For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ணர் கூறியுள்ளபடி இப்படிப்பட்டவர்கள் இறந்தபின் நேரடியாக சொர்க்கத்திற்குத்தான் செல்வார்களாம் ...

|

எந்த உயிரினமாக இருந்தாலும் சரி பூமியில் பிறந்து விட்டால் இறந்துதான் ஆகவேண்டும். குறிப்பாக மனிதர்களை பொறுத்தவரையில் அவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும், புத்திகூர்மை மிக்கவர்களாக இருந்தாலும் அவர்களின் மரணத்தை அவர்களால் தடுக்கவோ, தள்ளிப்போடவோ இயலாது. மரணத்தை நினைத்து அச்சமடையாத மனிதனே இருக்க முடியாது.

3 secrets of death by Lord Krishna

ஒருவரின் பாவ, புண்ணியங்களே இறப்பிற்கு பிறகான அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், 18 மகாபுராணங்களில் ஒன்றும் ஆன கருட புராணமும் கூறுகிறது. கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு உபதேசித்த உபதேசங்களில் பலவும் நமக்கு வாழ்க்கையின் மீதான புரிதலை ஏற்படுத்துவதோடு நம் வாழ்க்கையை சரியான திசையில் வழிநடத்தவும் உதவும். கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மரணத்தை பற்றி கூறிய 3 ரசிகியங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரணம் என்றால் என்ன?

மரணம் என்றால் என்ன?

எந்தவொரு மனிதனாலும் மரணம் எப்போது நிகழும் என்று கூற இயலாது. அனைவராலும் கூற முடிந்த ஒரே தகவல் மரணம் எப்படியும் நேர்ந்துவிடும் என்பதுதான். மரணம் என்பது இவ்வுலக வாழ்விற்கும், மறுவுலக வாழ்விற்கும் இடையில் இருக்கும் ஒரு நுழைவாயில் என்று கிருஷ்ணர் கூறுகிறார். அழிவு என்பது உடலுக்கு தானே தவிர ஆன்மாவிற்கு இல்லை என்பது அனைத்து மதங்களும் கூறும் ஒற்றை கருத்தாகும்.

முதல் ரகசியம்

முதல் ரகசியம்

நேர்மையாகவும், மனசாட்சியின் வழிகாட்டுதலின் படியும் வாழ்ந்தவர்களின் மரணம் எப்பொழுதும் சிரமம் இல்லாமலும், அமைதியாகவும் இருக்கும் என்று கிருஷ்ணர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்களின் பூவுலக வாழ்க்கை வேண்டுமென்றால் கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கலாம், ஆனால் அவர்களின் இறப்பிற்கு பிறகான வாழ்க்கை எப்பொழுதும் இன்பங்கள் நிறைந்ததாகவும், அமைதியானதாகவும் இருக்கும் என்று கிருஷ்ணர் கூறியுள்ளார்.

இரண்டாவது ரகசியம்

இரண்டாவது ரகசியம்

எவர் ஒருவர் அறியாமையுடன் தொடர்ந்து தவறுகளை செய்துகொண்டு, தன்னலத்தை மட்டுமே முக்கியமென கருதி, கடவுளை மறுத்து வாழ்கிறார்களோ அவர்களின் மரணம் மிகவும் வலி நிறைந்த கொடிய மரணமாக இருக்கும். இதற்கு சிறந்த உதாரணம் துரியோதனன் ஆவான். அவன் வாழ்வில் புரிந்த பெரும்பாவங்களும், அவனின் சுயநலமும்தான் பீமனின் கைகளால் அவனின் தொடைகள் பிளக்கப்பட்டு நன்றாக வேதனையுடன் அவன் உயிர் பிரிய காரணமாக அமைந்தது.

MOST READ: உலகத்தின் அழிவு இந்த 5 இடங்களில் இருந்துதான் தொடங்கும் என்று பிரம்மா கூறியுள்ளார்...

மூன்றாவது ரகசியம்

மூன்றாவது ரகசியம்

பொய் கூறுபவர்கள், மற்றவர்களின் நம்பிக்கையை உடைபவர்கள், பாவ காரியங்களில் ஈடுபடுபவர்கள் போன்றவர்கள் தீமைகளின் உருவமென வேதத்தால் கூறப்படுகிறார்கள். அவர்களின் மரணம் மிகவும் மோசமானதாகவும், அவர்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படும் போது எதிர்பாராத நேரத்திலும் நிகழும். அவர்கள் நினைவுகள் இல்லாத நிலையில்தான் மரணம் அடைவார்கள் என்று கிருஷ்ணர் கூறுகிறார். நினைவுகள் இல்லாத நிலையில் அவர்களால் பேச இயலாது, உதவிகூட கேக்க இயலாமல் தாங்கள் செய்த பாவங்களை எண்ணி எண்ணி வருந்தியே அவர்கள் மரணத்தை நோக்கி செல்வார்கள். மரணத்தின் அறிகுறிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பசியில்லாமல் போகும்

பசியில்லாமல் போகும்

மரணம் நெருங்குபவர்களுக்கு உணவின் மீதான ஆர்வம் குறையும், அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு கூட அவர்களின் ஆசையை தூண்டாது. இது பொதுவா உடல்நிலை சரியில்லாத போது ஏற்படுவதுதான் என்று கூறுவார்கள். ஆனால் நீண்ட கால உணவு மறுப்பு சாதாரணமான அறிகுறி அல்ல, இது அவர்களின் நேரம் முடியபோவதற்கான அறிகுறி ஆகும்.

தெளிவின்றி பேசுதல்

தெளிவின்றி பேசுதல்

மரணம் நெருங்குபவர்கள் எப்போதாவது சம்பந்தமின்றி சிரிப்பார்கள், அப்போது இருக்கும் சூழ்நிலைக்கு சற்றும் சம்பந்தமில்லாது ஏதாவது பேசுவார்கள். ஆதாரமே இல்லாத ஏதாவது ஒன்றை அவர்கள் விருப்பம்போல பேசுவார்கள், அல்லது கடந்த கால நிகழ்வுகளை இப்போது நினைவுகூர்ந்து பேசுவார்கள். இந்த சமயங்களில் உங்கள் மூளைக்கு போதுமான இரத்த ஓட்டமும் கிடைக்காது.

மென்மையாக உணர்தல்

மென்மையாக உணர்தல்

அவர்கள் எந்தவித கடினத்தையும் உணரமாட்டார்கள், சொல்லப்போனால் தன்னை ஒரு சிறகு போல நினைத்து கொள்வார்கள். அவர்களை சுற்றி நடக்கும் எந்தவொரு நிகழ்வும் அவர்களை பாதிக்காது, மறுஉலகத்தின் மீதே அவர்களின் சிந்தனைகளும், பேச்சுக்களும் இருக்கும்.

MOST READ: தினமும் தேனுடன் இந்த ஒரு பொடியை சேர்த்து சாப்பிடுங்க..! அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: spiritual
English summary

3 secrets of death by Lord Krishna

Lord Krishna in Garud Purana has explained in detail, on how an individual’s death depends on his ‘Karma.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more