Just In
- 8 hrs ago
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- 20 hrs ago
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- 22 hrs ago
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- 22 hrs ago
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
Don't Miss
- News
திமுக மாவட்டச் செயலாளர் பணம் கேட்கிறார்... ஸ்டாலினிடம் முன்னாள் எம்.எல்.ஏ.புகார்
- Movies
3 நாளுக்குப் பிறகு வேலையை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்... மாமாங்கமும் வந்தாச்சாம்!
- Sports
10வது முறை.. வெஸ்ட் இண்டீஸ் அணியை புரட்டிப் போட இந்தியா ரெடி!
- Automobiles
காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்
- Finance
அமெரிக்கா சொன்ன நல்ல செய்தி.. இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா..!
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிள்ளையார் தான் பிரம்மச்சாரியா? ஒரு பிரம்மச்சாரி பெண் தெய்வமும் இருக்கு பாருங்க... (படங்கள் உள்ளே)
பிரம்மச்சரணி அல்லது தேவி யோகினி என்பவர் ஸ்ரீ துர்கா தேவியின் இரண்டாவது திருவுருவ அவதாரமாகும்.
ஒன்பது நாள் கொண்டாடப்படும் இந்த மகா நவராத்திரியின் இரண்டாவது நாள் பிரம்மச்சரணிக்கு உகந்த நாளாகும். இந்நாளில் தன்னை மனதார வேண்டும் பக்தர்களுக்கு பேரின்பத்தையும் அருளையும் அள்ளித் தருகிறார்.

அன்பும் அமைதியின் மறுஉருவம்
இந்த அம்மன் பார்ப்பதற்கு அழகான வெள்ளை புடவையில் ஆரஞ்சு பாடருடன் தனது இடது கையில் கமண்டலமும் வலது கையில் ரோஜா பூக்களையும் கொண்டு தன்னுடைய அன்பும் அமைதியும் ஒருங்கே பெற்ற உருவத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
MOST READ: பெண்கள் ஏன் சபரிமலைக்கு போகக்கூடாது? அனிதா குப்புசாமி சொல்லும் காரணங்கள்...

நவராத்திரி
இந்த அம்பிகை பற்றி கூறப்படும் கதை ஒரு பெண்ணின் பலத்தையும் சக்தியையும் காட்டுகிறது. சிவபெருமானை திருமணம் செய்து கொள்ள விரும்பிய பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி கடும் தவத்தில் ஈடுபடுகிறார். இவர் திருமணமாகாத நிலையில் இருப்பதால் இவரை பிரம்மச்சரணி என்று அழைக்கின்றனர். ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சிவபெருமானின் மீதுள்ள பிரியம் காரணமாக தன் தவத்தை புரிந்து வந்தார்.
கடும் தவத்தின் போது அவர் வெறும் வில்வ இலைகளையும், பழங்களையும் மட்டுமே சாப்பிட்ட வந்த அவர் ஒரு காலகட்டத்தில் உணவையே விடுத்து முழு தவத்தில் இறங்கலானார். இந்த தவத்தில் மெய் மறந்த பிரம்ம தேவன் பிரம்மச்சரணி முன் தோன்றி கடவுள் சிவபெருமானையே மணந்து கொள்ளும் வரத்தை அவருக்கு வழங்கினார் என்ற கதை கூறப்படுகிறது.

பெருமை
இந்த நவராத்திரியின் இரண்டாம் நாளில் நீங்கள் பிரம்மச்சரணியை வணங்கி வந்தால் எந்த துன்பங்களும் உங்களை தொந்தரவு செய்யாது. பல கஷ்டங்களை மனம் தளராமல் கடந்து வந்தவர் பிரம்மச்சரணி. அதனால் தன் பக்தர்களுக்கு வரங்களை அள்ளி வழங்குகிறார். உங்களின் பக்தி, தியாகம், உறுதியான மனது இருந்தால் போதும் அவரின் அருள் உங்களுக்கு என்றென்றும் கிடைக்கும்.
MOST READ: நவாராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? மகிசாசுரன் பராசக்தியால் எதற்காக கொல்லப்பட்டான்?

சக்தியின் மறுஉருவம்
மாதா பிரம்மச்சரணி துர்கா தேவியின் இரண்டாவது சக்தி வாய்ந்த அவதாரம் ஆகும். இவள் அமைதி, மகிழ்ச்சி, பக்தி மற்றும் உறுதிப்பாட்டை குறிக்கும் அவதாரம். அவர் சிவன் மீது கொண்ட உண்மையான பக்தியும் தியாகமும் தான் அவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தவம் புரிய வைத்ததது. இந்த ஒன்பது நாள் நவராத்திரியிலும் பக்தர்கள் விரதம் இருந்து வழிபட்டு வருவர். இதில் இரண்டாம் நாளில் பிரம்மச்சரணியை வழிபட்டால் உங்கள் கடமைகளுக்கு குறுக்கே வரும் அனைத்து தடைகளையும் போக்கி உங்களை அவர் வழிநடத்துவார்.

வழிபாட்டின் முக்கியத்துவம்
பிரம்மச்சரணி என்ற பெயருக்கு அறிவை உடைய பெண் என்று அர்த்தம். இவரை நோக்கிய வழிபாடு பக்தர்கள் தங்கள் குறிக்கோளை அடைவார் என்பதை காட்டுகிறது. இவரை வணங்கி வந்தால் நம் மன நிலையிலிருந்து விலக மாட்டோம்.

தேவி பிரம்மச்சரணி மந்திரம்
நீங்கள் பிரம்மச்சரணியின் அருளை பெற கீழ்க்காணும் மந்திரத்தை பாராயணம் செய்து வாருங்கள்.
தாதானா
கார்பத்மபாய மக்ஷ்மலா
கமண்டல!
தேவி பிரசாத் மாயி
பிரம்மச்சாரியாணு நம!

பூஜை வழிபாடு
நீங்கள் பிரம்மச்சரணி சிலைக்கு ஆர்த்தி எடுப்பதற்கு முன் பால், தயிர் மற்றும் தேன் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்த பிறகு பிரசாதங்களை படைக்க வேண்டும். துர்கை அம்மனுக்கு அளிக்கும் பிரசாத வகைகளையே இவருக்கும் அளிக்கலாம். பிறகு இரண்டு கைகளாலும் மலர்களை அள்ளிக் கொண்டு மேலே கூறிய மந்திரத்தை ஜெபித்து அவர் பாதத்தில் அர்ச்சிக்க வேண்டும். அப்புறம் பஞ்சாமிர்தம், பூக்கள், அரிசி மற்றும் குங்குமம் இவற்றை கொண்டும் அர்ச்சிக்க வேண்டும்.
சிவப்பு பூக்களால் கோர்க்கப்பட்ட மாலை மற்றும் தாமரை பூவை இந்த அம்பிகைக்கு அணிவிக்கலாம். நெய்யால் விளக்கு போட்டு ஆர்த்தி எடுத்து மனதார இவரை வேண்டினால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை செழிப்பாகும்.
MOST READ: சிவனிடம் எந்தெந்த வேண்டுதலுக்கு என்னென்ன மலர்களை வைத்து வழிபட வேண்டும்?

விருப்பமான பிரசாதம்
சர்க்கரை பிரம்மச்சரணிக்கு மிகவும் பிடித்தமான பிரசாதமாகும். சர்க்கரையை படைக்கும் போது குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.
எனவே நவராத்திரி இரண்டாம் நாள் பிரம்மச்சரணியை வழிபட்டு உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்.