Just In
- 2 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 4 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 5 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 9 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- News
உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Sports
இந்தா வந்துட்டேன்.. 13 சிக்ஸர்கள்.. மூன்றே போட்டிகளில் டி20 அரங்கை அதிர வைத்த கோலி!
- Movies
"பேப்பர் பாய்" பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்
- Finance
பலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..!
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஐப்பசி பொறந்தாச்சு... ஐய்யப்பன் கோவில் நடையும் திறந்தாச்சு... இன்னைக்கு யாருக்கு என்ன நடக்கும்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
வேலை நிமித்தமாக மேற்கொள்ளும் வெளியூர் பயணங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். நீங்கள் செய்கின்ற தொழிலில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்தீர்கள் என்றால், நீங்கள் எதிர்பார்த்ததைவிட, அதிக லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த சுப செய்திகள் கைகூடி வரும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர்அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி, நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
உங்களுடைய நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த பணவரவு உங்களுடைய கைகளுக்கு வந்து சேரும். உறவினர்களுக்கு மத்தியில், உங்களுடைய செல்வாக்குகள் உயரும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான பலன்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
உங்களுடைய வீட்டில் உள்ளவர்களிடம் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்த்துவிட்டு, கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட உங்களுடைய புதிய முயற்சிகளினால் நன்மை உண்டாகும். ஆனாலும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுடன் பிறந்த உடன் பிறப்புகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்துவிடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சந்திராஷ்டமம் நடப்பதால், வாகனப் பயணங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமாகவும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
நண்பர்களின் மூலமாக சுப செய்திகள் வந்து சேரும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் வந்து போகும். போட்டிகளில் ஈடுபடுகின்ற போது, கொஞ்சம் கவனமாக இருத்தல் வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
உடல் ஆரோக்கியம் சீராகும். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். வேளாண்மைத் துறையில் உண்டாகின்ற தேக்க நிலைகள் நீங்கி, வளம் பெருகும். நட்பு வட்டாரங்கள் பெரிதாகும். மனதுக்குள் இருநு்து வந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.
MOST READ: இத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்து வந்த இழுபறிகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களிடம் பேசுகின்ற போது, நிதானத்துடன் பேசுங்கள். பயணங்களின் மூலமாக அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
வீட்டில் கால்நடைகளின் மூலமாக லாபம் உண்டாகும். மனதுக்குள் தோன்றிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். தாய் வழியிலான உறவினர்களால் பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும். செய்கின்ற வேலைகளில் கவனம் கொண்டிருப்பது அவசியம். புதிய நபர்களுடைய வருகையினால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் பதவிகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன் பணிபுரிகின்றவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டும். புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான நாளாக அமையும். கடிதப் போக்குவரத்தின் மூலமாக உங்களுக்கு சாதகமான செய்திகள் காதுகளுக்கு வந்து சேரும். விவாதங்களில் ஈடுபடும்போது, கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றியதால் உங்களுடைய புகழ் அதிகரிக்கும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். பெரியுார்களுடைய ஆசிர்வாதத்தினால், பரம்பரை சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்னைகள் சுமூகமாக முடியும். உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
மனதுக்குள் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். விவாதங்களில் ஈடுபடும் போது, உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். செய்கின்ற தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடைய முழு ஆதரவும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.
MOST READ: அந்தப்புரத்தில் உள்ள ராணிகளை கவர இந்திய ராஜாக்கள் என்னென்ன செய்தார்கள்னு தெரியுமா..?

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
வீட்டில் உள்ள பிள்ளைகளினால் உங்களுக்கு நல்ல ஆதாயங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதன் மூலமாக உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சர்வதேச வாணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். தூர தேசங்களில் இருந்து வந்த பிரச்னைகளும் தீரும். வீட்டுக்குத் தேவையான பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நெருங்கிய உறவினர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.