For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிக்க, இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து வணங்கினால் போதும்..!

|

எந்த வேலையை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் நமக்கு பிடித்தமான கடவுள்களை வேண்டி கொள்வது வழக்கம். சிலருக்கு விநாயகர் தான் விருப்பமான கடவுளாக இருப்பார். சிலருக்கு சிவன் என்றால் மிகவும் பிடிக்கும். சிலருக்கு பராசக்தி தான் தெய்வமாக இருப்பார். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுள்கள் விருப்பமானதாக இருப்பார்கள்.

சனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிக்க, இந்த ஒரு பொருளை மட்டும் வீட்டில் வைத்திருங்கள்!

எந்த கடவுளாக இருந்தாலும் அவரை வழிபடும் போது அவருக்கு பிடித்த சில உணவுகளை வைத்தே நாம் வழிபடுவோம். எல்லா வகை உணவுகளும் கடவுள்களுக்கு பிடிக்காது. சனி பகவான் முதல் துர்க்கை வரை பலவித உணவு விருப்பங்கள் இருக்கும். இதை நாம் "நெய்வேதியம்" என்போம்.

இறைவனுக்காக பிடித்த உணவுகளை படைக்கும் போது நமது எண்ணங்கள் முழுமையாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதே போன்று சனியின் பிடியில் இருந்து தப்பிக்க அவருக்கு பிடித்தமான உணவு படைத்தால் சிறந்தது. இந்த பதிவில் எந்த கடவுள்களுக்கு எந்தெந்த உணவுகள் பிடிக்கும் என்பதை முழுமையாக தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறை வழிபாடு!

இறை வழிபாடு!

இறை வழிபாடு என்பது காலங்கள் மாற மாற வேறுபட்டு வருகிறது. முதலில் இயற்கையை வழிபாட்டு வந்த மனித இனம் காலம் செல்ல செல்ல அவற்றை கடவுளாக மாற்ற தொடங்கினான்.

அவ்வாறு வழிபடும் போது அவர்களுக்கு பிடித்தமான உணவு பொருட்களை வைத்து படைக்கும் பழக்கத்தையும் கொண்டு வந்தான். இது நாம் கடவுள்கள் மீது வைத்துள்ள மட்டற்ற அன்பை குறிக்கிறது.

விஷ்ணு

விஷ்ணு

காக்கும் கடவுளாக உள்ள விஷ்ணுவை வழிபடும் போது மஞ்சள் நிறத்தில் உள்ள உணவு பொருட்களை நெய்வேதியமாக படைப்பது சிறந்தது.

குறிப்பாக லட்டு, வெல்லம் போன்ற உணவுகளை படைத்தால் விஷ்ணு பகவான் மிகவும் சந்தோஷப்படுவார். இவை அனைத்திற்கும் மேல் வெண்ணெய் தான் அவரின் பிரதான உணவு பொருள் என புராணங்கள் கூறுகின்றன.

அனுமன்

அனுமன்

உங்கள் வாழ்வில் வரும் அனைத்து தடைகளையும் உடைத்தெறிய அனுமனுக்கு இந்த ஒரே ஒரு பொருளை நெய்வேதியமாக படைத்தால் போதும். அதுவும் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள துவரம்பருப்பை நீரில் ஊற வைத்து அனுமனுக்கு படைத்தால் எப்போதுமே நல்லதே நடக்கும்.

லட்சுமி

லட்சுமி

வீட்டில் பண மழை பொழிய லக்ஷ்மியை வணங்கினாலே போதும். செல்வத்தின் அரசிக்கு அரிசியால் செய்த பாயசம் என்றால் மிகவும் பிடிக்கும்.

மிக பிரம்மாண்ட உணவுகளை காட்டிலும் வெள்ளை நிற அரிசியை வைத்து செய்ய கூடிய பாயசம் தான் லக்ஷ்மியின் விருப்ப உணவாம்.

சிவன்

சிவன்

அழிக்கும் கடவுளாக பார்க்கப்படும் சிவனுக்கு பால் தான் மிகவும் விருப்பமான உணவு பொருளாம். குறிப்பாக பல் பொருட்கள் அனைத்துமே சிவனுக்கு நெய்வேதியமாக படைக்கலாம். சிலர் பாங்கு, தயிர் போன்றவற்றை சிவ ராத்திரி நேரங்களில் சிவனுக்கு படைப்பதுண்டு.

MOST READ: ஒரே 1 ஸ்பூன் இந்த எண்ணெய்யை வைச்சே இளமையாக மாறலாம்? எப்படி தெரியுமா?

துர்க்கை

துர்க்கை

துர்க்கை அம்மனுக்கு பிடித்தமான உணவு என்றால் அது பாயசம் மற்றும் காய்கறிகள் பல சேர்த்த கிச்சடி தான். மற்ற உணவுகளை காட்டிலும் இதை தான் துர்கை அம்மனுக்கு மிகவும் பிடிக்குமாம். மேலும் பலவித காய்கறிகள் கொண்ட உணவுகள் அனைத்துமே துர்க்கைக்கு படையலாக தரலாம்.

சனி, ராகு, கேது

சனி, ராகு, கேது

பலரின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போடும் வலிமை சனி, ராகு, கேது ஆகிய மூவருக்கும் இருக்கிறது. இவர்கள் மூவருக்கும் பிடித்த நிறம் கருப்பு தான். ஆகையால் இவர்களுக்கு கருப்பு நிற உணவு பொருட்களை படைப்பது சிறந்தது. முக்கியமாக கருப்பு எள்ளு, கடுகு போன்றவை இவர்களுக்கு பிடித்தமான உணவு பொருளாம்.

சரஸ்வதி

சரஸ்வதி

கல்விக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதியை வணங்கும் போது வெள்ளை நிற உணவு பொருட்களை படையலாக தரலாம். குறிப்பாக வெண்பொங்கல், தயிர், தட்டை அரிசி ஆகியவற்றை நெய்வேதியமாக கொடுக்கலாம்.

MOST READ:பச்சை நிறத்துக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருக்குற இந்த 6 இரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா?

விநாயகர்

விநாயகர்

விநாயகருக்கு பிடித்தமான உணவு எது வென்று கேட்டால் குழந்தைகளுக்கு கூட தெரியும். விநாயகருக்கு மிகவும் பிடித்தமான உணவு கொழுக்கட்டை தான். அத்துடன் லட்டு போன்ற இனிப்பு வகையும் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hindu God's Favourite foods As per Mythology

Here we listed out Hindu God's favorite foods as per mythology.
Desktop Bottom Promotion