Just In
- 1 hr ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 1 hr ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 2 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
- 4 hrs ago
சத்தான... கார்த்திகை பொரி உருண்டை
Don't Miss
- News
என்ன இப்படி சொல்லிவிட்டார் அமித்ஷா.. தடுப்பு காவலில் உள்ள காஷ்மீர் தலைவர்கள் விஷயத்தில் தான்!
- Finance
வெங்காய இறக்குமதி வேண்டாம்..! விவசாயிகள் கோரிக்கை..!
- Automobiles
புதிதாக 100 கார் விற்பனை நிலையங்களை திறக்கும் டாடா மோட்டார்ஸ்
- Movies
விஜய்க்கு 5வது இடம்.. பிகிலுக்கு 6வது இடம்.. ட்விட்டரை தெறிக்கவிட்ட புள்ளிங்கோ!
- Sports
ஆம் அவர் சூதாட்டம் செய்தது உண்மைதான்.. மாட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. நிரூபணம் ஆனது!
- Technology
அதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது?
- Education
8-ம் வகுப்பு தேர்ச்சியா? தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள்.
இன்றைக்கு வரலட்சுமி நோன்பு. அதனால் அதிர்ஷ்டம் யாருக்கு. நஷ்டத்தில் யார் இருப்பார் என்பது தான் மிக முக்கியம். அப்படி எந்தெந்த ராசிக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்று பார்ப்போம்.

மேஷம்
போட்டித் தேர்வுகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிகாரம் சார்ந்த பதவிகளில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பெற்றோருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுக்கான புதிய இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். தொழிலில் புதிய புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.
MOST READ: உட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா? இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...

ரிஷபம்
தொழில் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பெற்றாவது தொழிலை அபிவிருத்தி செய்கின்ற பொழுது, சிந்தித்து முடிவு எடுங்கள். நிர்வாகம் சம்பந்தப்பட்ட செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். அடுத்தவர்களைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களிடம் நெருக்கமாக இருந்தவர்களால் பல இன்னல்கள் அடைந்திருப்பீர்கள். அதன்மூலம் இருந்து வந்த துன்பங்கள் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். உடல் நிலையைப் பொறுத்தவரையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் பல புதயி நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். அரசு அதிகாரிகளுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்
இதுவரையில் நிலுவையில் இருந்து வந்த வழக்குகளில் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். புதிய வீடு கட்டுவதற்கோ அல்லது மனைகள் வாங்குவதற்கான முயற்சிகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளரின் அறிமுகத்தினால் லாபங்கள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

சிம்மம்
நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் உங்கள் கைக்குக் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஆகும். பெற்றோர்களுடைய விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் பணிகளை விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
நீண்ட நாட்களாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்த செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வெளியூருக்குப் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்களு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். நீங்கள் விரும்பிய இட மாற்றங்களால் பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
MOST READ: கட்டிப்பிடி வைத்தியத்தை வைத்தே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் பெண்... எந்த ஊரும்மா நீ...

துலாம்
தொழிலில் தொடர்ந்து இருந்து வருகின்ற சில இன்னல்களைக் கடந்து வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள். பணிபுரியும் இடத்தில் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அலைச்சல்கள் இருந்தாலும் இறுதியில் நல்ல லாபமே கிடைக்கும். மனதுக்குள் வித்தியாசமான எண்ணங்கள் வந்து தோன்றும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறைந்தாலும் நிறைய பாராட்டுக்கள் வெளியிடங்களில் இருந்து வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம்அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்று மாலை பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, அதில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எதையும் செய்ய வேண்டும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட பணிகளில் கொஞ்சம் முன்னேற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

தனுசு
எந்த காரியமாக இருந்தாலும் அதை செய்வதற்கு முன் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றியை நோக்கிச் செல்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பாராத பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் லாபம் உண்டாகும். வாடிக்கையாளர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருகின்ற எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். நெருங்கிய நபர்களின் மூலமாக தேவையற்ற வீண் அலைச்சல்கள் உண்டாகும். இணையதளங்கள் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் லாபங்கள் உண்டாகும். எதிர்பாலின மக்கள் இனத்தவர்களால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் அமையும். எடுத்த காரியத்தை நீங்கள் தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கும்பம்
ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு அலைச்சல்கள் இருக்கும். ஆனாலும் உங்களுடைய பணிகளுக்கான ஆதரவுகள் பெருகும். தொழில் சம்பந்தமாக புதிய முதலீடுக்ள போடுவதில் கொஞ்சம் கவனமாக இருங்கள். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பணி சம்பந்தப்பட்ட விவகாரங்களைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷட நிறமாக நீலநிறமும் இருக்கும்.
MOST READ: சுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற 2 ராசி எது? பணமழை யாருக்கு கொட்டப் போகுது?

மீனம்
எந்த செயல்களைச் செய்தாலும் பதட்டம் ஏதும் இல்லாமல் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்கவும். பயணங்களின் போது, உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தாய்வழியிலான உளவினர்களிடம் உங்களுக்கு உதவி கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.