Just In
- 48 min ago
நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளில் எவ்வளவு கலோரி இருக்குன்னு தெரியுமா?
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (03.03.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- 16 hrs ago
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- 16 hrs ago
இந்த மந்திர வார்த்தைகள் உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக்குவதோடு அர்த்தமுள்ளதாகவும் மாற்றும்...!
Don't Miss
- News
ரஜினிக்கு கொடுத்த பிரஷர் மாதிரியே.. மே.வங்கத்தில் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா கங்குலி?
- Movies
தேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்
- Automobiles
பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவு கட்ட திட்டம்... 2-வது எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது வால்வோ!
- Sports
பயப்படாதீங்க... எதுக்கு பயப்படணும்... திறமையை நம்புங்க... அணி வீரர்களுக்கு ஜோ ரூட் ஆலோசனை
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்கள் பிறந்த மாதத்தின் மலர் உங்களை பற்றி கூறுவதென்ன தெரியுமா?
நீங்கள் பிறந்த மாதம், நாள், நேரம் பொறுத்துதான் உங்களின் ராசி அமையும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் ஜோதிடத்தின் படி ஒவ்வொரு பிறந்த மாதமும் ஒரு பூ கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. உங்களின் பிறந்த மாதம் உங்களுக்கு ரோஜாவாகவோ, தாமரையாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்த பூக்களை பொறுத்தே உங்களின் குணநலன்களும் உங்கள் வாழ்க்கையின் வெற்றியும் இருக்கும். உங்கள் பிறந்த மாதத்தின் பூ கூறும் உங்களுடைய ஆளுமை என்னெவென்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஜனவரி - கார்னேஷன் பூ
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எல்லோரும் உங்களால் மகிழ்ச்சியடைவார்கள். உங்களுடைய ஆளுமை மிகச்சிறந்ததாக இருக்கும். உங்களை மற்றவர்கள் பெரும்பாலும் புரிந்துகொள்ள மாட்டார்கள், ஏனெனில் நீங்கள் கெஞ்சுபவர்கள் அல்ல. நீங்கள் சமூகத்தின் விதிமுறைகளை பின்பற்றமாட்டிர்கள். நீங்கள் கலைத்துறையில் ஆர்வம் மிக்கவர்களாக விளங்குவீர்கள்.

பிப்ரவரி - ஊதா பூ
உங்களுக்கு சிலசமயம் தோன்றும் எண்ணங்கள் மற்றும் யோசனைகள் எப்பொழுதும் சரியாக இருக்கும். நீங்கள் ஒரு புத்திசாலித்தனமான ஆளுமை, உங்களை பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் தவிர உங்களை அனைவருக்கும் பிடிக்காது. உங்கள் பிரச்சினைகளை வேகமாகவும், சரியாகவும் தீர்த்துவைப்பீர்கள்.

மார்ச் - டஃபோடில்
நீங்கள் காற்றாலை போன்றவர்கள். மற்றவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் உங்களை பற்றி சிந்திக்க வைப்பீர்கள். நீங்கள் மற்றவர்கள் மீது மிகவும் அன்பாக இருப்பீர்கள், அதேசமயம் நீங்கள் ஒரே வேலையில் எப்போதும் நம்பிக்கை கொண்டவராக இருக்கமாட்டிர்கள், ஒரேசமயத்தில் பல வேலை செய்யக்கூடியவராக இருப்பீர்கள். நீங்கள் மற்றவர்களை உங்கள் இதயத்திலிருந்து நேசிப்பீர்கள் அதுதான் உங்களை அழகானவர்களாக காட்டும்.

ஏப்ரல் - இனிப்பு பூ
நீங்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆனால் இது எப்பொழுதும் உங்களுக்கு நன்மை பயக்காது. மற்றவர்கள் உங்களை நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் நினைப்பார்கள் நீங்களும் மற்றவர்களை பற்றி அதையே நினைப்பீர்கள். இருப்பினும், உண்மையில் நீங்கள் ஒரு மகிழ்ச்சியான மற்றும் நேர்மறையான நபராக இருப்பதால், ஒரு சிலர் மட்டுமே உங்களைப் பற்றி அறிவார்கள். நீங்கள் உங்களை சுற்றியும் நேர்மறையான எண்ணத்தை பரப்ப விரும்புவீர்கள்.

மே - பள்ளத்தாக்கு தாமரை
உங்கள் ஆளுமைக்கு பல முகங்கள் இருக்கும். ஒரு நிமிடம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் மறுநிமிடமே சோகமாக மாறிவிடுவீர்கள். உங்களுடன் இருப்பது மற்றவர்களுக்கு வீடியோ கேம் விளையாடுவது போன்றது, அடுத்த நிமிடம் என்ன ஆகும் என்பதே அவர்களுக்கு தெரியாது. நீங்கள் மற்றவர்களை யோசனையில் வைத்திருப்பதை எப்போதும் விரும்புவீர்கள்.

ஜூன் - ரோஜா
நீங்கள் ஒரு மிகச்சிறந்த நண்பன், ஆனால் உங்கள் வாழ்க்கையில் பல உணர்ச்சிகளுக்கு உள்ளாவீர்கள். உங்களை புரிந்து கொள்வது சிலசமயம் சிரமமாக தோன்றலாம் ஆனால் அதுதான் உண்மை. உங்களின் புகழ் உங்களுக்கு சிலசமயம் தற்பெருமையை உண்டாக்கலாம், ஆனால் உங்களுக்கு நெருக்கமானவர்களை உங்களுக்கே தெரியாமல் புண்படுத்தி விடுவீர்கள். ஒருவருடன் நீங்கள் நெருங்கிவிட்டால் உங்களின் எண்ணங்களை அவர்களுக்கும் பரப்புவீர்கள்.

ஜூலை - ஃபாக்சுகிளோவ்
எது சரி, எது தவறு பற்றி நீங்கள் மிகவும் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளீர்கள், இது உங்கள் எண்ணங்களிலும் பிரதிபலிக்கும். மற்றவர்கள் பற்றிய உங்கள் எண்ணங்கள் எப்பொழுதும் உறுதியாக இருப்பீர்கள் இது மற்றவர்களுக்கு பிடிக்காததாக இருக்கலாம். சிலசமயம் நீங்கள் அதிக மூர்க்கமாக மாறுவீர்கள் ஆனால் உடனடியாக அமைதியாகிவிடுவீர்கள்.

ஆகஸ்ட் - கிளாடியோலஸ்
நீங்கள் ஒரு சமூகப்பறவை அதேசமயம் அதீத கவனம் உடையவர்கள். உங்களுக்கு ஒரு இலக்கு கிடைத்துவிட்டால் அந்த இலக்கை முடிக்கும்வரை உங்களுக்கு ஓய்வென்பதே கிடையாது. உங்களின் சுயத்தை பொறுத்தவரையில் நீங்கள் வேடிக்கையை விரும்புபவர்கள் மற்றும் புகழ்வய்ந்தவர்களாக இருப்பீர்கள். நீங்கள் புதிய நபர்களை சந்திப்பதில் எப்பொழுதும் ஆர்வமாக இருப்பீர்கள். நீங்கள் இல்லாத இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்காது.
MOST READ: மார்பகத்தால் ஏற்பட்ட சிக்கல், காதலியைப் பிரிந்து சென்ற காதலன் - உண்மை சம்பவம்!

செப்டெம்பர் - ஆஸ்டர்
நீங்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் மனதளவில் மிகவும் அழகானவர்கள். நீங்கள் எப்பொழுதும் புத்தகத்தை பின்பற்றுபவர்கள் அதற்காக நீங்கள் போரானவர்கள் என்று அர்த்தமல்ல. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் மூலம் கிடைக்கும் சிறிய மகிழ்ச்சியையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். உங்களை சுற்றி உள்ள அனைத்து அழகான மற்றும் கலைநயமான செயல்களை பாராட்டுவீர்கள். உங்களின் கற்பனைத்திறன் அளவில்லாதது.

அக்டோபர் - மேரிகோல்டு பூ
உங்களுடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியான ஒன்று. நீங்கள் ஒரு இடத்தில் இருக்கும்போது அந்த இடம் நிச்சயம் கலகலப்பாக இருக்கும். உங்களுக்கு வேடிக்கையாக இருக்க பிடிக்கும் வாழ்க்கையை எப்பொழுதும் கடினமாக நினைக்கமாட்டிர்கள். அதற்காக நீங்கள் பொறுப்பற்றவர்கள் என்று அர்த்தமல்ல. உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் உங்கள் அருகிலேயே இருக்க விரும்புவார்கள்.

நவம்பர் - கிரிஸான்தமம்
நீங்கள் கூட்டத்தை கவரக்கூடியவர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் மக்கள் உங்களை சுற்றி இருப்பார்கள். உங்களின் கருத்துக்களையும், பேச்சுக்களையும் மற்றவர்கள் எப்பொழுதும் கேட்க விரும்புவார்கள் நீங்கள் ஒருபோதும் அவர்களை ஏமாற்றமாட்டிர்கள். சிலசமயம் மற்றவர்கள் உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது போல நீங்கள் உணருவீர்கள், ஆனால் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் அவர்களை ஏமாற்றமாட்டிர்கள். நீங்கள் கஷ்டத்தில் இருந்தாலும் உங்களை சுற்றி இருப்பவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். பெரும்பாலான நேரங்களில் உங்களை நீங்களே வெல்லலாம்.

டிசம்பர் - பாய்ன்செசியா
உங்களின் மனபலம் மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். நீங்கள் சிறிய வயதினராக இருந்தாலும் மற்றவர்கள் உங்களிடம் அறிவுரை கேட்க விரும்புவார்கள். சிறுவயதிலேயே உங்களுக்கு அதிக அனுபவம் இருக்கும். உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஏற்படும் வேதனையை நீங்கள் போக்க முயல்வீர்கள். நீங்கள் எப்பொழுதும் தானம் வழங்குவதற்கு தயாராய் இருப்பீர்கள்.
MOST READ: ஆண்களே, நீங்கள் பிறந்த மாதத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் வரும்னு கண்டுபிடிச்சிடலாம்..!