For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனுநீதியின் படி கணவன்-மனைவி உறவில் அவர்கள் மீறும் இந்த சத்தியங்கள் அவர்கள் வாழ்க்கையை சிதைக்கும்...!

விஷ்ணு மனுவிற்கு போதித்த தர்மங்களை அடிப்படையாக கொண்டு மனு அவர்கள் மனுநீதி என்னும் தர்மசாஸ்திரத்தை இயற்றினார்.

|

இந்து மதத்தில் கூறியுள்ளபடி விஷ்ணுவின் மத்சய அவதாரத்தில் உலகத்தின் ஆரம்பகால மனிதர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ஏனெனில் ஆரம்பகால மனிதர்களுக்கு மதம், மனிதநேயம், தர்மம் பற்றிய எந்த ஞானமும் இல்லாமல் இருந்தனர். இதுதான் மனிதகுலத்தின் அழிவிற்கு வழிவகுத்தது. இதிலிருந்து பிழைத்தது மனு மற்றும் அவரது மனைவிதான்.

Eternal laws for husband and wife that must not be broken

மத்சய அவதாரத்தில் விஷ்ணு பிரம்மாவின் பூமியை சேர்ந்த மகனான மனுவிடம் உலகம் அழியப்போவதை பற்றி கூறினார். மனுவிடம் உயிரினத்தின் ஒரு ஆண் மற்றும் பெண்ணை மட்டும் பாதுகாக்கவும் அவர்கள் வாழ்வதற்கு தேவையான பொருட்களை தயாரித்து வைத்துக்கொள்ளும்படி கூறினார். அதன்பின் மனிதகுலத்தை பாதுகாக்க தர்மத்தைப் பற்றியும், கணவன், மனைவிக்கிடையே கடைபிடிக்க வேண்டிய சத்தியங்கள் பற்றியும் கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனுநீதி

மனுநீதி

விஷ்ணு மனுவிற்கு போதித்த தர்மங்களை அடிப்படையாக கொண்டு மனு அவர்கள் மனுநீதி என்னும் தர்மசாஸ்திரத்தை இயற்றினார். மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து தர்மங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது கணவன் மற்றும் மனைவி எப்படி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதாகும். கணவன்-மனைவி மீறக்கூடாத சத்தியங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

முதல் விதி

முதல் விதி

இரவு அல்லது பகல் எந்த தருணமாக இருந்தாலும் மனைவியை பாதுகாப்பது கணவனின் கடமையாகும். அதேசமயம் மனைவியின் தனித்துவத்தையும் மதிக்க வேண்டும். அதேபோல மனைவி வீட்டின் மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் மனைவி பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டாம் விதி

இரண்டாம் விதி

கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட நித்திய பிணைப்பை மதிக்க வேண்டும். எனவே குடும்பத்திற்குள் நடக்கும் விஷயங்களை ஒருபோதும் வெளியே கொண்டு செல்லக்கூடாது. கணவன், மனைவி இருவரும் தங்கள் துணையின் குடும்பத்தை மதிக்க வேண்டும்.

MOST READ: இந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...!

மூன்றாம் விதி

மூன்றாம் விதி

மனைவி எப்பொழுதும் தீயஎண்ணங்களை வளர்த்து கொள்ளக்கூடாது. ஏனெனில் மனைவியின் தீயகுணங்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சியை பாதிக்கும்.

நான்காம் விதி

நான்காம் விதி

சாதி, மதம் மற்றும் தோல் நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஒரு கணவன் தனது மனைவியை வெளிப்புற சிரமங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். மனைவி அவர்களுக்குள் இருக்கும் நித்திய பிணைப்பை பாதுகாக்க வேண்டும்.

ஐந்தாம் விதி

ஐந்தாம் விதி

மனைவி தன் கணவரின் குடும்பத்தையும், கணவரையும் நேசியாக் வேண்டும். குழந்தைகளை பெற்றுடுத்து அவர்களை சமூகத்தில் பொறுப்பானவர்களாக இருக்கும்படி வளர்க்க வேண்டும். ஆண் குழந்தை பிறந்தால் அவனை நேசித்து திருமணம் செய்து வைத்து மருமகளிடம் தனது குடும்ப பொறுப்பை ஒப்படைக்க வேண்டும், அதுவே பெண் குழந்தையாக இருந்தால் புகுந்த வீட்டை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும்.

ஆறாம் விதி

ஆறாம் விதி

எந்த சூழ்நிலையிலும் கணவன் தான் மனைவியை அவரது விருப்பமில்லாமல் பாதுகாக்கவோ அல்லது கட்டாயப்படுத்தவோக் கூடாது. மனைவி எந்த சூழ்நிலையிலும் கணவனின் அன்பை கட்டாயப்படுத்தி பெற முயலக்கூடாது.

MOST READ: சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்களின் திருமண வாழ்க்கையில் ராஜயோகம் இருக்குமாம்

ஏழாம் விதி

ஏழாம் விதி

பெண் என்பவள் கடவுளின் அவதாரம் ஆவாள். எனவே கணவன் தன்னுடைய செல்வத்தை பாதுகாப்பதற்கும், செலவழிப்பதற்கும், சத்தான உணவை உண்பதற்கும், வீட்டை நிர்வகிப்பதற்கும் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைக்க வேண்டும். குடும்பத்தைப் பற்றிய எந்த முடிவாக இருந்தாலும் மனைவியின் அனுமதியை நிச்சயம் பெற வேண்டும்.

எட்டாம் விதி

எட்டாம் விதி

மனைவியின் சுதந்திரம் கணவன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் பாதிப்பிற்க்கு உள்ளாகிறது. தனது சுயமரியாதை தொலையும்போது தனது உறவுகளை தவிர்த்து தனது சுயத்தை மனைவி தேடவேண்டும்.

ஒன்பதாம் விதி

ஒன்பதாம் விதி

கணவன் எப்பொழுதும் மற்றவரை பற்றிக் கூறும் மனைவியின் எச்சரிக்கைகளையோ அல்லது உள்ளுணர்வுகளையோ புறக்கணிக்கக்கூடாது. அது அவர்களின் உறவினர்களாக இருந்தாலும் சரி, தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி.

MOST READ: இந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா?

பத்தாம் விதி

பத்தாம் விதி

ஒரு மனைவி தன் கணவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், தன்னுடைய குடும்பத்திற்கு எதிராக ஒருபோதும் சதிகாரராக மாறக்கூடாது. இது அவர்களுக்கே பிரச்சினைகளை ஏற்படுத்தும். கணவர் திருமண பாதையில் இருந்து விலகிச் செல்வதை மனைவி உணர்ந்தால் அவர் உடனடியாக தனது திருமண வாழ்வை பாதுகாக்க வேண்டும். கணவனுக்கும் இது பொருந்தும்.

பதினொன்றாம் விதி

பதினொன்றாம் விதி

கணவன் ஒருபோதும் மனைவி தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கக்கூடாது. தனது மனைவியின் மரியாதையை மதிக்க வேண்டும், மற்ற பெண்களையும் மதிக்க வேண்டும். இல்லையென்றால் இது அவர்களின் குடும்பத்திற்கு அவமானங்களை உண்டாக்கும். மேலும் அவர்களின் மறுவாழ்க்கையிலும் சாபத்தை உண்டாக்கும்.

பன்னிரெண்டாம் விதி

பன்னிரெண்டாம் விதி

ஒரு மனைவி தன் கணவனைத் தவிர வேறொரு ஆணின் சிந்தனையை ஒருபோதும் தன் மனதில் கொண்டு வரக்கூடாது. இது அவர்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் அமைதியை கெடுக்கும்.

MOST READ: கர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா?

பதிமூன்றாம் விதி

பதிமூன்றாம் விதி

கணவர் எப்பொழுதும் தீயவர்களின் சகவாசத்தை வைத்து கொள்ளக்கூடாது. எப்போதும் போதையில் இருப்பது, சூதாட்டத்தில் ஈடுபடுவது, நீண்ட நாட்கள் பயணத்தில் இருப்பது போன்றவை கணவன்-மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eternal laws for husband and wife that must not be broken

According to Manusmriti these eternal laws for husband and wife that must not be broken.
Story first published: Thursday, July 18, 2019, 12:08 [IST]
Desktop Bottom Promotion