Latest Updates
-
சனிபகவான் வக்ர நிலை அடைவதால் டிசம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் இவங்கதான் -
தக்காளியுடன் இந்த பொருளை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
செட்டிநாடு ஏழுகறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இந்த மாதிரி நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -
இந்த 5 ராசிகளில் பிறந்தவர்களின் தன்னம்பிக்கை மலையை விட பெரிதாம் - இவங்க நினைச்சதை சாதிக்காம விடமாட்டாங்க -
10 வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி அருமையான புலாவ் செய்யுங்க - வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க -
உதட்டில் முத்தம் கொடுக்கும் போது கண்கள் ஏன் தானாக மூடுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு ரகசியம் இருக்கா? -
புதன் மிதுன ராசிக்குள் நுழைவதால் உருவாகும் பத்ர யோகம் இந்த 3 ராசிகளை ஜெயிக்கிற குதிரையாக மாத்தப்போகுதாம் -
இந்த 4 விஷயங்களை பின்பற்றுபவர்கள் சீக்கிரம் கோடீஸ்வரர் ஆவார்களாம் - சாணக்கியர் சொல்லும் வாழ்க்கை ரகசியம் -
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 07 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு விபத்து நடக்க வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
ஃபேஸ்புக்கில் நடிகையின் தவறான புகைப்படத்தை பரப்பிய விஷமிகள்!
ஃபேஸ்புக்கில் நடிகையின் தவறான புகைப்படத்தை பரப்பிய விஷமிகள்!
முகநூலில் க்ரூப் மற்றும் பக்கங்களில் லைக்ஸ் மற்றும் ரீச் அதிகரிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல அவற்றின் அட்மின்கள்.
உதவி செய்வது, நன்கொடை அளிப்பது, மனித நேயத்துடன் நடந்துக் கொள்வது போன்ற புகைப்பட்னகள், பதிவுகள், கதைகள் பகிர்ந்தால் நிறைய லைக்ஸ், கமெண்டுகள், ஷேர்கள் கிடைக்கின்றன. இதனால் பேஜ் ரீச் மற்றும் க்ரூப்கள் பிரபலம் அடையும்.

ஆகவே, நிஜமாகவே சமூகத்தில் நடக்கும் நல்லவை, உதவிகள், மனித்தன்மை வாய்ந்த நிகழ்வுகளை பகிர்வதற்கு பதிலாக, யாரேனும் சாமானிய மக்களின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அதற்கு ஒரு கதை கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ஆனால், சீனியர் சிட்டிசன் ஃபேமிலி எங்க முகநூல் க்ரூப்பில் ஒருவர் தவறாக ஒரு நடிகையின் படத்தை பதிவிட்டு ஒரு கதைக்கட்டி விட்டிருக்கிறார். அதை உண்மை என்று நம்பி வைரலாக பரப்பி வருகிறார்கள்.

பதிவு!
இவர் டாக்டர் நந்தினி, ஒவ்வொரு வாரமும் இரண்டு நாள் பொள்ளாச்சியின் கிராம பகுதியில் இலவசமாக மருத்தவம் அளித்து வருகிறார்., என்று புகழந்து ஒரு முதியவர் சீனியர் சிட்டிசன் ஃபேமிலி என்ற முகநூல் க்ரூப்பில் பதிவிட்டு இருக்கிறார்.

யாரிந்த நந்தினி?
ஆனால், டாக்டர் நந்தினி என்ற பெயரில் அவர் பதிவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் தென்னந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை டிம்பிள் சோப்பட். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் நடித்து அறிமுகமான திரைப்படம் யாருடா மகேஷ் என்பதாகும்.
Image Source: Indian Cinema Gallery / Facebook / Senior Citizen Family

பாவம் மக்கள்!
இந்த படத்தில் / பதிவில் இருப்பவர் ஒரு நடிகை என்பதை அறியாமல், பலரும் கமெண்டுகளில் அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்...
இப்படியான சேவை நாட்டை மட்டுமின்றி, மனித தன்மையும் வளர செய்கிறது என்று ஒரு பாராட்டி கமெண்ட் செய்திருக்கிறார்...

வாழ்த்து!
பாலக்காட்டில் இருந்து ஒருவர் இவரை வாழ்த்தி கமெண்ட் செய்தது மட்டுமின்றி, ஏதேனும் உதவி வேண்டும் என்றால், என்னை அணுகவும் என்று தன் அழைப்பேசி எண்ணையும் பகிர்ந்துள்ளார்.

உன்னத சேவை
இதுவொரு உன்னதமான, சிறந்த சேவை. சிறந்த வேலை. உங்களை ஆண்டவன் ஆசிர்வதிப்பார். உங்கள் வழியில் பலர் பின்தொடர வேண்டும் என்று சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

விரும்புகிறேன்...
இவரை போன்ற நிறைய மருத்துவர்கள் வேண்டும் என்றும். ஒருவர் இந்த டாக்டர் நந்தினி குறித்து நான் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். முகநூல் வழியாக மட்டுமின்றி, அவரது மனிதத்தை அதிகம் பாராட்ட விரும்புகிறேன். என்று தனது முகநூல் முகவரியை அளித்துள்ளார்.

நோயற்ற நாடு!
இத்தகைய விஷயங்களை அனைத்து மருத்துவர்களும் பின் தொடர்ந்தால், நம் நாடு நோயற்ற நாடாகிவிடும் என்று ஒருவர் கூறி, இந்த டாக்டர் நந்தினிக்கு சல்யூட் செய்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

பணம் தேவை!
பணம் தேவை இல்லை என்று இருந்துவிட வேண்டாம். ஏழை மக்களுக்கு உதவ உங்களுக்கு நிறைய பணம் தேவை. உங்களை கடவுள் ஆசிர்வதித்து அருள்வார். நீங்கள் ஆசிர்வாதத்துடன் இருக்க வேண்டும் என்று பலரும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

பெருமை!
உதவி நாடுபவர்களை தேடி சென்று உதவும் உங்களை போன்றவர்களை கண்டு நான் பெருமைப்படுகிறேன் என்று ஒருவர் கூறி இருக்கிறார். இப்படி பலரும் பலவிதமாக டாக்டர் நந்தினி என்ற பெயரில் பரவி வரும் நடிகை டிம்பிள் பாராட்டி வருகிறார்கள்.

கவனிக்கலையா?
ஆனால், டாக்டர் நந்தினி படத்தை ஒருவராவது உற்று கவனத்திருந்தால், இதுவொரு போலிப் புகைப்படம். படத்தில் இருப்பவர் டாக்டர் இல்லை, நடிகை என்பதனை அறிந்திருக்கலாம். ஆம்! அந்த படத்தின் மேலும், கீழும் இந்திய நடிகை கேலரி என வாட்டர் மார்க் இருக்கிறது.
இதைக் கூட கவனிக்காமல், இந்த போலி பதிவினை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரலாக பரப்பி வருகிறார்கள்.
சரி! இங்கே கமெண்ட் செய்தவர்களில் பாலர் நல்லதை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் மற்றும் வயதானவர்கள். இவர்களால் இந்த போலிகளை கண்டுப்பிடிப்பது கடினம் தான். ஆனால், இளைஞர்களும் கூட சிலர் இத்தகைய போலிகளை நம்பி ஏமாறுவதை பார்த்தால் தான் வேதனையாக இருக்கிறது.
திருடனாய் பார்த்து திருந்தும் வரையிலும் திருட்டை ஒழிக்க முடியாது. ஆம்! போலிகளாய் பார்த்து திருந்தாவிட்டால் போலியையும் ஒழிக்க முடியாது.



Click it and Unblock the Notifications