Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
உடம்பு பத்திரம்... இந்த மூனு ராசிக்காரங்களுக்கு தான் சொல்றோம்... பாத்து சூதானமா இருங்க
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

மேஷம்
நீங்கள் மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல்கள் உண்டாகும். உங்களுடைய உத்தியோகத்தில் சக ஊழியர்களிடன் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். நீங்கள் எதிர்பாராத சில உதவிகள் உங்களுக்குக் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய மனதுக்குப் பிடித்த புதிய பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி சீக்கிரமே விலகவும் ஆரம்பிக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் வேண்டும். உங்களுடைய திருமண முயற்சிகளில் முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கு பிரபலமானவர்களுடைய அறிமுகங்கள் உண்டாகும். அது உங்களுக்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
நீங்கள் மனதில் நினைத்து வைத்த காரியங்கள் நிறைவேற சின்ன சின்ன தடைகள் ஏற்படும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வெளியூா் பயணங்களினால் உங்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். வாகனங்களில் செல்லுகின்ற பொழுது கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

கடகம்
உங்களுடைய செயல்பாடுகளில் வேகம் கூடும். வெளியூர் பயணங்களினால் உங்களுக்கு ஆதாயமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகனால் முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புதிய நபர்களுடைய அறிமுகமும் நட்பும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இடையே ஒற்றுடை அதிகரிக்கும். தொழிலில் நீங்கள் செய்கின்ற சின்ன சின்ன மாற்றங்களினால் லாபங்கள் உண்டாகும். அடுத்தவர்களிடம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

கன்னி
வீட்டில் குழந்தைகளினுடைய செயல்பாடுகளில் உங்களுக்குக் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொழில் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். பெரியோர்களின் முழு ஆதரவும் உங்களுககுக் கிடைக்கும். பணி சம்பந்தமான பயணங்களினால் புதுவித அனுபவங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமாகவும் இருக்கும்.

துலாம்
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே முக்கியமாக ஆதரவான சூழல்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகளால் உங்களுக்கு மேன்மை உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களுடைய ஆதவுகளைப் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் குவிப்பீர்கள். வீடு மற்றும் மனை தொடர்பான விவகாரங்களில் ஆதாயமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
மனதுக்குள் புதுப்புது சிந்தனைகளும் எண்ணங்களும் மேலோங்கி நிற்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இருந்து வந்த பொறுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய புதிய முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். அனுபவ அறிவு மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

தனுசு
வீட்டில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நண்பர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப நண்பர்களுடன் வெளியூருக்குச் செல்லும் வாய்ப்புகள் வரும். மனதுக்குப் பிடித்த புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமாகவும் இருக்கும்.

மகரம்
குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உறவினர்களின் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். வீட்டுக்குத் தேவையான பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணங்களால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். உங்களுடன் பிறந்தவர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய ஆன்மீகச் செயல்பாடுகளில் கொஞ்சம் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய புதிய முயற்சிகளால் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய தகுதிக்கேற்ற பதவி உயர்வுகள் உங்களுக்குக் கிடைக்கும். வெளியிடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வதன் மூலமாக உங்களுடைய அனுகூலமான பலன்கள் உ்ணடாகும். முக்கியப் பணிகளில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications