ஏம்ப்பா இந்த மூனு ராசிக்காரங்க யாருப்பா... எல்லார் உயிரையும் போட்டு வாங்குவீங்களாமே!

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahibala

இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வீட்டில் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய பேச்சில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்கான நட்பு வட்டம் பெருக ஆரம்பிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலை உருவாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே உள்ள உறவு அதிக நெருக்கம் பெரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட தொழில் முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கி்னற பொழுது கொஞ்சம் நன்மை கிடைக்கும். மனதுக்குள் புதுவிதமான நல்ல எண்ணங்கள் வந்து போகும். உங்களுடைய வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இழுபறி நிலையில் இருக்கும். பாட்டிகளில் நீங்கள் நினைத்தபடி உங்களுக்கு வெற்றி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

வியாபாரிகளிடம் பேசுகின்ற பொழுது கொஞ்சம் கவனமாகப் பேச வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். உங்களுடைய மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, மிகவும் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவுகள் வர காலதாமதங்கள் ஏற்படும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

கடகம்

கடகம்

தலைமைப் பொறுப்பில் இருக்கின்றவர்கள் உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். நீங்கள் செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் கவனத்துடன் இருப்பது நல்லது. வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, கொஞ்சம் நிதானம் தேவை. தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

வர்த்தகங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முக்கியமான ஆவணங்களைக் கையாளுகின்ற பொழுது, நிதானம் தேவை. தேவையில்லாத வீண் அலைச்சல்களால் மனச் சோர்வு உண்டாகும். வாகனங்களில் வேகமானச் செல்லாதீர்கள். உடன் பணிபுரிகின்ற சக பணியாளர்களிடம் கொஞ்சம் அமைதிப்போக்கை கடைபிடியுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

கன்னி

கன்னி

போட்டிகளில் பங்கேற்று மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். ஆன்மீகக் காரியங்களில் மனதைச் செலுத்துவீர்கள். கால்நடைகளிடம் கொஞ்சம் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலைகள் செய்பவர்களுக்கு லாபங்கள் கிடைக்கும். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமாகவும் இருக்கும்.

துலாம்

துலாம்

உங்களுடைய செயல் திட்டங்களை உருவாக்கி அதன்படி நடப்பீர்கள். உங்களுடைய விவாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் வாங்குவதற்கான சூழல்கள் உண்டாகும். இசைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் பங்குதாரர்களின் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்களுடைய பொருளாதார நிலைமையை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மனதுக்குள் புதுவதமான தன்னம்பிக்கை உங்களுக்குப் பிறக்கும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் அமையும். நண்பர்களுடன் குளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த சாதகமான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமாகவும் இருக்கும்.

தனுசு

தனுசு

உங்களுடைய பெருந்தன்மையான செயல்பாடுகளினால் உங்கள் மீதான மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்குச் சுப செய்திகள் வந்து சேரும். நீங்கள் நினைத்த வேலையில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்கு உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி ஏற்படும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். உங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்னபள முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

மகரம்

மகரம்

பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு உங்களுடைய காரியங்கள் மூலமாகவே உங்களுக்குப் பெருமையும் வெற்றியும் கிடைக்கும். பதவி உயர்வுக்கு உங்களுக்கான வாய்ப்பு உண்டாகும். மனதுக்குள் உங்களுக்குப் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் உண்டாகும். சாஸ்திர அறிவுகள் உங்களுக்கு அதிகரிக்கும். உங்களுடைய செலவுகளைக் குறைத்து உங்களுடைய சேமிப்பை அதிகப்படுத்த முயற்சி செய்யுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் அடுத்தவர்களை நம்பிச் செயல்படாமல் இருப்பது நல்லது. வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்கிக் குவித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் உங்களுக்கான புதிய பொறுப்புகள் உண்டாகும். தலைமைப் பொறுப்பில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும். சொந்த தொழில் புரிகின்றவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். வெளியிடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வது அனுகூலத்தை உண்டாக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமாகவும் இருக்கும்.

மீனம்

மீனம்

உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொதுக்கூட்டங்களில் பேசுகின்ற பொழுது, உங்களுடைய பேச்சுகளில் அனுகூலமான சூழல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுடைய முழு திறமைகள் உங்களுக்கு வெளிப்படும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய நீண்ட கால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, March 26, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion