Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
கிரியேட்டிவ் என்ற பெயரில் பெண்களை வக்கிரமாக காட்சிப்படுத்திய விளம்பரங்கள்!
பொருட்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பெண்கள் உடைகளை கழற்ற வேண்டுமா?
காண்டம் / ஆணுறை விளம்பரத்தில் பெண்ணை கவர்ச்சியாக காண்பிக்கிறார்கள் என்றால்.. சரி! அது குறைந்தபட்சம் ஏற்படையதாக காணலாம். ஆனால், கத்ரீனா கைப் ஒரு பழரச பாட்டிலை விளம்பரப்படுத்தும் போதும் கூட கவர்ச்சியாக தான் வர வேண்டுமா?
காண்டம் விளம்பரங்கள் இரவு நேரங்களில் மட்டும் தான் விளம்பரப்படுத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால், விளம்பரங்கள் டிவிகளில் மட்டும் தான் வருகிறதா? அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் நகரத்தின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் தெரியும் அளவிற்கு பேனர், கட்டவுட் வைத்து கவர்ச்சியை அள்ளித்தெளிக்கும் விளம்பரங்களை குழந்தைகளின் கண்களில் படாமல் எப்படி தடுப்பீர்கள்?
வாசனை திரவியம், பர்கர், ஆண்கள் உடுத்தும் ஷர்ட், பேண்டில் இருந்து, ஜட்டி விளம்பரம் வரை பெண்களை கவர்ச்சி பொருளாக காட்டுவது ஏன்? பெண்களின் ஆடைகளை கழற்றி விளம்பரம் செய்தால் தான் பொருள் மக்களை சென்றடையும் என்ற முட்டாள் தனமான மார்கெட்டிங் யுக்தியை வர்த்தக, விளம்பர நிபுணர்கள் கடைப்பிடிப்பது ஏன்?
இது இந்தியாவில் மட்டுமா? என்றால்... இல்லவே இல்லை. உலகெங்கிலும் பெரும்பாலான நாடுகளில்.. முக்கியமாக வளர்ந்த, வேகமாக வளரும் நாடுகளில் விளம்பரங்களில் பெண்களை திரௌபதி ஆக்குகிறார்கள்.

நகை விளம்பரம்...
நாதன் ஜூவல்லரி என்ற நகைக்கடை விளம்பரத்தில்... கால் மீது கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கும் பெண், ஒரு ஆண் அக்கடையின் நகை ஒன்றினை வாங்கி வந்து பரிசளித்தவுடன் தனது கால்களை அகட்டி உட்கார்வது போல காட்சி படுத்தியுள்ளனர். மோதிரம் என்பது திருமண நிச்சயத்தி குறிப்பது.
ஆனால், திருமணம் என்பது வெறுமென செக்ஸ் வைத்துக் கொள்ள மட்டும் தான் என்று இந்த விளம்பரம் குறிக்கிறதா? இது நகை என்றால் பெண்கள் எதையும் செய்வார்கள் என்ற கண்ணோட்டத்தை உருவாக்குகிறது.
இந்த விளம்பரம் வெளியான பிறகு மக்களால் பெரும் எதிர்மறை கருத்துக்கு ஆளானது. பலரும் இந்த விளம்பரத்தை கேலி செய்து படங்கள் பதிவு செய்திருந்தனர்.

பீர் பாட்டில்!
பீர் பாட்டிலின் முன் ஒரு மாடல் அழகி கவர்ச்சி நிலையில் அமர்ந்திருக்கிறார். இதன் மூலம் இந்த மதுபான நிறுவனத்தின் பீரானது அந்த மாடலை போல வாடிக்கையாளர்களால் விரும்பக்கூடியதாக இருக்கிறது என்று உருவகப்படுத்துகிறார்கள்.

மதுபானம்!
விளம்பரங்களில் பிற பொருட்களுடன் ஒப்பிட்டு தங்கள் பொருளின் தாக்கத்தை, பயனை கூறுவது என்பது பிரபலமான முறை. ஆனால், இந்த மதுபான விளம்பரத்தில், அதன் வடிவம், தாக்கம் மற்றும் பயனை ஒரு கார் மற்றும் நிர்வாண மாடலுடன் ஒப்பிட்டுள்ளனர்.

ஆடைகள்!
உலகின் பிரபலமான ஆடை தயாரிப்பு நிறுவனம் டி அன்ட் ஜி. இந்த நிறுவனத்தில் விளம்பரங்கள் என்று மட்டுமில்லை, பல ஆடை விளம்பரங்களில் பெண்களை கவர்ச்சி பொருளாக தான் காட்டுகிறார்கள். அதிலும் சில ஜீன்ஸ் ஆடை விளம்பரங்களில் பெண்களை அரைநிர்வாணமாக காட்சிப்படுத்துவது பரவலாக காணப்படும் விளம்பரமாக இருக்கிறது.
இந்த விளம்பரத்திலும் கூட, ஆண்கள் பெண்களை கட்டி ஆள்வது போல காட்டப்பட்டுள்ளது. மேலும் சில விளம்பரங்கள் கற்பழிப்பு, இச்சை எண்ணங்களை தூண்டும் வகையிலும் அமைந்திருக்கின்றன. ஆடைகளை விற்க வேறு வழியே இல்லையா என்ன?

விளையாட்டு!
ப்ளே ஸ்டேஷன் 2 விளம்பரத்திற்கும் பிரிட்னி ஸ்பியர்ஸ் உணர்ச்சிகளை தூண்டுவது போல ஒரு கவர்ச்சியான போஸில் காட்சி அளிப்பதற்கும் என்ன ஒற்றுமை? இந்த விளையாட்டு இந்த படத்தை போல கவர்ச்சியாக, ஈர்ப்பாக மயக்கும் வண்ணம் இருக்கும் என்று கூறுகிறார்களா?

கால்வின் கிளைன்
ஆண்களுக்கான ஒரு வாசனை திரவிய விளம்பரத்தில் பெண் நிர்வாணமாக தோன்ற வேண்டும் என்பதின் அவசியம் என்ன? அதிலும் ஆண்கள் மீது பெண்களை பேரார்வம் கொள்ள உதவும் என்று கூறுகிறார்களா? இன்று வரும் பெரும்பாலான வாசனை திரவிய விளம்பரங்களில் பெண்கள் ஒரு கவர்ச்சி பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறார்கள். அதெப்படி ஒரு பெண் வாசனை திரவியம் ஈர்ப்பால் காதல் மற்றும் காம எண்ணங்கள் கொண்டுவிடுவாளா?

பீட்டா!
பெரும்பாலும் விலங்குகளின் தோளில் இருந்து ஆடைகளை உடுத்துவதை எதிர்த்து பீட்டாவால் வெளியிடப்படும் விளம்பரங்கள் அனைத்தும் பெண் ஒருவர் நிர்வாணமாக காட்சியளிப்பது போல தான் இருக்கும். இதை பீட்டா போன்ற சர்வதேச அமைப்புகள் நெடுங்காலமாக பின்பற்றி வருவது கொடுமையான விஷயம். ஒருபுறம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்று நீண்ட காலமாக பெண்களுக்கு எதிராக விளம்பர கொள்கை கொண்டிருக்கிறது பீட்டா.

நிர்வாண தேவதை!
டயர் வால்வ் விற்க ஒரு நிர்வாண தேவதையின் புகைப்படம் எதற்கு. டயர் வால்வ் கேப்புக்கும் நிர்வாண தேவதையையும் எதைக் கொண்டு ஒப்பிடுகிறார்கள். இது எதைக் குறிக்கிறது என்றே தெரியவில்லை...

செக்ஸ்!
சோப்பு, வாசனை திரவியம், மவுத் ஃபிரஷ்னர், ஹேர் கலர் என பல விளம்பரங்களில் செக்ஸுவல் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. ஆண்கள் ஷேவிங் செய்யும் விளம்பரங்களில் கூட பெண்களை ஒரு கவர்ச்சி பொருளாக தான் காண்பிக்கிறார்கள் என்பது கொடுமையிலும், கொடுமை.

மேலாடை இன்றி!
டெனிம் விளம்பரத்தில் மேலாடை இன்றி மாடல், வாசனை திரவியங்கள் விளம்பரத்தில் மேலாடி இன்றி மாடல்... பேட்டரி, ஷேவிங் க்ரீம், மதுபானம் என்று எதற்கு எடுத்தாலும் பெண்களை மேலாடை இன்றி காட்சிப்படுத்துவது ஏன்? பெண்களை மேலாடை இன்றி காட்டினால் தான் பொருள் விற்குமா??

பர்கர்!
சாதாரண பர்கர் விளம்பரத்திற்கும் பெண்ணை இப்படி மோசமாக உருவகப்படுத்துவதும் தான் இவர்களது கிரியேட்டிவிட்டி. இட் வில் ப்ளோ யுவர் மைண்ட் என்பதை ஒரு ஆபாசப்பட காட்சி போல உருவகப்படுத்தி விளம்பரம் செய்திருக்கிறார்கள் பர்கர் கிங் உணவு நிறுவனத்தினர்.

பிரெட்!
இந்த பிரெட் விளம்பரத்துடன் ஒப்பிடுகையில் சென்ற பர்கர் விளம்பரம் எவ்வளவோ தேவலை என்று கூறலாம். பிரெட் இஸ் லைப் என்ற கேப்ஷனுடன்... இரட்டை பொருள் கொள்ளும் வகையிலான பிரெட் காட்சிப்படுத்தி இருப்பது எதற்கு?



Click it and Unblock the Notifications
