For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சல்மான் கானுடன் நடிக்க மாட்டேன் என மறுத்த நடிகைகள் யார் யார் தெரியுமா?

By Mahibala
|

தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் ஒட்டுமொத்த பெண்களின் கனவு நாயகன் யார் என்று கேட்டால் ஒரு பட்டியலே உண்டு. அதில் கடந்த 25 வருடங்களாக அதில் முதல் இடத்தை மட்டுமே பிடித்திருக்கிறவர் யாரென்று கேட்டால் அது அரவிந்த்சாமி தான். அப்படி பாலிவுட்டை எடுத்துக் கொண்டாலோ அல்லது மொத்தமாக இந்திய சினிமாவை எடுத்துக் கொண்டாலோ பெண்களின் கனவு நாயகன் யார் என்று கேட்டால் யோசனையே இல்லாமல் எல்லோரும் சொல்வது சல்மான் கான்... சல்மான் கான்... சல்மான் கான்...
என்பது தான்.

அவருடன் நடிக்க நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அந்த சல்மான் கானுடன் தான் நடிக்கவு மாட்டேன் என்று பகிரங்கமாக சில நடிகைகள் சொல்லியிருக்கிறார். அவர்கள் யார், எதற்கான அப்படி சொன்னார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊர்மிளா மடோன்த்கர் (Urmila Madondkar)

ஊர்மிளா மடோன்த்கர் (Urmila Madondkar)

ஊர்மிளா சல்மான் கானுடன் இணைந்து ஜனம் சம்ஜா கரோ (janam samjha karo) என்னும் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் பிளாப் ஆனது. அந்த படத்தின் மிகப்பெரிய தோல்விக்குக் காரணமே சல்மான் கான் தான் என்று பகிரங்கமாகக் குற்றச்சாட்டு வைத்தார். அதனாலேயே அதற்குப் பிறகு அவர் சல்மானுடன் நடிக்கவே இல்லை.

MOST READ: உங்க காதலி எவ்ளோ கோவமா இருந்தாலும் இத மட்டும் சொல்லுங்க... அப்புறம் உங்களயே சுத்தி வருவாங்க...

சுானாலி பிந்த்ரே (Sonali Bindre)

சுானாலி பிந்த்ரே (Sonali Bindre)

அந்த அரபிக்கடலோரம் பாடலில் ஆட்டம் போட்டு எல்லோரையும் மயக்கியவர் தான் சோனாலி பிந்த்ரே. புதுமுக நடிகராக இருந்த குணாலுடன் சேர்ந்து காதலர் தினம் என்னும் தமிழ் படத்தில் நடித்த சோனாலி பிந்த்ரே சல்மான் கானுடன் நடிக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாரா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். அதற்குக் காரணம் ஹம் சாத் சாத் கெய்ன் (hum saath saath hein) என்னும் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். ஆனால் சல்மானின் மான் வேட்டை வழக்குக்குப் பிறகு அவருடன் நடிப்பதில் விருப்பமில்லை என்று ஒதுங்கிவிட்டார்.

ஜூஹி சாவ்லா (Juhi Chawla)

ஜூஹி சாவ்லா (Juhi Chawla)

ஜூஹி சாவ்லா சல்மான் கானுடன் இணைந்து தீவானா மஸ்தானா (Deewana Mastana) என்னும் திரைப்படத்தில் நடித்தார். சல்மான் மிகவும் கர்வம் பிடித்த மனிதர். அது தனக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவருடன் நடிக்க விரும்பவில்லை என்றே தெரிவித்திருக்கிறார்.

MOST READ: இந்த எட்டு விஷயத்த செய்றீங்களா? அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...

டுவிங்கிள் கன்னா (Twinkle khanna)

டுவிங்கிள் கன்னா (Twinkle khanna)

டுவிங்கிள் கன்னா சல்மானுடன் இணைந்து ஜப் பியார் கெய்சே ஹோத்தா ஹேய் (jab pyaar kisise hota hai) என்னும் படத்தில் நடித்தார். காரணமெல்லாம் ஏதும் கிடையாது. சல்மான் மேல் டுவிங்கிளுக்கு பெரிதாக ஈர்ப்பு ஏற்படவில்லையாம். அதனாலயே பின்னாட்களில் சல்மானுடன் நடிக்க வாய்ப்பு வந்தபோது நடிக்க மறுத்துவிட்டாராம்.

அமீஷா படேல் (Ameesha Patel)

அமீஷா படேல் (Ameesha Patel)

சல்மானுக்கு மிகப்பெரிய பிளாப் படமாக அமைந்த யேக் ஹேய் ஜல்வா (Yeh Hai Jalwa) படத்தில் சல்மானுடன் இணைந்து நடித்தவர் தான் இந்த அமீஷா படேல். இந்த படத்தின் தோல்விக்குப் பிறகு இவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை. குறிப்பாக அமீஷாவுக்கு சல்மானுடன் இணைந்து நடிப்பதில் பெரிய ஆர்வமில்லையாம்.

அம்ரிதா ராவ் (Amrita Rao)

அம்ரிதா ராவ் (Amrita Rao)

மத்தவங்கலாம் கூட சல்மானுடன் இணைந்து ஹீரோயினாக நடிக்க தான் மறுத்தார்கள். ஆனால் அம்ரிதா ராவ் பிரேம் ரத்தன் தான் பயோ (Prem Ratan Dhan Payo) என்னும் படத்தில் சல்மானுக்கு தங்கையாக நடிக்கவே மறுத்துவிட்டாராம். பர்சனலாகவே இவருக்கு சல்மானைப் பிடிக்காதாம். இவர்கள் அதன்பிறகு எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டதே இல்லையாம்.

MOST READ: பிரியங்கா சோப்ரா பெட்ரூம்ல எப்படி இருக்கணும்னு அவர் கணவர் போட்ட ரூல்ஸ் என்ன தெரியுமா?

தீபிகா படுகோன் (Deepika Padukone)

தீபிகா படுகோன் (Deepika Padukone)

என்னது? தீபிகா படுகோனுக்கும் சல்மான் கூட நடிக்கப் பிடிக்கலையாமே. சல்மான் கானுடன் நடிப்பதற்காக வந்த 5 படத்தின் வாய்ப்புகளையும் இவர் நிராகரித்திருக்கிறார். சுல்தானில் கூட சல்மானுக்கு எதிராகவே இருப்பார். இயல்பாகவே சல்மானின் ஆட்டிட்டியூட் இவருக்குப் பிடிக்காதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bollywood Actresses Who Hate To Work With Salman Khan

His every box office outing is usually a winner, his flops earn more than many hit films, and a role opposite him is on every actresses’ wishlist- we are talking about none other than the ‘Bhai’ of Bollywood, Salman Khan.
Desktop Bottom Promotion