For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜாக்கிரதையா வாங்குங்க... இறால்ல ஜெலட்டின் ஊசிபோட்டு விக்கறாங்களாம்...

சீன விற்பனையாளர்கள் இறாலில் ஜெலட்டின் ஊசி போட்டு விற்பது கண்டுபிடிக்கப்பட்டது பற்றி தான் இந்த கட்டுரை உங்களுக்கு விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.

|

ஆர்கானிக் உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஒரு புறம் பரவி வருகிறது. மறுபுறம் விற்பனையாளர்கள் மக்களை ஏதாவது ஒரு ரூபத்தில் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இது போல் ஒரு வழக்கு தற்போது சீனாவில் நடந்துள்ளது.

Chinese Sellers Are Injecting Shrimps With Gel

இறால் வாங்கவரும் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமாகவும் சாறு நிறைந்ததாகவும் இறால் காணப்பட வேண்டும் என்று நினைத்து இந்த ஏமாற்று வேலை நிகழ்ந்துள்ளது. இறாலை நன்றாக கவனித்துப் பார்த்தால் அதில் ஜெலட்டின் உட்செலுத்தப்பட்டது தெரிய வருகிறது. இதனைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இந்த பதிவைப் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண் புத்திசாலி

பெண் புத்திசாலி

இறாலில் ஜெலட்டின் நிரப்பப்பட்டிருப்பதை ஒரு பெண் கண்டுபிடித்தார். ஒரு பெண் கடையில் இருந்து புதிதாக வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்ததும் வாங்கி வந்த இறாலை உரிக்கத் தொடங்கினார் .அந்தப் பெரிய இறாலின் தலையை உரிக்கும்போது அதில் ஜெலட்டின் நிரம்பி இருப்பதைக் கண்டு அதிர்ந்துவிட்டார்.

MOST READ: பரம்பரை குண்டா நீங்க? அத எப்படி வேகமா குறைக்கலாம் தெரியுமா?

இது முதல் முறை அல்ல

இது முதல் முறை அல்ல

இறாலில் ஜெல்லி போன்ற ஒரு கூறு காணப்படுவது சீனாவில் முதல்முறை அல்ல என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக 2012ம் ஆண்டு முதல் சீனாவின் பல்வேறு இடங்களில் இறாலில் இது போன்ற ஒரு கூறு காணப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

பல்வேறு காரணங்களுக்காக இறாலில் ஜெலட்டின் உட்செலுத்தப்படுகிறது. இறாலை உலர்த்தி, காய வைத்து, பனி நீக்கம் செய்து, பிறகு அவை ஆரோக்கியமாகவும் புஷ்டியாகவும் காணப்படுவதற்காக வியாபாரிகள் இறாலுக்குள் ஜெலட்டினை ஊசி மூலம் உட்செலுத்துகின்றனர்.

இதனால் இறால் முன்பை விட புஷ்டியாக, ஆரோக்கியமாக வளமாக காணப்படுகிறது. மேலும் இப்படி ஜெலட்டின் உட்செலுத்தப்ட்ட இறால்கள் முன்பை விட 20 முதல் 30 சதவிகிதம் கூடுதல் எடையுடன் விளங்குகிறது. இதனால் வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது.

MOST READ: மனிதன் இறப்பதற்கு அதிகம் காரணமான விலங்கு எது தெரியுமா? தெரிஞ்ச அதிர்ச்சியில செத்திடாதீங்க...

ஒரே பயம்

ஒரே பயம்

இந்த வகை ஜெலட்டின் நிரப்பப்பட்ட இறால்கள் மனிதர்கள் உண்ணக் கூடியதாக இருக்குமா என்பது இதனை வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்களின் சந்தேகமாக உள்ளது. இதற்குக் காரணம், மலிவான விலையில் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக கிடைக்கும் ஜெலட்டின் உட்கொள்வதால் தீங்கு ஏற்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

இனியும் தொடர்ந்து இதே இறால்களை வாங்கி உண்பதா அல்லது இறால் சாப்பிடும் பழக்கத்தை அறவே கைவிடுவதா என்பது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் இரண்டு தீர்வுகளாகும்.

இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் மேலான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chinese Sellers Are Injecting Shrimps With Gel

While organic foods are the latest fad, there is quite a risk involved at the same time as sellers tend to fool their customers by tricking them with the products. One such is this case where sellers are fooling their buyers into buying shrimp that looks healthy and juicy. A close look at the shrimp reveals the dark practice of injecting it with gelatin.
Story first published: Monday, May 13, 2019, 16:24 [IST]
Desktop Bottom Promotion