For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பு ஏன் ஆடி 1 ம் தேதிக்கு மட்டும் இருக்கு?

தமிழில் 12 மாதங்கள் இருந்தாலும் அதில் மிக முக்கியமானதாகவும் ஆன்மீக தொடர்புடையதாகவும் கருதப்படுகிற பக்தி மயமான மாதமாகவும் இந்த ஆடி மாதம் இருக்கிறது.

|

தமிழில் 12 மாதங்கள் இருந்தாலும் அதில் மிக முக்கியமானதாகவும் ஆன்மீக தொடர்புடையதாகவும் கருதப்படுகிற பக்தி மயமான மாதமாகவும் இந்த ஆடி மாதம் இருக்கிறது. அப்படி மற்ற மாதங்களுக்கு இல்லாத பெருமையும் சிறப்பும் இந்த ஆடி மாதத்துக்கு ஏன் வந்தது என்று தெரியுமா?

aadi month specials in tamil

பஞ்சாங்க முறைப்படி காலங்களை, நொடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம் என்று வரிசைப்படுத்தப்படுகிறது. ஒரு வருடத்தை பஞ்சாங்கப்படி முதலில் இரண்டு பிரிவாகப் பிரிக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆடி முதல் நாள்

ஆடி முதல் நாள்

முதல் ஆறு மாதத்தை அயனம் என்றும் அடுத்த ஆறு மாதத்தை தட்சாயிண புண்ணிய காலம் என்றும் பிரிக்கப்படுகிறது. முதல் ஆறு மாதமாக அயனம் முடிந்து தட்சாயிண புண்ணிய காலம் தொடங்கும் நாள் தான் ஆடி மாதம் முதல் தேதி. தை மாதம் முதல் தேதியில் இருந்து ஆனி மாதம் 30 ம் தேதி வரை இருப்பது அயனம். ஆடி முதல் நாள் முதல் மார்கழி 31 ம் தேதி வரை இருப்பது தட்சாயிண புண்ணிய காலம்.

சூரிய வலம்

சூரிய வலம்

இந்த ஆடி மாதம் முதல் நாள் அமாவாசையன்று சூரியன் வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி, பயணிக்க ஆரம்பிக்கும். இந்த ஆடி முதல் மார்கழி வரை, ஆறு மாதத்துக்குள் சூரியன் வடக்கு திசையிலிருந்து தெற்கு திசை வரை சுற்றி முடித்திருக்கும்.

மழைக்காலம்

மழைக்காலம்

மழைக்காலத்தின் தொடக்கமாக ஆடி 1 இருக்கிறது. ஆடிக்காத்து அம்மியையே தூக்கிவிடும் என்று சொல்வார்கள். அவ்வளவு அதிகமாக காற்று அடிக்கும் காலமாக ஆடி மாதம் இருக்கும். மழையானது ஆனி மாதமே தொடங்கியிருந்தாலும் ஆடி மாதம் தான், முறையான பருவ கால மாற்றத்தில் மழைக்காலமாகத் தொடங்கியிருக்கிறது.

பூமாதேவி அவதரிப்பு

பூமாதேவி அவதரிப்பு

இந்த பூமியையே தாங்கிக் கொண்டிருப்பவள் நிலமகள் என்பது நம்முடைய எல்லோருக்கும் தெரியும். இந்த நிலவுலகத்தில் பூமாதேவி அவதரித்த மாதமாக ஆடி மாதம் சொல்லப்படுகிறது.

கோவில் விழாக்கள்

கோவில் விழாக்கள்

ஆடி மாதம் தான் நிலமகள் அவதரித்தாள் என்பதால், தான் எல்லா அம்மன் கோவில்களிலும் ஆடி மாதங்கள் விழா எடுக்கப்படுகிறது. காளி தேவிக்கு மட்டுமே மார்கழியில் விழா எடுக்கப்படும். அது தாட்சாயிண புண்ணிய காலத்தின் இறுதி காலம் என்பதால். காளி தேவிக்கு விழா கொண்டாடட்படும்.

அதேபோல் தான் காவல் தெய்வங்களான முணியாண்டி, கருப்பசாமி, அய்யனார் போன்றவற்றுக்கும் அந்த கோவில் காவல் உபகரணங்களுக்கும் ஆடி மாதங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு

ஆடி 18 அன்று வெள்ளப் பெருக்கு உண்டாகும். லோப முத்திரை 18 படிகளை கடந்து காவேரி தாய் யோக நிலை அடைகிறாள் காவிரி. அதனால் தான் காவிரி எந்தெந்த பகுதிகளில் எல்லாம் ஓடுகிறதோ அந்த கரையோரங்களில், மக்களும், புதுமணத் தம்பதிகளும் ஆற்றங்கரையில், மலர்கள் தூவி பூஜைகள் செய்வார்கள். மக்களுடைய ஜீவ நாடி ஆறு. அதில் புது நீர் வருவதைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

பகை

பகை

குடும்பத்தில் உறவினர்களுக்கு இடையேயும் பங்காளிகளுக்கு உள்ளாகவும் எவ்வளவு சண்டை இருந்தாலும் இந்த ஆடி முதல் நாளில் சேர்ந்து விடுவார்கள். அல்லது ஒன்றாக இணைவதற்கான முயற்சி எடுத்து அந்த மாத இறுதிக்குள் சேர்ந்து விடுவார்கள்.

வெடி தேங்காய்

வெடி தேங்காய்

Image Courtesy

ஆடி முதல் நாளன்று வெடி தேங்காய் போட்டு வழிபாடு நடக்கும். இது எல்லா இடங்களிலும் வழக்கத்தில் இல்லையென்றாலும், கொங்கு வட்டாரப் பகுதிகளில் இன்றும் ஆடி முதல் நாளன்று வீட்டில் உள்ள குழந்தைகள் மூலமாக வெடி தேங்காய் சுடப்பட்டு பின் கடவுளுக்குப் படைக்கப்படுகிறது.

ஏன் தேங்காய்க்குள் இனிப்புகள் சேர்த்து வெடி தேங்காய் செய்யப்படுகிறது. உண்மையிலேயே அன்று இனிப்பு சாப்பிட வேண்டுமா?... அதற்கும் மகாபாரதத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

குருஷேத்திர போர்

குருஷேத்திர போர்

ஆடி முதல் தேதி குரு ஷேத்திர போர் தொடங்கிய முதல் நாள். முதல் நாள் பலி கொடுக்கப்படுக்கப்படும். அமாவாசையன்று சந்திரனையும் சூரியனையும் ஏமாற்றி போர் புரிய கௌரவர்கள் திட்டமிட்டனர். முதல் நாள் நல்ல நேரம் பார்த்து பலி கொடுத்தால், வெற்றி உண்டாகும் என்று நினைத்த துரியோதனன் பஞ்சாங்கம் பார்ப்பதில் வல்லவரான, பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனிடம் வந்து நாள் குறித்து தர கேட்டான். சகாதேவனும் ஆடி முதல் அமாவாசையன்று பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்று நாள் குறித்து தருகிறார். உடனே கிருஷ்ணர் வந்து துரியோதனனிடம் என்ன சொன்னாய் என்று கேட்க உண்மையை சொல்கிறார் சகாதேவன். ஏன் அப்படி சொன்னாய், என்று கேட்டதற்கு பஞ்சாங்கம் பொய் சொல்லாது. பஞ்சாங்கம் கணிக்கும் கணிதனும் பொய் சொல்லக் கூடாது அதனால் தான் உண்மையைச் சொன்னேன் என்று சகாதேவன் கூறினார்.

முந்தும் கிருஷ்ணர்

முந்தும் கிருஷ்ணர்

கௌரவர்களுக்கு முன்பாக, நாம் பலி கொடுத்து விட வேண்டும். அப்போதான் நாம் வெற்றி பெற முடியும் என்று கிருஷ்ணர் பாண்டவர்களிடம் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆடி 1 ம் தேதி காளி தேவிக்கு ஒரு பலி கொடுக்க வேண்டும். அப்போது யாரை பலி கொடுக்கலாம் என்ற விவாதம் வரும்போது, அர்ஜூனனின் மகனான அரவாணை பலி கொடுக்க அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். அதற்கு அரவாணும் ஒப்புக் கொண்டார்.

அப்போது கிருஷ்ணர் கேட்கிறார் உன்னுடைய கடைசி ஆசை என்ன என்று கேட்கிறார். அதற்கு அரவாண் சொல்கிறான் எப்படியும் நாளை என்னை பலி கொடுத்து விடுவீர்கள். நான் இறந்து விடுவேன். அதனால் எனக்கு திருமணம் செய்து தாம்பத்ய சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று கேட்கிறார். ஒரு நாள் மட்டும் கணவனுடன் வாழ்ந்து பின் விதவை கோலம் ஏற்க எந்த பெண்ணும் தயாராக இல்லை. உடனே கிருஷ்ணர் சொல்கிறார். நான் பெண்ணாக மாறுகிறேன். நீ தாம்பத்ய சுகத்தை அனுபவித்துக் கொள் என்று கூறுகிறார். அவ்வாறே கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுக்கிறார். இருவருகு்குமிடையே தாம்பத்தியம் நடக்கிறது. அதன்பின் அடுத்த நாள் அரவாண் பலி கொடுக்கப்படுகிறார். இப்போது புரிகிறதா ஏன் ஆடி முதல் நாள் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று?...

திருநங்கைக்கு தானம்

திருநங்கைக்கு தானம்

நாகர் குல மன்னனான அரவாணை பலி கொடுத்து, குருஷேத்திரத்தில் உள்ள

அரவாணின் தலையாக அந்த தேங்காயைக் கருதி, அதில் அவல், வெல்லம், எள், கடலைபருப்பு ஆகியவை போட்டு நெருப்பில் சுட்டு, வழிபாடு செய்யப்படுகிறது.

அதனால் தான் ஆடி முதல் நாள் கணவன், மனைவி தாம்பத்ய உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் அப்படி செய்யும் போது அடுத்த நாட்களில் குடு்பத்தில் சிறு சிறு பிரச்னைகளும் சண்டைகளும் உண்டாகும்.

ஆடி முதல் நாளன்று வீட்டுக்கு அருகில் யாரேனும் அரவாணிகள் இருந்தால், அவர்களுக்கு உணவளித்து வந்தால், ஒரு வருடங்கள் நீங்கள் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வந்த பலன்களை பெற முடியும். அதேபோல் அடுத்த 17 தலைமுறைக்கு உங்களுடைய குடும்பத்தில் திருநங்கைகள் பிறக்காமல் போவதற்கான பலனி கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why Aadi Month Is So Special?

According to the Tamil calendar, Aadi is the fourth month of the year. The first day of this month, usually falling on July 16-17, is celebrated as Aadi Pandigai or Aadi Pirappu
Desktop Bottom Promotion