For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ராசிக்கும் கிரேக்க கடவுளுக்கும் இருக்கும் தொடர்பு என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க...!

பழங்கால ஜோதிட சாஸ்திரங்கள் என்று பார்த்தால் அதில் முக்கிய இடம் வகிப்பது கிரேக்க ஜோதிடம்தான். அவர்கள் கண்டுபிடித்த சின்னங்களே உலகம் முழுவதும் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

|

ஜோதிடத்தை பற்றி தெரிந்த அனைவருக்குமே நன்கு தெரிந்திருக்கும் உலகம் முழுவதும் அனைத்து கலாச்சாரங்களிலும் ராசிகள் என பன்னிரண்டு மட்டுமே இருக்கிறது என்று. ஏனெனில் உலகம் முழுவதும் காலநேரம் மாறினாலும், கலாச்சாரங்கள் மாறினாலும் வானமும், நட்சத்திரங்களும் ஒன்றுதான், அதேபோலத்தான் கடவுள் நம்பிக்கையும்.

Based on Your Zodiac Sign, Which Greek Immortal Are You?

பழங்கால ஜோதிட சாஸ்திரங்கள் என்று பார்த்தால் அதில் முக்கிய இடம் வகிப்பது கிரேக்க ஜோதிடம்தான். அவர்கள் கண்டுபிடித்த சின்னங்களே உலகம் முழுவதும் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் வரலாற்றின் படி ஒவ்வொரு ராசியும் ஒரு கிரேக்க கடவுளுடன் தொடர்புடையது. அந்தந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அந்த கடவுளின் குணங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பதிவில் உங்கள் ராசிப்படி எந்த கிரேக்க கடவுளின் குணம் உங்களுக்கு இருக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம் - ஏரிஸ்

மேஷம் - ஏரிஸ்

முதல் ராசியான மேஷம் செவ்வாயால் ஆளப்படுவதாகும். பண்டைய கிரேக்கர்களின் நம்பிக்கைப்படி இந்த சிவப்பு நிற கோள் ஜீயஸ் மற்றும் ஹெரா ஆகியோரின் மகனான போர்களின் கடவுளான ஏரிஸை பிரதிபலிப்பதாகும். ஏரிஸ் தீயை பிரதிபலிப்பவர் ஆவார் எனவே இவர்கள் தீயை போல எப்பொழுதும் உற்சாகமும், போட்டிமனப்பான்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஏரிஸ் இரண்டு சக்திவாய்ந்த கடவுள்களுக்கு மகனாக பிறந்தார் ஆனால் இவர்கள் அவர்களுடன் வாழவில்லை. இவர் மூர்க்கத்தனம், குழப்ப மனநிலை போன்றவற்றால் அறியப்படுபவர், எனவே இவரின் ராசியில் பிறந்தவர்களுக்கும் இந்த குணங்கள் இருக்கும். இவர்களுக்கு அதிக நண்பர்கள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இவர்களுக்கு இவர்களே சிறந்த நண்பர்கள்தான். இவர்களுக்கு மூர்க்கத்தனம் மற்றும் பிடிவாதம் அதிகம் இருந்தாலும் நேர்மை, அக்கறை மற்றும் தைரியம் போன்ற நல்ல குணங்களும் இவர்களுக்கு அதிகமிருக்கும். அவர்கள் தாங்கள் விரும்பியதற்காக எப்பொழுதும் சண்டை போடுவார்கள் அதேசமயம் சவால்களை கண்டு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்.

ரிஷபம் - ஹெஸ்டியா

ரிஷபம் - ஹெஸ்டியா

ரிஷப ராசியுடன் தொடர்புடைய கிரேக்க கடவுள் ஹெஸ்டியா ஆவார். வீட்டை பாதுகாக்கும் கன்னி தெய்வம் இவராவார். ஹெஸ்டியா க்ரோனோஸ் மற்றும் ரியாவின் மூத்த மகளாக பிறந்தார், தியாகம் செய்வதுதான் இவரின் சிறப்பே, தியாகத்தின் கடவுளாகவும் இவர்தான் இருந்தார். ரிஷப ராசியில் பிறந்தவர்களும் ஹெஸ்டியாவை போல அர்ப்பணிப்பும், அக்கறையும், பொறுமையும் கொண்டவர்களாக இருப்பார்கள். சிறந்த அக்கறையுள்ள நண்பர்களுக்கு எடுத்துக்காட்டாக இவர்கள் இருப்பார்கள். குடும்பம்தான் அவர்களுக்கு அனைத்தையும் விட முக்கியமானதாகும், எப்போதும் தன் குடும்பத்தின் மீது அக்கறையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பார்கள்.

மிதுனம் - ஹெர்மஸ்

மிதுனம் - ஹெர்மஸ்

மூன்றாவது ராசியான இது புதனால் ஆளப்படுவதாகும். ஹெர்மஸ் சிறகுகள் உடைய தலைக்கவசம் அணிந்த கடவுள்களின் தூதுவராவார். மற்ற கடவுள்களின் கட்டளைகளை வானத்தில் காற்றை விட வேகமாக பறந்து நிறைவேற்றுபவர். மேலும் இவர்கள் கால்நடைகள், மொழி, மற்றும் எழுத்துக்கு கடவுளாக இருந்தார். இதனால் மிதுன ராசியில் பிறந்தவர்கள் அதிகம் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். ஹெர்மஸ் ஜீயஸின் தூதுவராக இருந்தார் அதேசமயம் இறந்த ஆன்மாக்களை பாதாள உலகம் நோக்கி வழிநடத்துபவராகவும் இருந்தார். மிதுன ராசியில் பிறந்தவர்களும் ஹெர்மஸை போலவே ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடியவராகவும், புத்திகூர்மை மிக்கவராகவும் இருப்பார்கள் அதேசமயம் இவர்களுக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும், ஓய்வின்றி வேலை செய்வார்கள்.

MOST READ: இந்த 6 ராசிகளில் பிறந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் காதலன்/காதலிக்கு உண்மையாக இருப்பார்களாம்...

கடகம் - ஆர்டெமிஸ்

கடகம் - ஆர்டெமிஸ்

கடக ராசி மிகவும் சக்திவாய்ந்த அனைவராலும் மதிக்கப்படுகிற ஒலிம்பியன் பெண் கடவுளான ஆர்டெமிஸ் உடன் தொடர்புடையதாகும். சந்திரனின் கடவுளாக இருந்த ஆர்டெமிஸ் வீட்டையாடுதல், வனங்கள், கன்னித்தன்மை மற்றும் குழந்தை பிறப்புக்கும் கடவுளாக இருந்தார். இளம்பெண்களை பாதுகாப்பதுதான் இவரின் தலையாய கடமையாக இருந்தது. இவர் எப்பொழுதும் கையில் வில் மற்றும் அம்புடன்தான் காட்சியளிப்பார். இவர் ஆண்களை பார்த்து பயப்படுவார் அதனாலதான் இவர்கள் வனங்களில் வசித்தார் இரவில் மட்டும் வெளியே செல்வார். இவரை போலவே கடக ராசியில் பிறந்தவர்களும் அதிக கூச்ச சுபாவம் உடையவராகவும், அதிகம் உணர்ச்சிவசப்பட கூடியவராகவும் இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் அமைதியானவர்களாகவும், அதிக அர்ப்பணிப்பு குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

சிம்மம் - ஜீயஸ்

சிம்மம் - ஜீயஸ்

சிம்ம ராசி சர்வ வல்லமையும் பொருந்திய அதிசக்திவாய்ந்த கிரேக்க கடவுளான ஜீயஸ் உடன் தொடர்புடையதாகும். ஜீயஸ்தான் அனைத்து கடவுள்களின் அரசனாவார் மேலும் வானம், விதி, சட்டம், காலநிலை என அனைத்தும் இவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. கடவுள்களான க்ரோனோஸ் மற்றும் ரியாவின் கடைசி மகன்தான் ஜீயஸ். இவருக்கு ஏரிஸ், ஹெபே மற்றும் எய்ல்தியா என மூன்று குழந்தைகள் இருந்தனர், ஆனால் இவருக்கு பல பெண்களுடன் தொடர்பிருந்தது அதன்மூலம் மேலும் பல குழந்தைகள் இருந்தனர். ஜீயஸ் கவலைகள் இல்லாத யாராலும் கணிக்கமுடியாத கடவுளாக இருந்தார். இவர் கருணை மிகுந்த கடவுளாக இருந்தாலும் அதிக கோபமும் படுவார். இந்த அனைத்து குணங்களும் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இருக்கும்.

கன்னி - டெமிட்டர்

கன்னி - டெமிட்டர்

கன்னி ராசியானது பெண் கடவுளான டெமிட்டருடன் தொடர்புடையது. இவர் விவசாயம் மற்றும் தானியங்களின் கடவுளாக இருந்தார். தானியங்களை சுமந்து செல்லும் பெண்ணாக உருவகப்படுத்தப்படும் இவர் கிரேக்க வரலாற்றின் சக்திவாய்ந்த கடவுள்களில் ஒருவராக இருக்கிறார். டெமிட்டர் என்பதன் பொருள் பூமியின் அன்னை என்பதாகும். விவசாயம் மற்றும் அறுவடையின் கடவுளான இவர் அனைத்து மக்களுக்குள் தாய் போன்றவராவார். இந்த ராசியில் பிறந்தவர்கள் இவரை போலவே மற்றவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாகவும், உதவும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

துலாம் - அப்ரோடைட்

துலாம் - அப்ரோடைட்

சுக்கிரனால் ஆளப்படும் இந்த ராசியானது அப்ரோடைட் எனும் காதல், இன்பம் மற்றும் இனப்பெருக்கத்தின் கடவுளுடன் தொடர்புடையதாகும். இவர் மிகவும் குறும்புக்கார பெண்ணாக இருப்பார் என்று கிரேக்க வரலாறு கூறுகிறது. அப்ரோடைட்டின் அழகு அனைத்து கடவுள்களையும் தூண்டிவிட கூடும் என்று அனைவரும் கூறுவார்கள். இதனால் ஜீயஸ் அப்ரோடைட்டை ஹெப்பஸ்டாஸ் எனும் அசிங்கமான கடவுளுக்கு மணம் முடித்து வைத்தார். இதனால் அப்ரோடைட் பல கடவுள்கள் மற்றும் மனிதர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டார். துலாம் ராசிக்காரர்கள் வசீகரமானவர்களாகவும், காதல், கவர்ச்சி மற்றும் அழகு என அனைத்தும் நிறைந்ததவராக இருப்பார்கள். இவர்கள் எவ்வளவு வசீகரத்துடன் இருந்தாலும் சரியான துணை இவர்களுக்கு அமைவது மிகவும் கடினமான ஒன்றுதான்.

MOST READ: உங்க பிறந்த தேதி படி எந்த தேதில பிறந்தவங்கள கல்யாணம் பண்ணா உங்க வாழ்க்கை சூப்பரா இருக்கும் தெரியுமா?

விருச்சிகம் - ஹேட்ஸ்

விருச்சிகம் - ஹேட்ஸ்

விருச்சிக ராசி மரணம் மற்றும் பாதாள உலகத்தின் கடவுளான ஹேட்ஸ் உடன் தொடர்புடையதாகும். மர்மம், ஆற்றல், கவர்ச்சி என அனைத்தும் நிறைந்த விருச்சிகம் எப்பொழுதும் தவறாக புரிந்து கொள்ளப்படும் ராசியாகும். பாதாள உலகத்தை ஆண்டதால் மட்டுமே ஹேட்ஸ் தீயக்கடவுளாக கருதப்பட்டார். இவர் ஒருவர் மட்டுமே தான் மனைவிக்கு ஒருபோதும் துரோகம் செய்யாமல் உண்மையாக இருந்த கடவுளாவார், இது விருச்சிக ராசியின் முக்கியமான நல்ல குணமாகும். இவரை போலவே விருச்சிக ராசிக்காரர்கள் ஆற்றல், பொறுமை, நேர்மை போன்ற குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.

தனுசு - டயோனிஸஸ்

தனுசு - டயோனிஸஸ்

தனுசு ராசியானது நேரடியாக திருவிழா, பெருமை மற்றும் குறும்புத்தனத்தின் கடவுளான டயோனிஸஸ் உடன் தொடர்புடையதாகும். டயோனிஸஸ் ஜீயஸ் மற்றும் இளவரசி தேபேஸின் மகனாவார். இவர் கையில் ஒரு கோப்பையுடனும், தலையில் கிரீடத்துடனும் காட்சியளிப்பார். இவரை போலவே தனுசு ராசிக்கார்களும் உற்சாகம், பொறுமை, நேர்மை, ஞானம் போன்றவற்றை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்ற கடவுள்களை காட்டிலும் இவர் அதிகம் குறும்பு செய்வார் அவரை போலவே இவர்களும் மற்றவர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருப்பதால் இவர்களை சுற்றி எப்பொழுதும் அதிக நண்பர்கள் இருப்பார்கள். ஆபத்துக்களை சந்திக்க இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.

மகரம் - அப்பல்லோ

மகரம் - அப்பல்லோ

மகர ராசி அப்போலோவுடன் பல வழிகளில் தொடர்புடையது. வில்வித்தை, கவிதை, இசை, குணப்படுத்துதல், பாதுகாப்பு என பலவற்றுக்கும் இவர் கடவுளாக இருந்தார். ஜீயஸ் மற்றும் லெடோவின் மகனான இவர் மற்ற கடவுள்களை காட்டிலும் அழகான கடவுளாக இருந்தார் இவர் கையில் எப்பொழுதும் வில்லும், அம்பும் இருக்கும். இவரை போலவே மகர ராசிக்கார்களும் கலையில் ஆர்வம், உறுதியான குணம், கடின உழைப்பு மற்றும் தீரா ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் கவிதை எழுதுவதிலும், இசையிலும் எப்பொழுதும் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்கள் புகழ் பெற்றவர்களாக விளங்குவார்கள். இவர்கள் உடனிருப்பவர்கள் எப்பொழுதும் அதிக பலனை அடைவார்கள்.

கும்பம் - ப்ரோமோதியஸ்

கும்பம் - ப்ரோமோதியஸ்

கும்ப ராசிக்கார்கள் புத்திசாலி கடவுளான ப்ரோமோதியஸ் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர் மனிதர்களுக்காக கடவுள்களையே எதிர்த்து நின்றவராவார். கும்ப ராசிக்காரர்களுக்கும் இந்த குணம் இருக்கும். மற்ற கடவுள்களை விட மனிதர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட கடவுள் இவராவார். அவரை போலவே கும்ப ராசிக்காரர்களும் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள். இவர் கடவுள்களின் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர் அவரை போலவே இவர்களுக்கும் விதிமுறைகளை மீறுவது என்பது மிகவும் பிடித்ததாக இருக்கும்.

MOST READ: பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகள் என்ன தெரியுமா?

மீனம் - பொசைடன்

மீனம் - பொசைடன்

மீன ராசி மிகவும் வலிமை வாய்ந்த ஒலிம்பஸ் கடவுளான பொசைடனுடன் தொடர்பு கொண்டதாகும். இவர் கடல், வெள்ளம், குதிரை, பூகம்பம் போன்றவற்றின் கடவுளாவார். மற்ற கடவுள்களை விட உடல் வலிமையில் இவர் மிகவும் சிறந்தவராக இருக்கிறார். கடலின் கடவுளாக இருந்தாலும் இவர் விவசாயத்தின் கடவுளாகவும் வழிபடபடுகிறார். கடல் எப்பொழுது கொந்தளிக்கும், அப்போது அமைதியாய் இருக்கும் என்று கூற முடியாது அதுபோல்தான் மீன ராசிக்காரர்களும் எப்போது அமைதியாய் இருப்பார்கள், எப்போது பொங்கி எழுவார்கள் என்று கூற இயலாது. இந்த ராசியில் பிறந்தவர்கள் அதிக உணர்ச்சிகள், உள்ளுணர்வு மற்றும் கூட்டத்தை வெறுக்கும் குணம் போன்றவற்றை கொண்டிருப்பார்கள். இதனால் பெரும்பாலும் இவர்கள் தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Based on Your Zodiac Sign, Which Greek Immortal Are You?

According to your zodiac sign, which of the greek gods you are?
Desktop Bottom Promotion