For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேப் பென் வெச்சு சிகரெட் புடிச்சிருக்காரு... என்ன ஆகியிருக்குனு நீங்களே பாருங்க...

|

கெட்ட பழக்க வழக்கங்களை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயம்.ஆனால் அதை கைவிடுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதிலும் புகைப்பழக்கம் மதுப்பழக்கம் இரண்டுமே நம் உயிருக்கே உலை வைத்து விடும்.

Vape Pen

அப்படித்தான் ஒரு இளைஞருக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க. புகைப்பிடிக்க பயன்படுத்திய வேப் பென் வெடித்து பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அபாயத்தை நியூசிலாந்து நாளிதழ் எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இ-சிகரெட்

இ-சிகரெட்

வேப் பென் அல்லது இ-சிகரெட் பதின் வயதினரிடையே அதிகரித்து வருவதாக 2016 ஆம் ஆண்டு நடத்திய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 2011-2015 வருஷத்துக்குள் பார்த்தால் கிட்டத்தட்ட 900% இளைஞர்கள் இந்த பழக்கத்தை கொண்டுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

MOST READ: இத தெரியுமா? தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...

இளைஞன் செய்த காரியம்

இளைஞன் செய்த காரியம்

தன் மகன் புகைப்பிடித்தலை விட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் 17 வயது மகனுக்கு வேப் பென்னை பரிசாக அளித்துள்ளார் அவரது அம்மா. ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாயில் வைத்த வேப் பென் வெடித்துள்ளது.

தீவிர காயம்

தீவிர காயம்

அவனது காயங்கள் மிகவும் கடுமையாக இருந்துள்ளது. மேலும் அவர்கள் சிறிய கிராமத்தில் வசித்து வந்ததால் 400 கி. மீ தூரம் பயணம் செய்து சிகிச்சை பெற வேண்டிய நிலை. நெவாடாலிருந்து உட்டாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை வரை பயணம் செய்ய வேண்டியிருந்தது.

MOST READ: இந்த நடிகர்கள் ஏன் அவங்க முதல் மனைவிய விவாகரத்து செஞ்சாங்கனு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க...

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

வாயில் உள்ள பற்கள், திசுக்கள் எல்லாம் சேதமடைந்து இருந்தன. மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளித்தனர். தீவிர பாதிப்பு என்பதால் வாயில் மண்டிபுலர் மேக்சில்லரி பிஃக்ஷேசன் செய்துள்ளனர். அந்த சிறுவன் 6 வார காலமாக கஷ்டப்பட்டு மீண்டு வருகிறான்.

அம்மாவின் எச்சரிக்கை

அம்மாவின் எச்சரிக்கை

அவனது அம்மா இந்த வேப் பென் பாதுகாப்பானது இல்லை என்று எவ்வளவோ எச்சரித்தான். ஆனால் அவன் தான் அடம் பிடித்து தனக்கு இதை பரிசாக அளிக்குமாறு கேட்டான் என்று வருந்தியுள்ளார். ஒரு மாத காலமாக அவர் இதை பயன்படுத்தி வந்துள்ளார்.

MOST READ: ஷாருக்கானுக்கு இந்த நடிகையை தான் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்... யார்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?

பயங்கரமான சம்பவம்

பயங்கரமான சம்பவம்

திடீரென ஒரு நாள் என் மகனின் அறையில் உரத்த குண்டு வெடிப்பு கேட்டது. திடீரென உள்ளே நுழைந்து பார்த்தேன். அவன் வலியால் அங்கு துடித்துக் கொண்டு இருந்தான். என் மகனின் முகமெல்லாம் இரத்தம். அவன் முகத்தில் துளையிட்டு விட்டது அந்த வேப் பென். என் மகனின் நிலையைப் போல யாருக்கும் இனி ஆக வேண்டாம். தயவு செய்து இதை பயன்படுத்தாதீர்கள்.

இந்த பயங்கரக சம்பவத்தை தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற நாளிதழில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து மருத்துவர்களும் வேப் பென் அபாயம் குறித்து எச்சரித்துள்ளனர். இளைஞர்களே இது போன்ற அபாயத்தை தவிர்ப்பதே நல்லது. புகைப்பிடித்தலை தவிருங்கள். நம் உடலை நாம் பாதுகாப்பது நமது கடமை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Vape Pen Explodes and Shatters Teen's Teeth

Check out the details of the entire case as it has been shared in The New England Journal of Medicine to warn people about the potential dangers.
Story first published: Friday, June 28, 2019, 16:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more