For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தர்மத்தை காப்பாற்றிய பாண்டவர்கள் நரகத்தில் கஷ்டப்பட காரணம் என்ன தெரியுமா?

கிருஷ்ணருடைய மறைவிற்கு பின் உலகப்பற்றுக்களை இழந்த பாண்டவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். ஆனால் அவர்கள் இறந்த பிறகு சொர்க்கம் செல்லாமல் நரகத்திற்கு சென்றனர், அதே சமயம் கௌரவர்கள் சொர்க்கத்தில் மகி

|

மகாபாரத போர் உலக மக்களின் நன்மைக்காக வாசுதேவ கிருஷ்ணர் தலைமையில் பாண்டவர்களும், கௌரவர்களும் நடத்தியது. இதில் எண்ணற்றோரின் தியாகத்தாலும், அர்ஜுனனின் வீரத்தாலும், ஸ்ரீகிருஷ்ணரின் சாதுர்யத்தாலும் பாண்டவர்கள் கௌரவ சேனையை வெற்றிக்கொண்டு பூமியில் நீதியை நிலைநாட்டினார்கள். ஆனால் அதற்கு அவர்கள் கொடுத்த விலை மிகப்பெரியது.

Spiritual

எதிரிகளாய் இருந்தாலும் நூறு கௌரவ சகோதரர்கள், ஒரே தங்கையின் கணவன், இளம் பஞ்சபாண்டவர்கள், பிதாமகர் பீஷ்மர், குரு துரோணாச்சாரியார், மூத்த சகோதரன் கர்ணன் அனைத்திற்கும் மேலாக அன்பு புதல்வன் அபிமன்யு என அனைவரையும் இழந்து வென்ற ராஜ்ஜியத்தை ஆள்வதில் என்ன மகிழ்ச்சி இருந்துவிட போகிறது பாண்டவர்களுக்கு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காந்தாரி சாபம்

காந்தாரி சாபம்

போரில் தன் அனைத்து மகன்களையும் இழந்த காந்தாரி அதற்கு காரணமாய் அமைந்த கிருஷ்ணருக்கு முப்பத்தாறு ஆண்டுகளுக்கு பின் அவரின் யாதவ இனம் அடியோடு அழியும், கிருஷ்ணரும் மரணிப்பார் என்று சாபமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டவர்களை தன் முடிவும் இந்த உலக நன்மைக்கு அவசியம் என்பதை உணர்ந்த கிருஷ்ணர் அமைதிப்படுத்தினார். துவாரகையை விட்டு பிரிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் யுதிஷ்டிரனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்துவிட்டு அஸ்தினாபுரத்தில் இருந்து விடைபெற்றார் கிருஷ்ணர்.

கிருஷ்ணரின் மரணம்

கிருஷ்ணரின் மரணம்

கிருஷ்ணர் அஸ்தினாபுரத்தை விட்டு சென்ற பின் யுதிஷ்டிரன் நல்லாட்சி புரிந்து வந்தார். முப்பத்தாறு ஆண்டுகளுக்கு பின் காந்தாரியின் சாபம் பலித்தது. சுகபோக வாழ்க்கையில் மூழ்கிய துவாரகை மக்கள் தங்களுக்குள்ளேயே ஏற்பட்ட கலகத்தால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு இறந்தனர். தன்னுடைய இனம் தன் கண் முன்னே அழிவதை பார்த்த கிருஷ்ணர் மனம் நொந்து வனத்திற்குள் சென்றார். அங்கே ஜரா என்னும் வேடன் மான் என நினைத்து எய்த அம்பு கிருஷ்ணரின் பாதத்தை தாக்கி அவரின் உயிரை பறித்தது.

பாண்டவர்களின் சோகம்

பாண்டவர்களின் சோகம்

கிருஷ்ணரின் மரண செய்தி கேட்டு துடிதுடித்த பாண்டவர்கள் நாடாளும் ஆசையை துறந்து சோகத்தில் வாடினர். அப்போது அங்கு வந்த வியாசர் பாண்டவர்கள் பூமிக்கு வந்த நோக்கம் நிறைவேறி விட்டதாகவும், அவர்கள் பூமியை விட்டு கிளம்ப வேண்டிய காலம் வந்துவிட்டதால் இமயமலையை நோக்கி செல்லும்படியும் கூறி சென்றார். பாண்டவர்களும் வியாசரின் சொல்லுக்கிணங்க அபிமன்யுவின் மகன் பரீக்ஷித்திற்கு முடிசூடிவிட்டு துறவறம் பூண்டு இமயமலை நோக்கி பயணத்தை தொடங்கினர்.

பாண்டவர்களின் மரணம்

பாண்டவர்களின் மரணம்

பாண்டவர்களின் பயணம் முழுவதும் எமதர்மன் நாய் உருவத்தில் அவர்களை பின்தொடர்ந்தே வந்துகொண்டிருந்தார். இமயமலையை அடைந்தபின் ஒருவர்பின் ஒருவராக தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். முதலில் திரௌபதியும், பின் நகுலன், சகாதேவன், பீமன், அர்ஜுனன் இறுதியாய் தர்மன் என உயிரை விட்டனர். இறந்த பிறகு மேலே சென்ற தர்மன் சொர்க்கத்தில் தனது சகோதரர்கள் யாரும் அங்கு இல்லாதது கண்டு அதிர்ச்சியுற்றான். அதுமட்டுமில்லாது துரியோதனனும் அவனது சகோதரர்களும் சொர்க்கத்தில் இருப்பதை கண்டு கோபம் கொண்டான் ஆனால் அவர்களுடன் கர்ணன் சொர்க்கத்தில் இல்லை. தனது சகோதரர்கள் எங்கே என எமதர்மனிடம் கேட்டபோது அவர்கள் நரகத்தில் இருப்பதாக பதிலளித்தார்.

பாண்டவர்களின் தவறுகள்

பாண்டவர்களின் தவறுகள்

எமதர்மன் கூறிய பதிலை கேட்டு கோபம் கொண்ட தர்மன் அனைத்து அதர்மங்களும் புரிந்த கௌரவர்கள் சொர்க்கத்தில் இருக்கும்போது தர்மத்திற்காக போரிட்ட எனது சகோதரர்கள் ஏன் நரகத்தில் அல்லல் படவேண்டும் என வினவினார். அதற்கு எமதர்மன் அவர்கள் செய்த தவறுகளுக்காக அவர்கள் நரகத்தில் இருப்பதாக கூறியது தர்மனுடைய கோபத்தை மிகவும் அதிகப்படுத்தியது. பாரத போருக்கு காரணமான துரியோதனனை விட எனது சகோதர்கள் என்ன தவறு செய்துவிட்டனர் என்று ஆத்திரத்துடன் கேட்டார். அதற்கு எமதர்மன் திரௌபதி தன் ஐந்து கணவர்களில் அர்ஜுனன் மீது மட்டும் அதிக காதல் கொண்டிருந்தால், நகுலனோ தனது அழகின் மீது அளவுக்கதிகமான கர்வம் கொண்டிருந்தான், சகதேவனோ தன் புத்திக்கூர்மையை நினைத்து தற்பெருமை கொண்டவன், பீமனோ தன் பலத்தை நினைத்து கர்வம் கொண்டதோடு உணவின் மீது எப்போதும் பேராசை கொண்டிருந்தான், அர்ஜுனன் போரில் கர்ணனை கொன்றான், ஏகலைவன் விரல் வெட்டுற காரணமாய் இருந்தான் என காரணங்களை அடுக்கிக்கொண்டே போனார்.

தர்மனின் சந்தேகம்

தர்மனின் சந்தேகம்

இந்த தவறுகள் அனைத்தும் துரியோதனன் செய்த தவறுகளை விட மிகச்சிறியதுதானே, பிறகு ஏன் அவர்கள் செல்லவில்லை என்று கேட்டார். அதற்கு எமதர்மன் காரணம் அவர்கள் அனைவரும் குருஷேத்திரத்தில் இறந்தவர்கள், அந்த இடத்தில தன் க்ஷத்ரிய தர்மத்தை கடைபிடித்து இறந்தவர்கள் அனைவரும் வீரசொர்க்கம் அடைவார்கள் என்பது திருமால் வழங்கிய வரம் என்றார். அப்படியென்றால் தன் மூத்த சகோதரன் கர்ணன் ஏன் சொர்க்கத்தில் இல்லை என கேட்டான் தர்மன். கர்ணன் திரௌபதி சபையில் துயிலுரிய பட்டபோது அவளுக்கு யூஉதவாமல் இருந்தான் மேலும் தன் முழுமனதோடு கர்ணன் போரில் பங்குபெறவில்லை, எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் அவன் உங்களில் யாரையும் கொள்ளவில்லை, இது க்ஷத்ரிய தர்மத்தை மீறிய செயலாகும், அதனால்தான் அவனும் நரகத்தில் இருக்கிறான் என்று பதிலளித்தார்.

தர்மனின் தவறு

தர்மனின் தவறு

அப்பொழுது தான் செய்த தவறு என்ன என்று கேட்ட போது, பூமியில் இருந்து மேல் உலகம் வரும்போது மனித உணர்வுகளை விட்டுவிட வேண்டும். ஆனால் நீ இங்கே வந்தும் துரியோதனன் மேல் உனக்கு இருக்கும் கோபமும், வெறுப்பும் இன்னும் அப்படியே உள்ளது, இதுவே உனது தவறென்று கூறினார் எமதர்மன். தன் தவறை உணர்ந்த யுதிஷ்டிரன் தான் இன்னும் உணர்வுகளுக்கு அடிமையாய் இருப்பதை நினைத்து வருத்தமுற்றான்.

தர்மனின் முடிவு

தர்மனின் முடிவு

தன் மகன் வருத்தப்படுவதை கண்ட எமதர்மன் அவர்களின் தவறுகளுக்கு சில காலம் இங்கு இருந்துதான் ஆகவேண்டும் அதன்பின் அவர்களும் சொர்க்கம் வரலாம் என்று கூறினார். தன் தம்பிகளை பிரிய மனமில்லாத தர்மன் அவர்களின் தண்டனை காலம் முடியும்வரை தானும் நரகத்திலியே இருந்து விடுவதாகவும், தன் தம்பிகளுடன் இருக்கும் இடமே தனக்கு சுவர்க்கம் எனவும் கூறினார். தம்பிகளின் மீதான தன் மகனின் பாசத்தை நினைத்து மகிழ்ச்சி கொண்டார் தர்மதேவன். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது யாதெனில் எவர் ஒருவர் கோபத்தை துச்சமென நினைத்து ஒதுக்குகிறாரோ அவரே வாழ்க்கையில் நினைத்ததை அடைய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: spiritual
English summary

The reasons behind why Pandavas went to hell

After the death of Lord Krishna in Mahabharata, Pandavas lost all interest to live. When they all died, they went to hell, but Duriyothana and his evil brothers lives happily in heaven.
Story first published: Friday, July 20, 2018, 15:55 [IST]
Desktop Bottom Promotion