For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாரதரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள்

நாரதர் கலகம் மூட்டுபவர் என்றும், அவர் திருலோக சஞ்சாரி என்று மட்டுமே நாம் அறிவோம். ஆனால் அவர் பெருமாளுக்கே சாபம் கொடுத்தவர் என்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

|

" நாரதர் கலகம் நன்மையில்" முடியும் என்ற பழமொழியை நாம் அடிக்கடி உபயோகிப்போம். ஏனெனில் கலகம் மூட்டுவதில் கைதேர்ந்தவர் நாரதர். நம் நண்பர்களையே நாம் அடிக்கடி 'டேய் நாரதா" என்று அழைத்திருப்போம். அந்த அளவிற்கு நம் அன்றாட வாழ்வில் கலந்திருக்கும் ஒரு கதாபத்திரம் தேவரிஷி நாரதர் ஆவார். பல அரக்கர்களிடம் இருந்து தேவர்கள் மற்றும் மனிதர்களின் காப்பாற்ற பலவித சூழ்ச்சிகள் செய்து அனைவரையும் காப்பாற்றியவர் என பல கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். இவரின் பேச்சுதிறமைக்கு மயங்காதவர் எவரும் இருக்க முடியாது.

Spiritual

இதிகாசங்களிலும் சரி, புராணங்களிலும் சரி இவர் இல்லாத கதைகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு இவர் முக்கியமானவர். கையில் ஒரு வீணையுடன் எப்பொழுதும் "நாராயண" "நாராயண" என்று கூறிக்கொண்டே இவர் மூட்டும் கலகங்கள் ஆரம்பத்தில் பிரச்சினைகளை எழுப்பினாலும் இறுதியில் அனைவருக்கும் நன்மையை மட்டுமே ஏற்படுத்தும். குறிப்பாக ஞானப்பழத்தை வைத்து சிவ குடும்பத்தில் இவர் மூடிய கலகம் மிகவும் பிரசித்தம். இவரின் சிறப்புகளை அறிந்தால் கலகத்தை மட்டுமே ஏற்படுத்துபவர்களை இனி நாரதர் என கூறமாட்டோம். ஏனென்றால் இவர் ஏற்படுத்தும் கலகம் உலகத்திற்கு நன்மையையும் , நல்ல படிப்பினையையும் பெற்றுத்தரும், எனவே கலகம் செய்யும் அனைவரும் நாரதர் ஆகிவிட முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: spiritual god
English summary

10 unknown aspects of Narada

Narada is a famous Hindu sage who is a devotee of Lord Vishnu. But we don't know his many aspects like he only induce Valmiki to write Ramayana
Desktop Bottom Promotion