Just In
- 8 hrs ago
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- 20 hrs ago
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- 22 hrs ago
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- 23 hrs ago
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
Don't Miss
- Movies
ஜவஹர்லால் நேரு குடும்பம் குறித்து சர்ச்சை கருத்து... பிரபல நடிகை அதிரடி கைது! பரபரப்பில் பாலிவுட்!
- News
தாறுமாறாக பைக்கில் மோதிய கார்.. டயரில் சிக்கியவரை தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. பகீர் வீடியோ!
- Finance
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பரிதாப நிலை.. !
- Sports
10வது முறை.. வெஸ்ட் இண்டீஸ் அணியை புரட்டிப் போட இந்தியா ரெடி!
- Automobiles
காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கும்ப ராசி பெண்கள் காதல் விஷயத்துல இப்படிதான் இருப்பாங்களாம்... இவங்க கிடைச்சா நீங்க அதிர்ஷ்டசாலிதான
தனக்கும் மற்றவருக்கும் ஒரு புதிராகவே விளங்கும் கும்ப ராசிப் பெண்கள் முற்றிலும் சுவாரஸ்யமானவர்கள். சுதந்திரம் என்ற வார்த்தையை அவர்கள் அதிகம் விரும்புவார்கள். எப்போதும் ஒருவித தனித்தன்மையை விரும்புவார்கள். கனவில் மிதப்பது இவர்களின் முக்கிய சுபாவம்.
உண்மையில் இரண்டு கும்ப ராசிப் பெண்கள் ஒரே மாதிரி குணத்தை பெறுவதில்லை. நீங்கள் ஒருவேளை கும்ப ராசிப் பெண் மீது காதல் வயப்பட்டிருந்தால் அவரின் காதல் குணத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். இந்த பதிவைப் படிப்பதால் அவர்களின் குணத்தைப் பற்றி உண்மையாகவும் ஆழமாகவும் அறிந்து கொள்ள இயலும். ஆகவே தொடர்ந்து படியுங்கள்.

அவர்களின் வழியை உங்களால் கணிக்க முடியாது
கும்ப ராசிப் பெண்ணின் குணத்தை கணிக்க முயற்சிப்பது முற்றிலும் ஆகாத காரியம். பொதுவாக அடுத்தது அவர்கள் என்ன செய்வார்கள் என்று உங்களால் கடைசி வரை அறிந்து கொள்ளவே முடியாது. அவரிடம் நெருக்கமாக இருக்கும் ஒரு நபரால் கூட அவரின் குணம் பற்றி, அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். வாழ்க்கையின் அசாதாரண வழியை மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
அவரின் புரட்சிகரமான கருத்துகள் அருகில் இருப்பவரைக் கலங்கடிக்கும். ஆடை தேர்வுகளில் அவர் ஒரு புரட்சியை உருவாக்குவார். ஒரு சில நேரம் மிகவும் நேர்த்தியாக உடை அணியும் இவர், ஒரு சில நேரம் ஆடைத் தேர்வில் மிக மோசமாக இருப்பார். ஆக மொத்தம் தன்னை சுற்றியுள்ளவர்களை விட எப்போதும் மிகவும் வித்தியாசமாக இருக்கவே முயற்சிப்பார்.
MOST READ: உங்க நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க ஆயுள் முடியறவரை எப்படி இருப்பீங்கனு நாங்க சொல்றோம்

சுதந்திரத்தை மிகவும் அதிகமாக விரும்புவார்
கும்ப ராசிப் பெண்கள் சுதந்திரத்தை விரும்பும் அளவிற்கு மற்றவர்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு உச்சகட்ட தேவை என்பது சுதந்திரம் மட்டுமே. இதற்காக அவர்கள் எதையும் விட்டு கொடுப்பதில்லை. அவர்களை கட்டுப்படுத்த நினைப்பவர்களை விட்டு விலகிச் செல்லவும் அவர்கள் துணிவார்கள்.
எப்போதும் புதிய விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொள்வார்கள். அதனை தனது வாழ்வில் முயற்சிக்கவும் விரும்புவார்கள். புதிய மக்கள் மற்றும் புதிய இடங்கள் மீது அவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். எதை எப்போது செய்வார்கள் என்பதை கணிக்க முடியாத காரணத்தால் மற்றும் அதிக சுதந்திரத்தை விரும்பும் காரணத்தால் சில நேரம் பைத்தியக்காரத்தனமாகவும் சில விஷயங்களை செய்வார்கள். இவர்கள் உறவிலும் இதே நிலையைத் தொடர்வார்கள்.

கிளர்ச்சி குணமும் மனிதநேயமும் ஒருங்கே அமைந்தவர்
பிறக்கும்போதே கும்ப ராசிப் பெண்கள் கிளர்ச்சியைத் தூண்டும் பண்பைக் கொண்டவர்கள். அவர்கள் விருப்பப்படி தங்கள் வாழ்க்கையை நடத்துவதை அவர்கள் விரும்புவார்கள். இதே போல், மற்றவர்களையும் அவர்கள் இஷ்டப்படி வாழ்க்கையை அனுபவிக்க தேவையான சுதந்திரத்தைக் கொடுக்க நினைப்பார்கள்.
ஆகவே இவர்கள் வாழ்க்கைத் துணையாக கிடைக்கும்பட்சத்தில், உங்கள் வாழ்க்கை மற்றும் கனவு குறித்த பயம் உங்களுக்குத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கையை உங்கள் இஷ்டப்படி வாழும் உரிமையை உங்களுக்குத் தருவார்கள். உங்களை எளிதில் புரிந்து கொள்வார்கள். மனிதநேயமும் கருணையும் அவருக்கு பிடிக்கும் என்றாலும், சொந்த உறவுகளிடம் இருந்து சற்று விலகியே இருப்பார்கள். மிகவும், நெருக்கமானவர்களிடம் கூட சற்று கடுமையாக நடந்து கொள்வார்கள்.
MOST READ: ஒரே மாசத்துல 15 கிலோ வரை குறைக்கணுமா? வெறும் வயித்துல இந்த பானத்த மட்டும் குடிங்க போதும்

வலிமை மற்றும் புத்திசாலித்தனம் மிக்கவர்
ஒரு கும்ப ராசிப் பெண் குழப்பமாக அல்லது தனிமையாக அல்லது ஞாபக மறதியாக இருப்பதை நாம் கண்டிருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் புத்திசாலியான ஒரு பெண்ணாக விளங்குவார். சில நேரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தவறுகள் நிகழ்ந்தாலும் அந்த விஷயத்தில் மனதை செலுத்திய மாத்திரத்தில் அவை அனைத்தையும் சரி செய்யும் திறன் அவருக்கு உண்டு.
தனியாக செயல்பட அவர் வருந்துவதே கிடையாது. அவர் மிகவும் வலிமையானவர் என்பதால் எதையும் தானாக செய்யும் பக்குவம் நிறைந்தவர். ஒருவேளை அவரின் திருமண உறவு திருப்தியாக இல்லை என்ற சூழ்நிலை வந்தால் தனித்து வாழவும் கவலைக் கொள்ள மாட்டார் .

கும்ப ராசிப் பெண்ணின் இணக்கம்
சுதந்திரத்தை அதிகம் விரும்பும் குணம் உள்ளவர் என்பதால் மிதுனம் மற்றும் துலாம் ராசி ஆண்களுடன் இவர் வாழ்வு இணக்கமாக அமையும். மேலும் மேஷம் மற்றும் தனுசு ராசி ஆண்களும் இவர்களுக்கு பொருத்தமான ராசியாக இருப்பார்கள்.
இந்த ராசியைக் கொண்ட ஆடவரை தேர்ந்தெடுத்து மணம் முடிப்பதன் மூலம் சந்தோசம் நிலைக்கும் ஒரு வெற்றிகரமான திருமணம் அமையும் வாய்ப்பு உண்டு. கன்னி, மீனம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகள் இவர்கள் ராசிக்கு ஏற்றதாக இருக்காது.