For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதுக்குள் இருந்து உயிருடன் பல்லியை வெளியே எடுத்த டாக்டர்... அப்புறம் என்ன ஆச்சுனு தெரியுமா?

|

சில நேரங்களில் கண்களில் தூசி விழுவதும், காதுகளில் சிறிய பூச்சி அல்லது எறும்பு அல்லது வண்டு போன்றவை நுழைவதும் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். கண்ணுக்குள் தூசி விழுந்தால் அதனை உடனடியாக நீர் விட்டு கழுவி எடுத்து விடலாம்.

Lizard

காதுக்குள் பூச்சி நுழைந்தால், கேட்கவே கொஞ்சம் பயமாக உள்ளதா? இன்னும் கொஞ்சம் கேளுங்கள். அந்தப் பூச்சி ஒரு பல்லியாக இருந்தால்,? அய்யய்யோ.. அலறி ஓட்டம் பிடிக்கத் தோன்றுகிறதா? இந்த முழு பதிவையும் படித்து உங்கள் உணர்வை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவர்

மருத்துவர்

தாய்லாந்தில் ஒரு மருத்துவர் ஒரு மருத்துவமனையில் தன்னுடைய முதல் நாள் வேலை அனுபவத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அந்த மருத்துவர் பெயர் வரண்யா. தன்னுடைய முதல் நாள் பணியில் இப்படி ஒரு அச்சுறுத்தும் சம்பவம் நிகழும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

MOST READ: அம்மா நீ அழகா இல்லனு சொன்னதுக்காக இந்த பொண்ணு என்ன காரியம் பண்ணியிருக்கா தெரியுமா?

காது வலி

காது வலி

தற்போது அவர் பதிவிட்ட பேஸ்புக் பதிவை நீக்கி இருந்தாலும், அந்தப் பதிவில் அவர் தன்னைக் காண வந்த நோயாளியுடனான தன்னுடைய அனுபவம் குறித்து பதிவிட்டிருந்தார். ஒரு நோயாளி தீவிர காது வலியுடன் தன் மருத்துவமனைக்கு வந்ததாக அவர் கூறியிருந்தார்.

உயிருடன் பல்லி

உயிருடன் பல்லி

வரண்யா ஒடோஸ்கோப் பயன்படுத்தி நோயாளியின் காதை பரிசோதனை செய்தார். அப்போது அவருடைய காதுக்குள் எதோ ஒன்று தவழ்ந்துக் கொண்டிருப்பதை வரண்யாவால் காண முடிந்தது. கூர்ந்து பரிசோதிக்கும்போது அது ஒரு பல்லி என்பதை அவர் கண்டறிந்தார். அதுவும் அந்தப் பல்லி உயிருடன் இருந்தது.

காதின் சிறிய ஓட்டை வழியாக இவ்வளவு பெரிய பல்லி எப்படி நுழைய முடியும் என்று அவருக்கு குழப்பமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

MOST READ: குழந்தைக்கு கூகுள் என பெயர் வைத்த பெற்றோர்... காரணத்த கேட்டா கொஞ்சம் ஷாக் ஆகிடுவீங்க...

 வெளியே எடுத்தார்

வெளியே எடுத்தார்

காதுக்குள் அன்டிபயோடிக் மருந்து விட்டு பல்லியை வெளியில் எடுத்து விடலாம் என்று தொடக்கத்தில் மருத்துவர் முயற்சித்திருக்கிறார். எனவே மருந்தை காதுக்குள் விட்டு, தலையை சாய்த்துக் கொள்ளும்படி நோயாளியிடம் கூறினார். ஆனால் பல்லியை வெளியில் எடுக்க முடியவில்லை. பின்னர், நர்ஸின் துணைக் கொண்டு, ஒரு ட்வீசரை காதுக்குள் விட்டு மருத்துவரே பல்லியை வெளியில் எடுத்து விட்டார்.

காத்திருந்த அதிர்ச்சி

காத்திருந்த அதிர்ச்சி

அதிர்ச்சி ஊட்டும் செய்தி என்னவென்றால் இவ்வளவு முயற்சிக்கு பிறகு வெளியில் எடுக்கப்பட்ட பல்லி இன்னும் உயிருடன் இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த பல்லி காதுக்குள் உயிருடன் இருந்தது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாகும்.

MOST READ: பொடுகுதொல்லையா? யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க... ரெண்டே நாள்ல போயிடும்...

கொஞ்சம் ஆறுதல்

கொஞ்சம் ஆறுதல்

பல்லி வெளியில் வந்த பிறகு, அந்த நோயாளியை ஒரு ENT நிபுணரிடம் அனுப்பி முற்றிலும் பரிசோதித்து பல்லியின் மற்ற பாகங்களான வால் போன்ற பகுதி இன்னும் காதுக்குள் இருக்கிறதா என்று முற்றிலும் பரிசோதனை செய்து உறுதி செய்து கொண்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நிகழவில்லை.

ஆனால், இந்த நிகழ்வை பற்றிய தனது பதிவை பேஸ்புக்கில் இருந்து ஏன் நீக்கினார் மருத்துவர் என்பது விளங்கவில்லை. அந்த நோயாளிக்கு வலி தீர்ந்து வேறு ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான செய்தியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Doctor Found A Live Lizard In The Patient’s Ear

A young doctor who was reporting on her first day at work in Thailand shared her experience on Facebook. The doctor named Varanya Nganthavee revealed that she didn't know she would have to handle a bizarre case that day.
Story first published: Wednesday, July 10, 2019, 15:25 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more