For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சாணக்கியர் கூறும் எளிய வழிகள் இதுதான்...!

அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சாணக்கியர் கூறும் எளிய வழிகள் இதுதான்...!

|

இந்தியாவின் மிகச்சிறந்த மேதைகளில் ஒருவர் சாணக்கியர் ஆவார். வாழ்க்கைக்கான தத்துவங்களில் இருந்து வெற்றிக்கான ரகசியம் வரை அனைத்தையும் நாம் சாணக்கியரின் அறிவுரைகளில் இருந்து பெறலாம். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் எக்காலத்திற்கும் பொருந்த கூடியவையாகும்.

Caught in office politics? Take help from Chanakya

இன்றைய இளைஞர்களின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று அவர்களின் அலுவலகத்தில் சந்திக்கும் பிரச்சினைகளாகும். பெரும்பாலான இளைஞர்கள் மனஅழுத்ததிற்கு ஆளாவதற்கு காரணமே அவர்களின் அலுவலங்களில் நடக்கும் அரசியலை சமாளிக்க முடியாமல்தான். இதை எளிதாக சமாளிக்கும் வழிகளை சாணக்கியர் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேர்மை

நேர்மை

சாணக்கியர் எப்போதும் அதீத நேர்மையுடன் இருக்கக்கூடாது என்று கூறுவார். ஏனெனில் நேராக வளர்ந்த மரங்கள்தான் முதலில் வெட்டப்படும். எங்கு தந்திரமாக இருக்க வேண்டும் எங்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலையில் செய்ய வேண்டியது

வேலையில் செய்ய வேண்டியது

எந்தவொரு வேலையையும் தொடங்கும் முன் உங்களுக்குள் மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். நான் ஏன் செய்கிறேன், இதன் முடிவு என்னவாக இருக்கும், இதில் நான் வெற்றிபெறுவேனா இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள். எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை ஒதுக்குவதற்கு இந்த வேலை தகுதியானதா என்று யோசித்து கொள்ளுங்கள்.

கடின உழைப்பில்

கடின உழைப்பில்

ஒரு வேலையை தொடங்கும் முன் அது தோல்வியில் முடியும் என்று நினைத்தோ அதனை பாதியில் நிறுத்தக்கூடாது. கடினமாக வேலை செய்பவர்களே மகிழ்ச்சியானவர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். தினமும் உங்கள் முன்னேற்றத்தை கண்காணியுங்கள்.

MOST READ: இந்த மோசமான நோய்களை உங்கள் உடலில் இருந்து வரும் வாசனையை வைத்தே கண்டுபிடித்து விடலாம் தெரியுமா?

ரகசியங்கள்

ரகசியங்கள்

மிகப்பெரிய குரு மந்திரம் என்னவெனில் உங்கள் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது உங்களை அழித்துவிடும். ஒருபோதும் வதந்திகளில் ஈடுபடாதீர்கள்.

நட்பில்

நட்பில்

அனைத்து நட்பிற்கு பின்னாலும் ஒரு சுயநலம் கண்டிப்பாக இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு இருக்க வாய்ப்பில்லை. இது கசப்பான உன்மையாகும். நண்பர்களை வைத்து கொள்ளுங்கள் ஆனால் மிகவும் நெருக்கமான நண்பர்களை வைத்த கொள்ளாதீர்கள்.

பயம்

பயம்

பயம் உங்களை நெருங்கும் போதே அதனை தாக்கி அழித்து விடுங்கள். கற்றுக்கொள்வதை மட்டும் எப்பொழுதும் நிறுத்தி விடாதீர்கள். ஏனெனில் உங்களை பயத்தில் இருந்து பாதுகாக்கும் ஒரே விஷயமாகும்.

போட்டி

போட்டி

நீங்கள் ஓடுவதற்கு முடிவு செய்யாத வரை நீங்கள் போட்டியில் இல்லை என்றுதான் அர்த்தம். நீங்கள் தோற்றாலும், கீழே விழுந்தாலும் பரவாயில்லை. முயற்சி செய்யாமல் இருப்பதற்கு கலந்து கொள்வது சிறந்தது.

MOST READ: ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?

தவறுகள்

தவறுகள்

மற்றவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் தவறுகளில் இருந்தே அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். மக்களிடமும், சூழ்நிலைகளிடமும் கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Caught in office politics? Take help from Chanakya

Here are some quotes from him that encapsulate office politics at its best.
Story first published: Monday, July 1, 2019, 15:02 [IST]
Desktop Bottom Promotion