For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொதிக்கிற எண்ணெயில கையை விட்டு வடைசுட்டு எடுத்த பக்தர்கள்... நீங்களே பாருங்க (வீடியோ)

By Mahibala
|
செங்கத்தை அதிர வைத்த பரபரப்பு நிகழ்வு

பொதுவாக திருவிழாக்கள் என்றாலே அதில் நேர்த்திக்கடன்கள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதில் நிறைய வகைகள் உண்டு. அங்க பிரதட்சணம் தொடங்கி, காவடி எடுத்தல், தீ மிதித்தல், அலகு குத்துதல், மொட்டையடித்தல் என விதவிதமான நேர்த்திக்கடன்களைப் பார்த்திருப்போம்.

ஆனால் கொதிக்க கொதிக்க இருக்கும் எண்ணெய்க்குள் அப்படியே வெறும் கைகளை விட்டு வடை தட்டிப்போட்டு சுட்டு எடுக்கும் நேர்த்திக் கடன்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு நேர்த்திக்கடன் திருவிழா நடந்திருக்கிறது தமிழ்நாட்டில். அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தைப்பூச திருவிழா

தைப்பூச திருவிழா

கடந்த செவ்வாய்க்கிமை அன்று முழு பௌர்ணமி நாள், தை மாதம், பூச நட்சத்திர நாள். அதனால் ஒலகமெங்கும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் அபிஷேங்களும் வழிபாடுகளும் நடத்தப்பட்டன. அதில் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். தங்களுடைய பிரார்த்தனைகளையும் நிறைவு செய்தார்கள். திருச்செந்ததூரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதுபோல தமிழகத்தில் உள்ள எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும் நேர்த்திக் கடன்களும் செலுத்தப்பட்டன. அப்படி செலுத்தப்பட்டதில் ஒரு விநோதமான நேர்த்திக் கடன் பற்றித் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

MOST READ: விஜய்சேதுபதியுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா... இன்னும் என்னலாம் பண்றார்? முழு விவரம் உள்ளே...

எங்கே நடக்கிறது?

எங்கே நடக்கிறது?

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு அருகே உள்ள தொரப்பாடி என்னும் கிராமத்தில் தான் பால முருகன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் ஒவ்வொரு தைப்பூசத்துக்கும் சுற்றுவட்டார கிராமப் பகுதியிலிருநு்து மக்கள் திரண்டு, பெரும் திருவிழாவாகக் கொண்டாடுவார்கள்.

காணிக்கை

காணிக்கை

மற்ற கோவில்களைப் போலவே இங்கு காவடி எடுப்பது, தீ மிதித்தல், மொட்டை அடித்தல், அலகு குத்துதல், பால் குடம் எடுத்தல் ஆகியவற்றின் மூலம் மக்கள் தங்களுடைய காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

MOST READ: 2019 ஆம் சனிப்பெயர்ச்சி எப்போது வருகிறது? எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது?

விநோத நேர்த்திக் கடன்

விநோத நேர்த்திக் கடன்

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விநோதமான நேர்த்திக் கட்ன் செலுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நீங்கள் கேட்டால் பதறுவீர்கள். ஆனால் எந்தவித பரபரப்பும் இன்றி மிக சாதாரணமான இந்த நேர்த்திக் கடனை பக்தர்கள் செலுத்துகிறார்கள். அப்படியென்ன நேர்த்திக்கடன் என்று தானே கேட்கிறீர்கள். இதோ பாருங்கள்.

கொதிக்கும் எண்ணெயில்

கொதிக்கும் எண்ணெயில்

நன்கு கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் பெரிய இரும்பு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடுகிறார்கள். அப்படி கொதிக்கும் எண்ணெய்க்குள் அப்படியே வெறும் கையை விட்டு வடை மாவைப் போட்டு கைகளாலேயே திருப்பி விட்டு வடை சுட்டு எடுக்கிறார்கள். கேட்கும்போதே நமக்கு கை எரியுதுல்ல.

MOST READ: நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க... உங்க வாழ்க்கையில நடந்த, நடக்கப்போற ரகசியத்தை நாங்க சொல்றோம்...

நைவேத்தியம்

நைவேத்தியம்

அப்படி சுட்டு எடுக்கப்பட்ட வடையை சுவாமிக்குப் படையலாக்கி பூஜை செய்து பின் எல்லோருக்கும் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். அந்த பாலமுருகளை மனதார வேண்டிக் கொண்டு கொதிக்கும் எண்ணெய்க்குள் கை விட்டால் அது நம்மை ஒன்றும் செய்யாது என்று பக்தி பொங்க கூறுகிறார்கள் பக்தர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: festival முருகன்
English summary

Devotees Remove Vada From Boiling Oil With Bare Hands

Devotees at Murugan temple in Chengam of Thiruvannamali district dip their hands into a vessel full of boiling oil and take out fried vada from it. Those who dip their hands in boiling oil have not faced any problem like burning sensation or injuries on their hands. The incident happened on 21 January in Chengam of Thiruvannamali District Tamil Nadu India.
Story first published: Monday, January 28, 2019, 17:20 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more