For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குருபெயர்ச்சியின் தாக்கத்தால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர் யார்?

|

12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அதை நாம் மிகச் சாதாரணமாக எண்ணுவதும் மிகத் தவறு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு வந்து சேரும். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் வரும். அதனால் மகிழ்ச்சி பெருகும். செய்கின்ற செயல்களில் கொஞ்சம் கவனத்துடன் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுதும் சற்று எச்சரி்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அல்து அவற்றைக் கையாளும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். நெருங்கிய நண்பர்களிடம் தேவையில்லாமல் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். உறவினர்களின் மூலமாக மனக்கவலைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

உடன் பிறந்த சகோதர, சகோதரர்களின் ஆதரவினால் தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இதுவரை இருந்து வந்த சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் நீங்கி, மனம் மகிழ்ச்சி உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது அவசியம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

தொழில் சம்பந்தமாக நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடனுதவிகள் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள்சேர்க்கை, வாகனச்சேர்க்கை உண்டாகும். பொது தொண்டில் ஈடுபடுபவர்கள் பிறரால் புகழப்படுவீர்கள். அறிவுத்தேடல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.. பணியில் மேன்மை உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகாது. பொறுமை தேவைப்படும் நாள். எந்த விஷயமும் வெற்றி உண்டாக கால தாமதமாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையோடு நடந்து கொள்ளுங்கள். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - பச்சைநிறம்.

MOST READ: எந்த குறையும் இல்லாத சருமம் வேண்டுமா? அப்ப இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க...

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பயணங்களால் தேவையில்லாத விரயச் செலவுகள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு பாசன வசதியால் லாபம் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான நாள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சாதுர்யமான பேச்சுக்களால் தன லாபம் உண்டாகும். நண்பர்களின் வாயிலாக பொருளாதாரம் மேன்மையடையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணியாளர்கள் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - அடர் மஞ்சள்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

மனதுக்குள் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். விவாதங்களில் ஈடுபடும் போது, உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். செய்கின்ற தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடைய முழு ஆதரவும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி

வீட்டில் உள்ள பிள்ளைகளினால் உங்களுக்கு நல்ல ஆதாயங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதன் மூலமாக உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

MOST READ: முள்ளங்கி ஜூஸ் குடிச்சா உடல் எடை குறையும் என்பது தெரியுமா?

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சர்வதேச வாணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். தூர தேசங்களில் இருந்து வந்த பிரச்னைகளும் தீரும். வீட்டுக்குத் தேவையான பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நெருங்கிய உறவினர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்

வீட்டில் பிள்ளைகளின் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமைகளும் பொறுப்புகளும் அதிகரிக்கும். வீடு மற்றும் மனைகளின் வாயிலாக லாபங்கள் உண்டாகும். உங்களுடைய திறமையான பேச்சுக்களினால் லாபங்கள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவுவது நல்லதுதான். ஆனால் அதிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Horoscope For Wednesday 03 October 2018

Though the twists and turns cannot be predicted, your stars may certainly tell you how to deal with them.There are twelve zodiac houses and each of us belongs to a zodiac house according to the date and time of our birth. The cosmos has different planets which revolve around our planet and make their presence felt in different zodiac signs.
Story first published: Wednesday, October 3, 2018, 7:34 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more