For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன?

By Mahibala
|

ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மிகப்பெரிய சாதனையாகவும் ஆச்சர்யமாகவும் பார்க்கின்ற விஷயம் என்னவென்றால், ஜீவ சமாதி என்ற வார்த்தை தான் அது. சாதாரணமாக கோவிலுக்குப் போகிறவர்கள், தீவிர கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களாக இருந்தாலும் கூட ஜீவ சமாதி, முக்தி என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்கிற பொழுது பெரிய பயம் ஒன்று தொற்றிக் கொள்ளும்.

16 Years Boy Jeeva Samadhi By His Parents

பொதுவாக ஜீவசமாதி என்பது ஆன்மீகத்தில் கரைதேர்ந்த அதிக நாட்கள் உயிர் வாழ்ந்து, இந்த மனிதப் பிறவி போதும் என்ற பக்குவத்திற்குப் பின்னர் தன்மை ஜீவ சமாதி செய்துவிடும்படி சொல்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்மீகமும் ஜீவசமாதியும்

ஆன்மீகமும் ஜீவசமாதியும்

அதற்கு அவர்களுடன் இருப்பவர்கள், அவர்களுடைய சீடர்கள் அதை ஆன்மீக முறைப்படி செய்வார்கள். சில ஆன்மீகப் பெரியோர்கள் இன்னும் வித்தியாசமாக யாரிடமும் சொல்லாமல் ஜீவ சமாதி (தண்ணீரில் உயிர் கரைந்து போதல்) அடைந்து விடுவார்கள்.

ஆனால் அந்த ஆன்மீக விதிகளையும் மீறி, ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட வெறும் 16 வயதே ஆன சிறுவனை அவனுடைய பெற்றோரே ஜீசமாதி செய்து வைத்த சம்பவம் ஒன்று தற்போது நடந்துள்ளது. அது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

எங்கு நடந்தது?

எங்கு நடந்தது?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் செண்பகத்தோப்பு ராமநாதபுரம் என்னும் ஊர். இந்த ஊரைச் சேர்ந்தவர் தான் ஹரி கிருஷ்ணன். இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: வரதட்சணைக்காக ஒரு மாசம் பட்டினி போட்டே கொடூரமாக கொன்ற மாமியாரும் கணவரும்...

அவருடைய மகன்

அவருடைய மகன்

ஹரி கிருஷ்ணனுக்கு பதினாறு வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவருடைய பெயர் தனநாராயணன். அவர் நன்கு படிக்கும் மாணவர். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். ஆரணியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நாராயணன் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 465 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

 ஆன்மீக சிந்தனை

ஆன்மீக சிந்தனை

சிறுவயது முதலே தந்தைக்கும் ஆன்மீகு ஈடுபாடு இருந்ததால் தன நாராயணணும் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாட்டுடன் வளர்ந்து வந்தார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் தனக்கு மேலும் படிப்பதில் ஆர்வம் இல்லை என்று தன் தந்தையிடம் உறுதியாகக் கூறி, படிக்க மறுத்துவிட்டார்.

MOST READ: இந்த ஏழு புத்தகம் மட்டும் படிச்சிங்கனா போதும்... வாழ்க்கையில நீங்க எங்கயோ போயிடுவீங்க

ஆசிரம சேர்க்கை

ஆசிரம சேர்க்கை

படிப்பை விட்டுவிட்டு தான் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபடப் போவதாகவும் அதற்கு உதவி செய்யுமாறும் நாராயணன் தன் தந்தையிடம் கேட்க, அவரும் வேலூர் மாவட்டத்தில் உள்ள திமிரி வெங்கடாபுரம் சிவானந்த ஆசிரமத்தில் சிவானந்த பரமஹம்சரின் வழிவந்த பழநி என்னும் ஆன்மீகப் பெரியோருக்கு சீடராகச் சேர்ந்து ஆன்மீகப் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இமயமலை தியானம்

இமயமலை தியானம்

இந்நிலையில் தான் இமயமலைக்குச் சென்று தியானம் செய்யப் போவதாக தன் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார் நாராயணன். அதற்கு அவருடைய தந்தையோ நீ சிறுவன். உன்னால் அங்கே தனியாக சென்று தியானமெல்லாம் இருக்க இயலாது என்றுகூறி அனுமதி மறுத்திருக்கிறார்.

MOST READ: எப்சம் உப்பு பத்தி தெரியுமா? அத எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க

ஜலசமாதி

ஜலசமாதி

இமயமலை செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 24 ஆம் தேதி வாக்கில் தன்னுடைய தந்தைககு செல்போனில் தான் ஜலசமாதி அடையப் போகிறேன். அந்த முடிவை தான் எடுத்துவிட்டேன் என்று கூறிவிட்டு, தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டில் உள்ள கிணற்றில் குதித்திருக்கிறார் நாராயணன்.

பத்மாசன நிலை

பத்மாசன நிலை

நாராயணன் கிணற்றில் குதித்த சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்க, அவர்களும் வந்து நாராயணனை கிணற்றில் இருந்து மீட்டிருக்கிறார்கள். இதில் இபரிய ஆச்சர்யம் என்னவென்றால் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட போது, நாராயணன் அமர்ந்தபடி பத்மாசன நிலையிலேயே மீட்கப்பட்டிருக்கிறார் என்பது தான் அதிசயமாக எல்லோராலும் பார்க்கப்பட்டது.

MOST READ: மருதாணியை மட்டும் வெச்சு எப்படி ரொம்ப அடர்த்தியா முடி வளர்க்கலாம்? பார்த்து தெரிஞ்சிக்கங்க...

ஆன்மீக சோதனை

ஆன்மீக சோதனை

எல்லோருடைய ஆச்சர்யத்தையும் தாண்டி, மருத்துவமனையில் நாராயணன் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. அதன்பின், நாராயணனின் குருவான பழநி வந்து பரிசோதித்துப் பார்த்து, இது மரணம் அல்ல. மரணமில்லா பெருவாழ்வு, முக்தி என்று கூறி நாராயணனுக்கு சொந்தமான இடத்திலேயே ஜலசமாதி செய்வதற்கான ஏற்பாடு செய்து, ஜீவசமாதி செய்து வைத்திருக்கிறார்.

MOST READ: எதார்த்த சினிமாவின் நாயகன் இயக்குநர் மகேந்திரன் பற்றிய சுவாரஸ்ய நினைவுகள்

பெற்றோர்கள் வழிபாடு

பெற்றோர்கள் வழிபாடு

தன்னுடைய 16 வயது மகனுக்குத் தாங்களே ஜீவசமாதி செய்து வைத்தது மட்டுமின்றி அதை தினமும் வழிபட்டு வரும் சம்பவம் அந்த சுற்று வட்டாரப் பகுதியில் வேகமாகப் பரவ, அது காவல்துறை வரைக்கும் சென்றது.

காவல்துறை விசாரணை

காவல்துறை விசாரணை

அந்த சிறுவனை சாமியாருக்கு அறிமுகம் செய்து வைத்த பக்கத்து ஊர் நபரையும் பழநி என்னும் நாராயணனின் குருவையும் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது. அந்த சிறுவனின் ஜீவசமாதி அடைந்த உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

MOST READ: மகளின் அழகான மார்பை கண்டு பொறாமை கொண்ட தாய் அயர்ன் பாக்ஸால் பொசுக்கிய கொடூரம்

MOST READ: இணையத்தில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்கள்... பார்த்து விசில் அடிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

16 Years Boy Jeeva Samadhi By His Parents

A 16 year old boy Dhana Narayanan was maded jeeva samathi near ... When the boy had already died, where is the question of Jeeva Samadhi.
Story first published: Tuesday, April 23, 2019, 16:02 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more