For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் இந்த ஜூலை மாதம் எப்படியிக்கும்? இந்த மாத அதிர்ஷ்டசாலி யார்?...

|

தடங்களை தாண்டி செல்ல எப்போதும் விடாமுயற்சியுடன் போரிடும் 12 ராசி அன்பர்களே! நீங்கள் பிறர் உதவி இன்றி கெளரவமாக வாழ்வதையே உங்கள் குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள் . படைப்பாற்றல் திறனை வளர்த்து கொள்ள விரும்பும் உங்களுக்கு பொறுமை என்பதே இருக்காது.

உங்கள் ராசி நாதன் செவ்வாய் மற்றும் பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பால் நீங்கள் ஆளப்படுகிறீர்கள். இதனால் தான் நீங்கள் உற்சாகமானவர்களாகவும் கோபக்காரர்களாகவும் இருக்கிறீர்கள்.

இந்த 2018 ஆம் ஆண்டின் ஜூலை மாத ராசி பலன் படி உங்களுக்கு என்ன சொல்கிறது என்பதை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகும். செய்யும் வேலைகளில் புதிய புதிய யுக்திகளைக் கையள்வீர்கள். அதனால் அதிக லாபங்கள் உண்டாகும். வீடு, மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் ஏற்படும். தாய்வழியிலான உறவுகளுடன் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் எந்த முயற்சிகளும் வீண் போகாது. அதற்கேற்ற தனவரவுகள் உண்டாகும். பங்காளிகளால் அனுகூலமான சூழல்கள் ஏற்படும். கடன்களைக் குறைப்பதற்கான எண்ணங்கள் உங்களிடம் அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகளில் இருக்கிறவர்கள் பணிபுரியும் இடங்களில் மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவு உண்டாகும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். வழக்கு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நினைத்த முடிவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த இன்னல்களைக் குறைக்க முயற்சி செய்வீர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

வீட்டினுடைய வருமானத்தை அதிகரிப்பதற்கான எண்ணங்களும் முயுற்சிகளும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்ளுடைய ஆதரவும் அனுகூலமான சூழலும் உண்டாகும். விவசாய வேலைகளில் எதிர்பார்த்த லாபங்கள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் நிதானமாக இருக்க வேண்டும். யாருக்கும் எந்த வாக்குறுதிகளையும் கொடுத்து விடலாம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு தங்களுடைய திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியப் பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகளில் கால தாமதங்கள் ஏற்படும். பெண்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். மாணவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.

மிதுனம்

மிதுனம்

நீங்கள் நினைத்திருந்த முயற்சிகளில் உங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். அதனால் வீட்டிலும் உங்களுக்கும் மன திருப்தி உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளைக் கண்டறிந்து அதை களைய முயற்சி செய்வீர்கள். பயணங்களின் மூலம் ஆதாயங்கள் உண்டாகும். உங்கள் மனதுக்கு விரும்பிய பொருள்களை வாங்கி, மகிழ்வீர்கள். வீட்டில் உள்ள பெரியோர்களிடம் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். உடன் பிறப்புகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். குழந்தைகளிடம் கொஞ்சம் கனிவுடன் தெரிந்து கொள்ளுங்கள். எதிர்பாலினத்தவர்கள் மூலம் சாதகமற்ற சூழல் உண்டாகும். பணியிடங்களில் மற்றவர்களின் பணிகளில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் சற்று அமைதியைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். பெண்கள் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை வழிபட்டு வரவும்.

கடகம்

கடகம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள் நினைத்த செயலை முடிக்க கொஞ்சம் காலதாமதம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் சிறுசிறு மனக்கசப்புகள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வெளியூர் பயணங்கள் செல்லுகிற போது, உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. உறவினர்களிடம் சற்று அனுசரித்துச் செல்லவும். தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை யாிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். எதிர்பாராத சுப செய்திகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்ட பணியை பல தடைகளை கடந்து செய்து முடிப்பீர்கள். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். பொதுப்பணிகளில் சாதகமான சூழல் அமையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வர்த்தக வியாபாரங்களில் ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள்.

சிம்மம்

சிம்மம்

இணைய தளம் சம்பந்தப்பட்ட பணிகளில் மேன்மை உண்டாகும். செலவுகளைக் குறைத்து சேமிப்பை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயித்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களுடைய அறிமுகத்தால் பண விரயங்கள் உண்டாகும். வாக்குறுதிகளைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கேளிக்கையைக் குறைத்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளுக்காக பாராட்டப்படுவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு சாதகமான பலன்களும் பயணங்களும் உண்டாகும். சாப்பாடு விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் தேவையற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. புதன்கிழமை தோறும் பெருமாளை வழிபட்டு வாருங்கள்.

கன்னி

கன்னி

செய்யும் தொழிலில் மேன்மையான சூழல்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் தங்களுடைய மதிப்பு உயரும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பெண்கள் மூலமாக உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். அனைவருடைய பாராட்டையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு மிக சிறப்பான சூழல்கள் வாய்க்கும். புதுப்புது கலைகள் கற்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோரை அனுசரித்துச் செல்லுங்கள். புதிய வீட்டு மனைகள் வாங்குவதற்கான பொருள் உதவிகள் கிடைக்கும். தொழிலில் உங்களுடைய முழு திறமைகளும் வெளிப்படும். பேச்சுத் திறமையினால், பலன்கள் உண்டாகும். கற்பனை வளம் பெருகும். பண வரவு அதிகரிப்பதால், மேன்மையான சூழல்கள் உணடாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் குடும்பத்தோடு இன்பச் சுற்றுலாக்கள் செல்ல திட்டமிடுவீர்கள். பணியிட மாற்றங்கள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. இதுவரை தடைபட்டு வந்த அத்தனை தடைகளும் விலகி நன்மை பயக்கும்.

துலாம்

துலாம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் உண்டாகும். பணவரவுகள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். ஆன்மீகப் பயணங்களில் ஈடுபடுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் தீரும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். உடன் வேலை செய்பவர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கான மதிப்புகள் உயரும். பெரியோர்களிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். கணவன், மனைவிக்கு உள்ளாக அனுசரித்துச் செல்லுங்கள். மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். துர்க்கையை வழிபடுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

மனதில் நினைத்துவந்த செயலை நிதானத்துடன் செயல்படுத்துங்கள். புதிய முயற்சிகளில் சில தடைகள் ஏற்பட வாய்ப்ப உண்டு. பணவரவில் ஏற்ற இறக்கமான சூழல்கள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாக முடிவுகளில் கவனமாக இருங்கள். பணிபுரியும் இடங்களில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். சுய தொழில் புரிகிறவர்களுக்கு தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தன வரவுகள் உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு போதிய வாய்ப்புகள் உண்டாகும். அதற்கான விநாயகரை வழிபட்டு வாருங்கள்.

தனுசு

தனுசு

புதிய நபர்களுடைய அறிமுகத்தால் எதிர்பாராத அனுகூலங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உங்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லுங்கள். வெளியிடப் பயணங்களால் உங்கள் தொழிலுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வீட்டில் பிள்ளைகள் மூலமாக பல ஆதாயங்கள் ஏற்படும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வுக்காக வாய்ப்புகளும் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை. மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து விஷயங்களில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றும். கால பைரவர் வழிபாடு மேற்கொள்வது நலம்.

மகரம்

மகரம்

நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகளால் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். புதிய நபர்களாக அறிமுகம் ஆகிறவர்களிடம் குடும்பத்தில் உள்ள விவகாரங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளாதீர்கள். செய்தொழில் சம்பந்தப்பட்ட உங்களுடைய புதிய யுக்திகளால் சிறந்த அனுகூலங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். வீட்டில் உள்ள குழந்தைகளால் உங்களுக்குப் பெருமை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வீர்கள்.

கும்பம்

கும்பம்

தந்தைவழியிலான உறவினர்களால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் வந்து போகும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். குடும்பத்தில் கொஞ்சம் கலகலப்பான சூழல்கள் உருவாகும். புதிய முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வந்து போகும். தடைகளைக் களைந்து நினைத்த இலக்குகளை அடைவீர்கள். ஞாபக மறதியால் சில சில அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். திருமண முயற்சிகளில் சுபமான செய்திகள் வந்து சேரும். உங்களுடைய உடைமைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீட்டில் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தொழில் முனைவோருக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் பிறிரிடம் பாராட்டப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் பல்வேறு சாதகங்கள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம்

மீனம்

உறவினர்களின் மூலம் ஆதாயங்கள் உண்டாகும். உங்களுடைய புதுப்புது முயற்சிகளால் உங்களுக்கு திருப்திகரமான சூழல்கள் உண்டாகும். உங்களுக்கு இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறைய ஆரம்பிக்கும். தடைபட்டு வந்த காரியங்களை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பயணங்களின் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரியவர்களுடைய ஆதரவினால் சாதகமான சூழ்நிலை அமையும். பணிபுரியும் இடங்களில் உடன் பணிபுரியும் ஊழியர்களால் சாதகமான சூழல்கள் ஏற்படும். உங்களுடைய கருத்துக்களுக்கு வெளியிடங்களில் மதிப்புகள் உயரும். தொழில் கூட்டாளிகள் உங்களுடைய எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். பண வரவு விஷயங்களில் கொஞ்சம் இழுபறி நிலை உருவாகும். கௌவரப் பதவிகளால் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். குரு பகவானை வழிபாடு செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Monthly Predictions For Aries Zodiac For july 2018/2018 ஆம் ஆண்டுக்கான ஜூலை மாதம் மேஷ ராசி பலன்கள்

zodiac signs believe in leading and are known to volunteer for any cause without worrying about the future consequences. They are not the ones to be on the back foot, even if the decision taken turns out to be wrong. Hence, understanding on what is coming their way for the entire month is important.
Story first published: Monday, July 2, 2018, 5:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more