For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன்னை வளர்த்த முதலாளிக்காக வேலை செய்து சோறு போடும் நாய்... இதுதான்ப்பா விஸ்வாசம்...

தன்னை வளர்க்கும் ஓனருக்கே சோறு போட்டு வளர்க்கும் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

|

எறிந்த பந்தை எடுத்து வருவது, மளிகை சாமான் பையை தூக்கிக் கொண்டு வருவது, நீச்சல் தெரியாமல் தத்தளிக்கும் எஜமானை காப்பாற்ற தண்ணீருக்குள் குதிப்பது என்று நாய்கள் பற்பல உதவிகளை செய்யக்கூடியவை. மிகவும் அன்பாக இருக்கக்கூடிய செல்ல பிராணியான நாய், மனிதனுக்கு உற்ற நண்பனும் கூட.

பலருக்கு அவர்கள் வீட்டு நாயை 'உங்க நாய்' என்று சொன்னால்கூட கோபம் வந்துவிடும். 'டைசன்' என்று பெயரோடு கூற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தெரு கலைஞன்

தெரு கலைஞன்

யோர்கே லூயிஸ் ரூய்ஸ் என்ற இளைஞன், தெரு கலைஞன். தெருவில் வித்தை காட்டி பிழைப்பு நடத்துபவர். அவரை ரசிப்பதற்கென்று சிலர் இருந்தனர். ஆனாலும் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக யோர்கே, பிரேசிலுக்கு குடி பெயர்ந்தார்.

அங்கு ஃபோர்த்தலேசா என்ற பகுதியில் தெருக்களில் வித்தை காட்டுவதன் மூலம் பணமீட்டி வாழ்ந்து வருகிறார். நகரத்தின் பரபரப்பான ஃபெரைரா ஸ்குயர் என்ற பகுதியில் சிலைபோல நின்று மக்களை சந்தோஷப்படுத்துவது யோகே லூயிஸின் வழக்கம்.

MOST READ: நாளை சந்திர கிரகணம்... உலகம் முழுக்க சொல்லப்படும் கட்டுக்கதைகள் என்னென்ன?

ஜாஸ்பி

ஜாஸ்பி

யோர்கேயை போன்று எத்தனையோ தெரு கலைஞர்கள் அந்நகரத்தில் இருந்தாலும், அவனுக்கு அதிக பார்வையாளர்கள் உள்ளனர். ஏன் தெரியுமா? யோர்கேயுடன் அவனது நாய் ஜாஸ்பியும் சேர்ந்து சிலைபோல நிற்கும். யோர்கே செல்லுமிடமெல்லாம் அமைதியாக உடன் செல்லும் ஜாஸ்பி, யோர்கே கையை மடக்கிக் கொள்ள அதில் சிலைபோல உட்கார்ந்திருக்கும். நாயும் மனிதனும் சேர்ந்து சிலைபோல நிற்பதால் மற்ற கலைஞர்களை காட்டிலும் யோர்கேக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

MOST READ: சந்திர கிரகணத்தின் போது உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது ஏன்னு தெரியுமா?

டிவிட்டரில் வைரல்

டிவிட்டரில் வைரல்

ஃபோர்த்தலேசா நகரின் தெருக்களில் யோர்கேயும் ஜாஸ்பியும் பிரபலமானதால் நகரின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அவர்கள் இருவரையும் பார்க்க குவிந்து வருகின்றனர். யோர்கேயும் ஜாஸ்பியும் சிலை போல நிற்கும் வீடியோ காட்சி டிவிட்டரில் பகிரப்பட்டபோது, மூன்று வார காலத்திற்குள் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் அதைப் பார்த்துள்ளனர். 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 91 ஆயிரம் பேர் பின்னூட்டமிட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dog Helps His Owner Earn Money by Posing as Statue

The artist who performs on the streets of Fortaleza, in Brazil, grabbed netizens’ attention after his adorable partner, which is a pet dog, assists him when he does his realistic living statue routine. The dog loves to help his owner by playing a status through his act.
Story first published: Tuesday, July 16, 2019, 14:54 [IST]
Desktop Bottom Promotion