For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அங்க சாஸ்திரத்தின் படி உங்களின் எந்த வயதில் அதிர்ஷ்டமும், வெற்றியும் உங்களை தேடிவரும் தெரியுமா?

|

நமது வேதங்களிலும், புராணங்களிலும் நமது வாழ்க்கை எவ்வாறு இந்த பிரபஞ்சத்துடனும், கிரகங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நமது வாழ்க்கையை தீர்மானிப்பதில் நம்முடைய பிறந்த நேரம், தேதி, கிழமை போன்றவை எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பது பற்றியும் நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

know in which year your luck would shine

வேத ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாகும். இது ஒருவரின் எதிர்காலத்தை 3 எண்களை கொண்டு கண்டறிய உதவுகிறது. அவை பிறந்த எண், விதி எண் மற்றும் பெயர் எண் ஆகும். இந்த பதிவில் அங்க சாஸ்திரம் உங்கள் எதிர்காலத்தை அறிய எப்படி உதவுகிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறந்த எண் மற்றும் விதி எண்

பிறந்த எண் மற்றும் விதி எண்

பிறந்த எண் என்பது நமது பிறந்த தேதியின் கூட்டத்தொகையாகும். விதி எண் என்பது உங்கள் மொத்த பிறந்த தேதியின் கூட்டுத்தொகையாகும். உதாரணத்திற்க்கு பிறந்த நாள் 12-09-1985 ஆக இருந்தால் அவர்களின் விதி எண் 1+2+0+9+1+9+8+5 = 35, 3+5 = 8.

அங்க சாஸ்திரம்

அங்க சாஸ்திரம்

இந்து மதத்தின் பழமையான பழமையான சாஸ்திரங்களில் அங்க சாஸ்திரமும் ஒன்றாகும். ஒருவரின் வாழ்க்கையில் எண்கள் எப்படி மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பற்றி இது கூறுகிறது. அங்க சாஸ்திரத்தின் படி எந்த வயதில் உங்களுக்கு அதிர்ஷ்டமும், வெற்றியும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

விதி எண் 1

விதி எண் 1

இந்த எண்ணின் ஆளும் கிரகம் சூரியன் ஆகும். அங்க சாஸ்திரத்தின் படி இந்த எண்ணில் பிறந்தவர்கள் 22 மற்றும் 34 வது வயதில் பெரிய வெற்றியை அடைவார்கள். இந்த வயதில் அவர்களின் வெற்றி வாய்ப்பு அவர்களை தேடிவரும்.

MOST READ: துளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?

விதி எண் 2

விதி எண் 2

இந்த எண்ணில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் சந்திரன் ஆகும். இந்த விதி எண்ணில் பிறந்தவர்கள் 24 மற்றும் 38 வயதில் வெற்றியை அடைவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் பணரீதியாகவும், வெற்றிரீதியாகவும் சிறப்பான இடத்தை அடைவார்கள்.

விதி எண் 3 மற்றும் 5

விதி எண் 3 மற்றும் 5

வியாழன் மற்றும் புதன் கிரகம் ஆளும் கிரகமாக இருப்பதாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போவதாலும் இந்த எண்ணில் பிறந்தவர்களின் வெற்றிக்கான வயது 32 ஆகும். இந்த வயதில் இவர்கள் கையில் அதிக பணம் புரளும்.

விதி எண் 4

விதி எண் 4

இந்த எண்ணில் பிறந்தவர்களின் ஆளும் கிரகம் ராகு ஆகும். அங்க சாஸ்திரத்தின் படி இந்த எண்ணில் பிறந்தவர்களின் வெற்றிக்கான வயது 36 ஆகும். இவர்கள் எதிர்பார்த்த அனைத்தும் அவர்களுக்கு இந்த வயதில் கிடைக்கும்.

MOST READ: இந்த சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுவது உங்கள் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல...!

விதி எண் 6

விதி எண் 6

இந்த விதி எண்ணில் பிறந்தவர்களின் ஆளும் கிரகம் சுக்கிரன் ஆகும். இவர்கள் 25 வயதிலேயே வெற்றியை அடைவார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டம் 27 மற்றும் 32 வயதில் கிடைக்கும்.

விதி எண் 7

விதி எண் 7

இந்த விதி எண்ணில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் கேது ஆகும். இவர்களுக்கு 20 வயதுகளில் வெற்றி கிடைப்பது என்பது மிகவும் கடினமானதாகும். 30 வயதுகளில் அதிர்ஷ்டக்காத்து இவர்களுக்கு ஆரபித்தாலும் 38 மற்றும் 40 வயதில் இவர்கள் உச்சத்தை அடைவார்கள்

விதி எண் 8

விதி எண் 8

இந்த எண்ணில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் சனி ஆகும். இவர்கள் 36 மற்றும் 42 வயதில் வெற்றியை அடைவார்கள். தொழில்ரீதியாகவும், பணரீதியாகவும் இந்த ஆண்டுகள் அவர்களுக்கு அதிகம் இலாபத்தை வழங்குவதாக இருக்கும்.

MOST READ: பெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...!

விதி எண் 9

விதி எண் 9

இந்த விதி எண்ணில் பிறந்தவர்களை ஆள்பவர்கள் செவ்வாய் கிரகம் ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களின் வெற்றிக்கான வயது 28 ஆகும். இந்த வயதில் இவர்கள் அதிக புகழையும், செல்வத்தையும் அடைவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Anka Shastra: know in which year your luck would shine

Based on Anka Shastra you can find in which year your luck will shine.
Story first published: Tuesday, June 25, 2019, 16:05 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more