For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி பறவைகளுக்கு உணவாக்கும் புத்த மதத்தினர் காரணம் என்ன தெரியுமா?

|

ஆன்மாவானது உடலை விட்டு பிரியும் நிகழ்வுதான் மரணம் என்று அழைக்கப்படுகிறது. இறந்தவுடன் உடலுக்கு செய்யப்படும் இறுதி மரியாதைகளும், சடங்குகளும் அவர்கள் மறுவுலகைள மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என்பதற்காக செய்யப்படுவதாகும். இறப்பிற்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்பது அனைவராலும் நம்பப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

Bizarre Ways We Deal With the Dead

இன்று உலகம் முழுவதும் பிணங்களை தகனம் செய்ய ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு முறை உள்ளது. ஆனால் பண்டைய காலத்தில் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் கூட வெவ்வேறு முறைகள் இருந்தது. அதில் சில முறைகள் நம்மை அதிர்ச்சியடைய வைப்பவையாகவும் இருந்தன. இந்த பதிவில் பண்டைய காலகட்டத்தில் பிணங்களை தகனம் செய்ய பின்பற்றிய வித்தியாசமான வழிமுறைகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மம்மி

மம்மி

இந்த முறை உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த முறை தகனத்தில் உயர்குடி வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு என்று தனியிடம் ஒதுக்கப்படும். பதப்படுத்துவதை தொடங்குவதற்கு முன் அவர்கள் உடலில் இருக்கும் அனைத்து பாகங்களும் எடுக்கப்பட்டுவிடும் மூளை உட்பட. அதன்பின் உலர்ந்த பொருட்களால் உடல் நிரப்பப்படும் பின்னர் கயிறு கொண்டு சுற்றப்படும். ஐந்தாம் முறையில் அடக்கம் செய்வது அவர்களின் ஆன்மாவை மறுவுலக பயணத்திற்கு பாதுகாக்கும் என்று நம்பினார்கள். இதுவரை கண்டுபிடிக்க பட்டத்திலேயே மிகவும் பழமையான மம்மி என்றால் அது 6000 BC தான்.

கிரயோனிக்ஸ்

கிரயோனிக்ஸ்

கிரயோனிக்ஸ் என்பது மிகவும் குறைந்த வெப்பநிலையில் மனிதர்களையும், விலங்குகளையும் பதப்படுத்தும் ஒரு முறையாகும். இதை இப்போதிருக்கும் மருந்துகளால் கூட சாதிக்க முடியாது. இவ்வாறு பதப்படுத்த காரணம் எதிர்காலத்தில் மீண்டும் மறுபிறப்பு எடுக்க வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில்தான்.

பிளாஸ்டினேஷன்

பிளாஸ்டினேஷன்

அழிவில்லா வாழ்க்கை மீதிருந்த நம்பிக்கையால் இந்த முறையில் உடலும், உடல் உறுப்புகளும் பதப்படுத்தப்பட்து வந்தது. உடலில் இருக்கும் தண்ணீரும், கொழுப்பும் சில பிளாஸ்டிக் பொருட்கள், வாசனையில்லாத, கெட்டுப்போகாத நெகிழ்வான பொருட்கள் கொண்டு மாற்றியமைக்கப்படும்.

MOST READ: இந்த ரேகை கையில் இருப்பவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் பெற்றவர்களாம் தெரியுமா?

கப்பல் தகனம்

கப்பல் தகனம்

மரணத்திற்கு பிறகு அதிக செல்வம் உள்ளவர்கள் கப்பலில் வைக்கப்பட்டு உணவு, நகை, ஆயுதம் சிலசமயம் வேலைக்கார்கள், செல்லப்பிராணிகளுடன் சேர்த்து கரையில் வைத்து தீயிட்டு தண்ணீருக்குள் அனுப்பி விடுவார்கள். இந்த பழக்கம் பண்டைய கால இந்தியாவிலும் இருந்தது.

மர தகனம்

மர தகனம்

ஆஸ்திரேலியா, பிரிட்டிஷ் கொலம்பியா, தென்மேற்கு அமெரிக்கா மற்றும் சைபீரியா போன்ற நாடுகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது. உடலை இறுக்கமாக துணியால் சுற்றி மரத்தில் சிதைவடையும்படி தொங்க விடுவார்கள்.

டவர் ஆப் சைலன்ஸ

டவர் ஆப் சைலன்ஸ

ஜெரோஸ்ட்ரியன்ஸ் மக்கள் இறந்தவர்களின் உடல் தரை, மக்கள் என எதையும் தொடக்கூடாது என்று கூறுவார்கள், நெருப்பை கூட தீண்டக்கூடாது என்று நினைத்தார்கள். அதனால்தான் அவர்கள் டவர் ஆப் சைலன்ஸ என்னும் அமைப்பை உருவாக்கினார்கள். பொதுவாக மலைப்பகுதிகளில் கோபுரம் போன்ற அமைப்பில் விலங்குகள் வரக்கூடிய இடத்தில் இதஅமைத்துவிடுவார்கள். எலும்புகள் காய்ந்து போனவுடன் அதனை எடுத்து அப்புறப்படுத்தி விடுவார்கள்.

MOST READ: இந்த பிரச்சினைகள் இருப்பவர்களின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்..

நரமாமிசம்

நரமாமிசம்

சிலகலாச்சாரங்களில் இறந்தவர்களை கௌரவப்படுத்தும் சிறந்த வழியாக இருப்பது அவர்களை உண்பதுதான். இதனை நரமாமிசம் உண்பது என்று கூறுவார்கள். இந்த மாதிரி உண்பது இறந்தவர்களுக்கும், உயிரோடு இருபவர்களுக்கும் இருக்கும் உறவை ஒன்றிணைக்கும் என்று நம்பப்பட்டது. மரணம் மற்றும் அதன் துன்பகரமான பின்விளைவுகளுடன் தொடர்புடைய வெறுப்பு மற்றும் அச்சத்தை வெளிப்படுத்த இது ஒரு முரட்டுத்தனமான வழியாகும்.

வான் தகனம்

வான் தகனம்

ஒரு இறந்த உடலை காப்பாற்றவோ அல்லது நினைவுகூறவோ பௌத்தர்களுக்கு விருப்பமில்லை, அவர்களை பொறுத்தவரை ஒரு காலிபாத்திரம் ஆகும். வான் தகனம் என்பது உடலை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி அதனை பறவைகளுக்கு கொடுத்து விடுவார்கள் மிஞ்சுவதை மிருகங்களுக்கு கொடுத்து விடுவார்கள். திபெத் புத்த மதத்தினர் வான் தகன முறையை பின்பற்றினார்கள், 1000 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட இதனை பின்பற்றினார்கள்.

விரலை நீக்கும் சடங்கு

விரலை நீக்கும் சடங்கு

ஒருவேளை பிடித்தவர்களின் இறப்பானது அதிர்ச்சிகரமானதாக இருந்தால் டானி மக்கள் இறந்தவர்களின் விரலை எடுத்து வைத்துக்கொள்வார்கள். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இந்த சடங்கு மிகவும் கொடூரமனதாக இருக்கும். இந்த சடங்கானது ஆவிகளை விரட்டவும், இறந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தவும் உதவுகிறது.

MOST READ: தயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள்... இல்லனா பிரச்சினைதான்...!

புதைப்பது

புதைப்பது

இது சுற்றுசூழலுக்கு மிகவும் ஏற்ற பிணங்களை அப்புறப்படுத்தும் முறையாகும். இந்த செயல்முறையில் மனித உடல் சிதைந்து மண்ணிற்கு சிறந்த உரமாக மாறுகிறது, இதனை அகுவாமேஷன் என்றும் கூறுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bizarre Ways We Deal With the Dead

The way we mourn, memorialize and deal with our dead differs greatly from culture to culture, but some death rituals really take funerals to the next level of bizarre.
Story first published: Saturday, May 11, 2019, 13:45 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more