்திலிருந்து காப்பாற்ற
மகா மிருதுஞ்சய மந்திரம் அற்புதமான சக்திகளைக் கொண்ட மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். உங்கள் மனதில் பயமும், மனஅழுத்தமும் அதிகமாக இருந்தால் அதனை விரட்ட இந்த மந்திரத்தைக் கூறலாம். இந்த மந்திரத்தைக் கூற சரியான நேரம் காலை 4 முதல் 6 மணிவரை ஆகும்.

எப்படிக் கூற வேண்டும்?
அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு சிவபெருமானின் சிலை அல்லது உருவப்படத்திற்கு முன் அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை கூறவும். இந்த மந்திரத்தை 40 நாட்கள் தொடர்ந்து கூறுவது உங்களின் மனதில் இருக்கும் பயத்தை விரட்டுவதுடன் உங்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெற
மகா மிருதுஞ்சய மந்திரம் மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்க உதவும். இது தேர்வு பற்றி அவர்கள் மனதில் இருக்கும் பயத்தைப் போக்கி அவர்களை தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ள உதவும். மேலும் இது அவர்களின் கவனம், ஆர்வம் போன்றவற்றை அதிகரிக்கும்.

எப்படிக் கூற வேண்டும்?
காலையில் சீக்கிரம் எழுந்து சிவபெருமானின் சிலைக்கு முன்னால் அமர்ந்து இந்த மந்திரத்தை 21 முறை கூறவும். அதன்பின் நீங்கள் கடினமென நினைக்கும் பாடங்களை படியுங்கள். அவ்வாறு படிக்கும் போது அதிக தெளிவாக உணருவார்கள். தேர்வுக்குச் செல்லும் முன் இந்த மந்திரத்தை கூறிவிட்டு செல்லவும்.

கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட
வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமானதாகும். கடன் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அமைதியைப் பறித்து துன்பத்தில் ஆழ்த்தக்கூடும். தூக்கமின்மை, வாழ்க்கையில் ஆர்வமின்மை, தற்கொலை எண்ணம் போன்றவற்றை கடன் பிரச்சினை தூண்டும். இந்த பிரச்சினையை மகா மிர்துஞ்சிய மந்திரம்
போக்கும்.

எப்படிக் கூற வேண்டும்?
கடன்கள் உங்களை முடக்கிவிடக்கூடும். மகா மிர்துஞ்சிய மந்திரத்தை தினமும் காலையிலும், மாலையிலும் 108 முறை கூறவும். இது உங்கள் வாழ்வின் நிதி நிலையில் பல அற்புத மாற்றங்களை உண்டாக்கும். இதன்மூலம் உங்களின் வருமானமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

தொழிலில் முன்னேற
ஒவ்வொருவரின் தொழில் வாழ்க்கையும் தனித்துவமானது. பெரும்பாலும் உங்கள் அலுவலகத்தில் நீங்கள் போட்டியை உணரலாம். இந்த சூழ்நிலையில் இந்த மந்திரம் உங்களின் பதவி உயர்வு மற்றும் செல்வத்தை வழங்கும். இது உங்களின் வாழ்க்கையில் இருக்கும் தடைகளை நீக்கி உங்கள் இலட்சியத்தை அடைய உதவும்.

எப்படிக் கூற வேண்டும்?
இந்த மந்திரத்தை காலையில் 54 முறையும், மாலையில் 54 முறையும் கூறவும். அலுவலகத்தில் வேலையைத் தொடங்கும் முன் இந்த மந்திரத்தை மூன்று முறை கூறிவிட்டு அதற்கு பின் உங்கள் வேலையை தொடங்கவும். இதன்மூலம் உங்கள் தொழில்போட்டிகள் விரைவில் காணாமல் போவதை காணலாம்.