Latest Updates
-
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,!
உங்கள் ராசிப்படி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் தெரியுமா?
பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையில் இருக்கும் பாசம் மற்றும் நெருக்கம் என்பது எப்பொழுதுமே குறையாத, குறைந்து விடக்கூடாத ஒன்றாகும்.
உலகின் அற்புதமான உறவு என்றால் அது பெற்றோருக்கும், குழந்தைக்கும் இருக்கும் உறவுதான். பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையில் இருக்கும் பாசம் மற்றும் நெருக்கம் என்பது எப்பொழுதுமே குறையாத, குறைந்து விடக்கூடாத ஒன்றாகும். உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வது என்றால் அது உங்கள் குழந்தைகள்தான்.

ஒருவேளை உங்கள் குழந்தைகள் உங்கள் சொல்பேச்சு கேட்காமலோ அல்லது உங்களுக்கிடையேயான உறவில் பாசம் இல்லையென்றாலோ அந்த உறவு மிகவும் கொடியதாக இருக்கும். உங்கள் குழந்தையின் பிறந்த ராசி உங்களுக்கிடையேயான உறவில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உங்கள் குழந்தையின் ராசிப்படி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இருக்கும் உறவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கும்.

மேஷ ராசி குழந்தைகள்
உங்கள் குழந்தை மேஷ ராசியாக இருந்தால் உங்கள் குழந்தை எப்போதும் சுறுசுறுப்பான ஆளுமையை கொண்டவர்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மேஷ ராசி குழந்தைகளை வளர்ப்பதுஎளிதானதாகவே இருக்கும். ஏனெனில் இவர்கள் தங்களின் விருப்பு, வெறுப்புகளை வெளிப்படையாக காட்டிவிடுவார்கள். பெற்றோர்களுடனான அவர்களின் உறவு என்பது காற்று போன்றதாகும். அது தென்றலாக இருப்பதும், புயலாக மாறுவதும் பெற்றோர்கள் கையில்தான் உள்ளது.

பொருத்தமான ராசிகள்
ஒருவேளை உங்களின் ராசி தனுசு, சிம்மம், துலாம் அல்லது மிதுனமாக இருந்தால் மேஷ ராசி குழந்தையுடனான உங்கள் உறவு அழாகானதாக இருக்கும்.

ரிஷப ராசி குழந்தைகள்
இவர்கள் வசீகரமிக்கவர்களாகவும், அழகானவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருப்பார்கள். சில நேரங்களில் படுத்தி எடுத்துவிடுவார்கள். ஆனால் இவர்கள் மேல் வைக்கும் அன்பு இருமடங்காக உங்களுக்கு திருப்பி கிடைக்கும். கட்டாயப்படுத்தி இவர்களை ஒன்றும் செய்ய வைக்க முடியாது. அவர்களுக்கென தெளிவான திட்டம் இருக்கும்.

பொருத்தமான ராசிகள்
நீங்கள் கடகம், மீனம், மகரம், கன்னி மற்றும் விருச்சிக ராசியாக இருந்தால் ஒரு அற்புதமான உறவிற்கு தயாராகி கொள்ளுங்கள். உங்கள் குழந்தையுடனான உறவு உங்களுக்கு புது அர்த்தத்தை கொடுக்கும்.

மிதுன ராசி குழந்தைகள்
இவர்கள் சிறுவயது முதலே அதிக பேசக்கூடியவர்களாகவும், உற்சாகமிக்கவர்களாகவும் இருப்பார்கள். பிடிவாதம் இவர்களுடன் பிறந்த குணமாகும். இவர்களுக்கு சுதந்திரம் மிகவும் அவசியமானதாகும் அது கிடைக்காத பட்சத்தில் பெற்றோர்களிடம் இவர்கள் கடுமையாக நடந்து கொள்வார்கள். இவர்களின் வாழ்க்கை பற்றிய முடிவில் பெற்றோர்கள் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம்.

பொருத்தமான ராசிகள்
நீங்கள் துலாம், சிம்மம், கும்பம், தனுசு மற்றும் மேஷ ராசியாக இருந்தால் உங்கள் குழந்தையுடனான உறவில் அதிக அன்பும், புரிந்துணர்வும் இருக்கும். உங்கள் குழந்தையுடன் உங்களுக்கு சிறந்த நட்பு இருக்கும்.

கடக ராசி குழந்தைகள்
கடக ராசி குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், அவர்களின் மனநிலை மாற்றங்கள் அவர்களின் தோற்றத்திலேயே பிரதிபலிக்கும். சிறுவயது முதலே இவர்களிடம் நிர்வாகத்திறன்கள் அதிகம் காணப்படும். கடக ராசி குழந்தைகளுக்கு பெற்றோராக இருப்பது மிகவும் உணர்ச்சிகள் நிறைந்த வேலையாகும். உங்களின் அன்பை அவர்கள் எப்போதும் எதிர்பார்ப்பார்கள் அதனை அனுபவிக்கவும் செய்வார்கள்.

பொருத்தமான ராசிகள்
உங்களின் ராசி ரிஷபம், விருச்சிகம், மீனம், மகரம் மற்றும் கன்னியாக இருந்தால் கடக ராசி குழந்தைகளுடனான உங்களின் உறவு உங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தரும்.

சிம்ம ராசி குழந்தைகள்
சுறுசுறுப்பான இவர்கள் எப்பொழுதும் தங்கள் பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பவராக இருப்பார்கள். இவர்களின் ஆற்றல் ஒப்பிட முடியாததாக இருக்கும். இவர்கள் தைரியமிக்கவர்களாகவும், சிலசமயம் அலட்சிய குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த ராசி குழந்தைகள் அதிக தாராள குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடன் உறவை வளர்த்து கொள்வது நிச்சயமாக அற்புதமான ஒரு உணர்வாக இருக்கும்.

பொருத்தமான ராசிகள்
உங்கள் ராசி கும்பம், மேஷம், மிதுனம், தனுசு மற்றும் துலாமாக இருந்தால் இவர்களுடனான உங்கள் உறவு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். முடிவில் இது பிரிக்க முடியாத உறவாக மாறும்.

கன்னி ராசி குழந்தைகள்
கன்னி ராசி குழந்தைகள் உதவி செய்யும் குணமுள்ளவர்களாகவும், தாராள மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் உண்மையான நண்பர்களை தேடுவதில் அதிக நேரத்தை செலவழிப்பார்கள் அதனால் பெரும்பாலும் தனிமையிலேயே இருப்பார்கள். அதனால் அவர்கள் பெரும்பாலும் பெற்றோரின் அன்பையும், துணையையும் நாடுவார்கள். ஒரு பெற்றோராக இந்த ராசி குழந்தைகளை வளர்ப்பது அதிக பொறுப்புகள் நிறைந்ததாகும்.

பொருத்தமான ராசிகள்
விருச்சிகம், மீனம், கடகம், ரிஷபம் மாற்றம் மகர ராசிக்காரர்களுடன் கன்னி ராசி குழந்தைகள் ஆழமான உறவை பகிர்ந்து கொள்வார்கள்.

துலாம் ராசி குழந்தைகள்
சிறுவயது முதலே துலாம் ராசி குழந்தைகள் அனைவரையும் கவர்பவர்களாக இருப்பார்கள், இதனால் எப்பொழுதும் அவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். இவர்கள் படித்து தெரிந்து கொள்வதை விட அனுபவரீதியாக அனைத்தையும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் அன்பை காட்ட விரும்புவார்கள். ஒழுக்கமும், புரிந்து கொள்ளும் குணமும் இந்த குழந்தைகளுக்கு பிறவியிலேயே வந்துவிடும்.

பொருத்தமான ராசிகள்
துலாம் ராசி குழந்தைகள் சிம்மம், தனுசு, மிதுனம், கும்பம் மற்றும் மேஷ ராசிக்காரர்களுடன் சிறந்த உறவை வளர்த்து கொள்வார்கள். நீங்கள் இந்த ராசிகளில் ஒன்றாக இருந்தால் உங்கள் துலாம் ராசி குழந்தை உங்களுக்கு பெருமையை தேடித்தருவார்கள்.

விருச்சிக ராசி குழந்தைகள்
விருச்சிக ராசி குழந்தைகள் அசாதாரணமான தீவிர ஆளுமையை கொண்டவர்கள். மற்ற குழந்தைகளிடம் இருந்து விருச்சிக ராசி குழந்தைகளை அடையாளம் காண்பது மிகவும் எளிதான ஒன்று. இயற்கையாகவே புத்திசாலிகளான இவர்கள் அனைத்து விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள். சிறுவயது முதலே இவர்கள் தங்கள் பெற்றோரிடம் நேர்மையாக நடந்து கொள்வார்கள். புறக்கணிப்பு என்பது இவர்களால் தாங்கி கொள்ள முடியாத ஒன்றாகும். ஒரு பெற்றோராக நீங்கள் செய்ய வேண்டியது அவர்கள் பறப்பதற்கு உங்கள் கைகளை துணையாக கொடுக்க வேண்டியதுதான்.

பொருத்தமான ராசிகள்
மீனம், கன்னி, ரிஷபம், மகரம் மற்றும் கடக ராசி பெற்றோர்களுடன் மரியாதை நிறைந்த அன்பான உறவை இவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். உணர்ச்சிகள் மிகுந்த பாச உறவு இவர்களுக்குள் இருக்கும்.

தனுசு ராசி குழந்தைகள்
இணக்கம், தைரியம் மற்றும் ஆற்றல் நிறைந்தவர்களாக தனுசு ராசி குழந்தைகள் இருப்பார்கள். இவர்கள் மிகவும் வேடிக்கையான குழந்தைகளாக இருப்பார்கள் எனவே சிறுவயதிலேயே மற்றவர்களை விட அதிக நண்பர்களை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் இருக்கும் இவர்கள் அடிக்கடி காயங்களை ஏற்படுத்தி கொள்வார்கள்.

பொருத்தமான ராசிகள்
மிதுனம், சிம்மம், மேஷம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்களுடன் தனுசு ராசி குழந்தைகள் மரியாதை மிகுந்த அன்பான உறவை வளர்த்து கொள்வார்கள். இந்த ராசிகளில் ஒருவராக நீங்கள் இருந்தால் உங்கள் வயதான காலத்தில் உங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் உங்கள் குழந்தை பார்த்து கொள்வார்கள்.

மகர ராசி குழந்தைகள்
மற்ற அனைத்து ராசி குழந்தைகளை விடவும் மகர ராசி குழந்தைகள் நிதானமானவர்களாக இருப்பார்கள். வயதிற்கு மீறிய பக்குவம் இவர்களிடம் எப்போதும் இருக்கும். தங்கள் வயது குழந்தைகளை விட வயதில் மூத்த குழந்தைகளுடன் விளையாட இவர்கள் அதிகம் விரும்புவார்கள். இவர்களின் அடிக்கடி மாறும் மனநிலைகள் பெற்றோருக்கு கலக்கத்தை உண்டாக்கலாம்.

பொருத்தமான ராசிகள்
விருச்சிகம், கடகம், ரிஷபம், கன்னி மற்றும் மீன ராசிக்காரர்கள் மகர ராசி குழந்தைகளுடன் அற்புதமான உறவை வளர்த்து கொள்வார்கள். ஒருவேளை நீங்கள் இந்த ராசிகளில் ஒருவராக இல்லையெனில் இவர்களுடனான உங்கள் உறவு அவ்வளவு சுமூகமானதாக இருக்காது, இளம் வயதிலேயே இவர்கள் உங்களை விட்டு பிரிய வாய்ப்புள்ளது.

கும்ப ராசி குழந்தைகள்
இவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் அதேசமயம் வயதில் மூத்தவர்களை மதிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் பெற்றோராக இருப்பவர்கள் இவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம், ஏனெனில் இவர்கள் வெளிப்படையாக தங்கள் விருப்பங்களையும், எண்ணங்களையும் கூறமாட்டார்கள். அவர்களுக்கு விருமப்பில்லாதவற்றை செய்யும் படி நீங்கள் வற்புறுத்தினால் அவர்கள் உங்களை விட்து விலகி செல்ல வாய்ப்புள்ளது.

பொருத்தமான ராசிகள்
மிதுனம், சிம்மம், மேஷம், துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்களாக நீங்கள் இருந்தால் இவர்களுடனான உங்கள் உறவு அன்பு, மரியாதை மற்றும் பல அற்புதமான தருணங்கள் நிறைந்ததாக இருக்கும்.

மீன ராசி குழந்தைகள்
மீன ராசி குழந்தைகள் அன்பு, நாகரிகம், இரக்கம், நகைச்சுவை உணர்வு என பல நல்ல குணங்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் பொதுவாகவே அனைவருடனும் நல்லுறவை வளர்த்து கொள்பவராக இருப்பார்கள். இவர்களின் மென்மையான குணம் இவர்கள் இளம் வயதில் பலவீனமானவர்களாக மாற்றலாம் எனவே பெற்றோர்கள் அவர்களை நன்கு கண்காணித்து அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான ராசிகள்
விருச்சிகம், கடகம், ரிஷபம், மகரம் மற்றும் சிம்ம ராசிக்காரராக நீங்கள் இருந்தால் உங்கள் மீன ராசி குழந்தையுடன் நீங்கள் விவரிக்க முடியாத ஒரு நல்லுறவை வளர்த்து கொள்வீர்கள். விதைகளுக்கு தண்ணீர் மற்றும் மண் போன்ற உறவாக உங்கள் உறவு இருக்கும்.



Click it and Unblock the Notifications











