For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லா கோவிலுக்கு போயும் கல்யாணமாகலையா? ஒரு வியாழக்கிழமை இந்த பரிகாரத்த மட்டும் பண்ணுங்க...

By Mahibala
|

திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்காது. பெண்ணுக்கு மாப்பிளையோ பையனுக்குப் பொண்ணோ அமைய மாட்டேங்குது என்று நிறைய புலம்பல்களைக் கேட்டிருப்போம். சிலருக்கு வரன் அமையாமலே இருக்கும்.

Delaying Marriage

சிலருக்கோ நிச்சயதார்த்தத்தை நெருங்கி வந்து வந்து தடைபட்டுப் போகும். எது எப்படியோ? திருமணம் இப்படி தடைபட்டுக் கொண்டே போவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோஷங்கள்

தோஷங்கள்

திருமணத்தில் தடைகள் உண்டாக, மனிதர்கள், பணம், பொருளாதாரம் என பல காரணங்கள் உண்டு. அதில் ஜோதிட ரீதியான காரணங்கள் என்று பார்த்தால் தோஷங்கள் தான். தோஷங்கள் பலவாறு சொல்லப்படுகின்றன. செவ்வாய் தோஷம், ராகு தோஷம், கேது தோஷம் இப்படி தோஷங்க்ள சொல்லப்படுகின்றன. அதில் திருமணத் தடைகளுக்குக் காரணமாக இருப்பது ராகு தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை தான்.

MOST READ: இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா? இதோ இப்படித்தான்...

கோவில் பரிகாரங்கள்

கோவில் பரிகாரங்கள்

இந்த ராகு - கேது தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு பல கோவில் தலங்கள் ஜோதிட வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றில் மிக முக்கியமானதாக சொல்ல வேண்டுமென்றால், திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், நித்திய கல்யாணப் பெருமாள் கோவில்களில் பூஜை என்று யார் யாரெல்லாம் பரிகாரம் சொல்கிறார்களோ அங்கெல்லாம் போய் பரிகாரம் செய்து பார்த்தும் நிறைய பேருக்கு கல்யாணம் கூடுவதில்லை. அப்படி கஷ்டப்படுகிறவர்களுக்கு சிரமப் படாமல் எளிமையாக செய்யக்கூடிய பரிகாரம் ஒன்று இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.

வியாழக்கிழமை பரிகாரம்

வியாழக்கிழமை பரிகாரம்

இந்த பரிகாரத்தை வியாழக் கிழமை நாளில் தான் செய்ய வேண்டும். மிகப் பெரிய அளவில் கிடையாது. இது மிக எளிமையான பரிகாரம் தான். அதேபோல் வாரா வாரம் செய்ய வேண்டியதெல்லாம் கிடையாது. ஒரு வியாழக்கிழமை மட்டும் செய்தால் போதும்.

தலைக் குளியல்

தலைக் குளியல்

பரிகாரம் செய்வது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் முதலில் வியாழக்கிழமை நாளில் அதிகாலை வேளையில் எழுந்து தலைக் குளியல் செய்ய வேண்டும்.

MOST READ: பொன்னும் புதனும் சேர்ந்து அதிர்ஷ்டத்தை கொட்டப் போவது எந்த ராசிக்கு? அதுக்கு என்ன செய்யணும்?

பசு பரிகாரம்

பசு பரிகாரம்

ஒரு மணி நேரம் நன்கு ஊற வைத்த பச்சரிசி 200 கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டு, 300 கிராம் அளவில் அதேபோல் ஊறவைத்த பாசிப்பருப்பு ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த அரிசி, பருப்பு கலவையில் 200 கிராம் அளவுக்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து அதோடு ஒரு கட்டு உருவிய அகத்திக் கீரையையும் அதில் போட்டு கலந்து அந்த கலவையை உங்களுடைய கைகளால் அள்ளி பசுவுக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். முழுவதும் பசுவுக்கு சாப்பிடத் தர வேண்டும்.

அப்படி செய்து கொண்டிருக்கும் போது பசுவின் கழுத்து, திமில் பகுதிகளை நீவிவிட்டு வாலையும் கைகளால் உருவி விட வேண்டும். அரிசி முழுதும் தீர்ந்த பின், அந்த பாத்திரத்தில் சிறிது தண்ணீர் இருக்கும். அதை தீர்த்தம் போல் குடிக்க வேண்டும்.

சாம்பிராணி

சாம்பிராணி

தலையில் தண்ணீர் ஈரம் இருக்கக்கூடாது. குறிப்பாக பெண்களுக்கு நீளமான முடி என்பதால் தண்ணீர் தலையில் சொட்டாமல் இருக்க வேண்டும். வேண்டுமென்றால் ஆண், பெண் இருவருமே தலை காய்வதற்கு சாம்பிராணி புகை போட்டுக் கொள்ளலாம்.

MOST READ: எரிச்சல் ஏதுமில்லாமல் அந்தரங்கப் பகுதியில் வளரும் முடிகளை எப்படி ஈஸியாக நீக்கலாம்?

தலையில் பூ

தலையில் பூ

பெண்கள் இந்த பரிகாரத்தைச் செய்யும் போது மற்ற பூஜைகளைப் போன்று தலையில் பூ சூடக்கூடாது. பரிகாரம் முடிந்ததும் பசுவை மூன்று முறை வலம் வந்து கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள். அடுத்த முகூர்தத்திலேயே கெட்டி மேளச்சத்தம் கேட்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cow Parrikar On Thursday - Remedy For Delaying Marriage

Haven't heard your wedding Bells yet? Are you still waiting for your dream man or girl who will change your life like a fairy tale, but ended up getting rejected? Then you should try astrology, yeah why not!
Story first published: Thursday, March 21, 2019, 15:01 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more