For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண் கல்லூரி செல்வதை தடுக்க திட்டமிட்டு விபத்து ஏற்படுத்திய கொடூரம்!

டிவி சிரியலைப் பார்த்து இந்த சமூகத்தில் நிகழ்ந்திருக்ககூடிய மிகவும் உன்னதமான மாற்றம்

|

Recommended Video

பெண் கல்லூரிக்கு செல்வதை தடுக்க கொடூர விபத்து ஏற்படுத்திய கிராமம்- வீடியோ

ப்ரதாபகரா என்ற மிகவும் பின் தங்கிய கிராமம் அது, சீமா கர்ப்பமாக இருக்கிற தகவல் உறுதியானது சீமாவிற்கு இது மூன்றாவது குழந்தை கணவர் ரவி கருவை கலைத்து விடு என்கிறான், காரணம் தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் ஏற்கனவே பிறந்த இரண்டுமே பெண் குழந்தைகள் என்பதால் மூன்றாவதும் பெண்ணாக பிறந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து கொண்டு கருவை கலைத்து விடு என்கிறான்.

கரு உருவாகி 20 வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில் வீட்டில் வைத்து மருத்துவம் பார்க்கும் நபர் ஒருவரால் கருக்கலைப்பு செய்யப்படுகிறது, அங்கே எதிர்பாராத விதமாக சீமாவிற்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்படுகிறது, அங்கிருந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறாள் தங்கை சினேகா அதோடு அக்காளின் கணவரை போலீசிடம் பிடித்து கொடுத்து விடுவேன் என்றும் சொல்கிறாள்.

இது ஹிந்தியில் வெளியான மெயின் குச் கர் சக்தி ஹூன் என்ற சீரியலில் இடம் பெற்ற ஒரு பகுதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

தூர்தர்ஷனில் கடந்த இரண்டு சீசன்களாக இந்த சீரியல் வெளியானது. இந்த சீரியலின் மையப்புள்ளி பெண்ணான எதையும் சாதித்து காட்டுவேன் என்ற அர்த்தமாகும். இது உலகிலேயே அதிகமான மக்களால் பார்க்கப்படுகிற சீரியலாக சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 400 மில்லியன் மக்கள் இதனை பார்த்திருக்கிறார்கள்.

#2

#2

2014 ஆம் ஆண்டு இந்த சீரியல் வெளியானது இரண்டு சீசன்களாக வெளியிடப்பட்ட இந்த சீரியல் 170 எபிசோடுகளை கடந்து சென்றது. ஹிந்தியில் வெளியான இந்த சீரியலை 14 மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டார்கள், 240 ரேடியோ சேனல்களிலும் இந்த சீரியல் ஒலிபரப்பரப்பட்டது.

#3

#3

இந்த சீரியலில் சமூகத்தில் நடக்கிற சில அக்கிரமங்களை, ஏற்றத்தாழ்வுகளை மைய்யப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக பெண்களை மையப்படுத்தி என்னென்ன ஒடுக்குமுறைகள் நடக்கிறது என்பதை அப்படியே வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்கள்.

குழந்தைத் திருணம், புகுந்த வீட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், மாதவிடாய் பிரச்சனை, பெண் குழந்தையை வெறுப்பது போன்ற அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.

#4

#4

இந்த கதை உண்மையிலேயே சினேகா மாத்தூர் என்பவரின் வாழ்வினை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. சினேகா கேரக்டரில் நடித்தவர் மீய்னல் வைஷ்ணவ். சினேகா கிராமத்திலிருந்து மருத்துவம் படிக்க வெளியூருக்குச் சென்றிருக்கிறார். மருத்துவம் படித்து தன் கிராமத்திற்கு திரும்பிய பின்பு, தன் ஊர் மக்கள் இன்னவும் எவ்வளவு பின் தங்கியிருக்கிறார்கள். பெண்கள் எத்தகைய அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

#5

#5

ஒரு பெண்ணாக, ஒரு மருத்துவராக இந்த கிராமத்தில் நடக்கிற விஷயங்களை மாற்ற வேண்டும் என்று பாடுபடுகிறார் அப்போது என்னென்ன பிரச்சனைகள் எழுந்தது, என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார், மக்களை எப்படி கையாண்டார் ஆகியவற்றை கொண்டு இந்த சீரியல் கதை எழுதப்பட்டிருந்தது.

#6

#6

இந்த சீரியல் வெளியாவதற்கு முன்பு பெண்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்திருக்கிறார்கள் சராசரியாக ஒரு பெண்ணின் திருமண வயது என்ன என்பது கூட அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

சீரியல் வெளியாவதற்கு முன்பு 73 சதவீத பெண்கள் ஓரளவுக்கு திருமண வயது தொடர்பான கேள்விக்கு சரியான விடையளிக்கு இந்த சீரியல் வெளியான பின்பு 83 சதவீத பெண்கள் சரியாக பதிலளித்தார்களாம்.

#7

#7

அதே போல கிராமத்தில் இருந்த ஆண்கள் கருத்தடை சாதனம் மற்றும் காண்டம் பயன்படுத்துவதால் பின்விளைவுகள் ஏற்படும் என்று சொல்லி பயன்படுத்த தயக்கம் காட்டியிருக்கிறார்கள்.

காண்டம் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியாக இருந்த 57 சதவீத ஆண்களின் எண்ணிக்கை இந்த சீரியல் வெளியான பின்பு 32 சதவீதமாக குறைந்திருக்கிறது.

#8

#8

இந்த நிகழ்ச்சியின் எக்ஸுக்யூட்டிவ் டைரக்டராக இருந்தவர் பூனம். ஒரு கூட்டத்தில் பங்கேற்ற போது தான் நமது பழக்க வழக்கங்கள் சமூகத்தை எந்தளவிற்கு பாதிக்கிறது என்பதை உணர்ந்தேன். இதை மாற்ற முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.

கூட்டம் கூட்டி அதைச் செய்ய, அதைச் செய்யாதே என்று பாடம் எடுப்பதை விட அவர்கள் விரும்புகிற ரசிக்கிற பொழுது போக்கு அம்சத்தின் மூலமாக அவர்களுக்கு தெரியப்படுத்த முயற்சித்தோன், அதற்கு எதிர்பாராதவிதமாக அபாரமான வெற்றி கிடைத்திருக்கிறது.

#9

#9

டிவி சீரியல் மூலமாக மக்களிடம் இதனை கொண்டு சேர்க்கலாம் என்ற எண்ணம் எப்படி வந்தது என்று கேட்கப்பட்டதற்கு அவர் கூறுகையில் தென்னாப்பிரிகாவின் சியோல் சிட்டி என்ற டிவி சீரிஸ் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியாகியிருக்கிறது.

இதில் மக்களின் அடிப்படை சுகாதாரம் குறித்தும், பால்வினை நோய்,பாலியல் வன்முறைகள்,மதுப்பழக்கம் ஆகியவை குறித்து பேசப்பட்டிருக்கிறது.

#10

#10

இதற்காக இவர்கள் மட்டுமல்ல இவர்களுடன் சேர்ந்து பெண் மருத்துவர்கள், சமூகவியலாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், நடிகர்கள் என பலரும் உழைத்திருக்கிறார்கள். உண்மைக் காட்சியை அப்படியே பிரதிபலிக்க, சினேகாவின் குடும்பத்தையே ஒரு மாடலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

#11

#11

முழு கதையும், கதைக்களமும் தயாரான பிறகு பிரபல இயக்குநர் ஃபெரோஸ் அப்பாஸ் கான் என்பவரிடத்தில் சென்றிருக்கிறார்கள். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இதன் ஷூட்டிங் நடந்திருக்கிறது.

எப்போதுமே மாமியார் மருமகள் என்றாலே எலியும் பூனையுமாக காண்பிக்கப்படுகிறது அதையும் மாற்ற நினைத்து கதைக்களத்தை அமைத்திருந்தார்கள்.

 #12

#12

ஒவ்வொரு எபிசோட் முடிந்த பின்பும் சமூகத்தில் நடக்கிற அவலங்களை, உங்களுடைய கருத்துக்களை சொல்வது, சில கேள்விகளை கேட்பது வழக்கம். அதோடு ஆலோசனை தேவைப்பட்டால் இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று சொல்லி ஒரு எண்ணையும் கொடுத்திருக்கிறார்கள்.

#13

#13

இவர்களின் கணக்குப்படி ஒரு நாளைக்கு 250 மிஸ்டு கால்கள் வரலாம் என்று எண்ணியிருந்தார்கள், ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் எண்ணை ஒளிபரப்பிய ஒரு மணி நேரத்தில் ஏழாயிரம் மிஸ்டு கால்கள் வந்திருக்கிறது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஸ்விட்ச் போர்டே கொலாப்ஸ் ஆகிவிட்டதாம்.

இரண்டு வருடத்தில் ஆண்கள் பெண்கள் என கிட்டத்தட்ட 1.4 மில்லியன் கால்கள் வந்திருக்கிறது

#14

#14

போனில் சொன்ன புகார்கள், கருத்துக்கள் ஆகியவற்றை பரீசிளிக்கவே ஸ்னேகா க்ளப் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து பெறப்பட்ட கதைகளை, அனுபவங்களை கொண்டு ரேடியோவில் ஸ்னேகா டைரி என்ற நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பியிருக்கிறார்கள். இதனையும் பன்னிரெண்டு மொழிகளில் மொழி மாற்றம் செய்து பலதரப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

#15

#15

இந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் இருக்கக்கூடிய நயாகவுன் என்னும் கிராமத்தில் பெண்கள் பள்ளிப் படிப்பு மட்டும் தான் படிக்க முடியும். அதைத் தாண்டி கல்லூரிக்குச் செல்ல முடியாது. குஷ்வாலா என்ற பதினாறு வயது சிறுமி தன்னுடைய பள்ளிக் கல்வியை முடித்த பிறகு கல்லூரிக்கு செல்ல நினைத்திருக்கிறார்.

#16

#16

வீட்டினர் சம்மதம் தெரிவிக்க கிராமத்தினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்திருக்கிறார்கள். எங்கே இந்த சிறுமி கிராமத்தின் வழக்கத்தை மாற்றி கல்லூரிக்குச் சென்று விடுவாளோ என்ற பயத்தில் சிறுமி மீது கார் மோத வைத்து நடக்க முடியாமல் செய்திருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு பெண்கள் கல்லூரி படிப்பு படித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.

#17

#17

ஆனால் இந்த சீரியல் வெளியான பிறகு அந்த கிராமத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கல்லூரி படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெண்கள் படிக்க வேண்டும் என்பதை அந்த கிராம மக்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

கிராமங்களில் வீட்டில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படுகிற வன்கொடுமைகள் அதிகம். பெண்களை அடித்து துன்புறுத்துவது சர்வ சாதரணமாக நடக்கும்.

#18

#18

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெருமளவு குறைந்திருக்கிறதாம்,அதோ ஆண்களாய் சேர்ந்து பெண்களுக்கு வீட்டில் உதவி செய்வோம், அவர்களின் வேலையில் பங்கெடுப்போம் என்ற வாசகத்துடன் ஆண்கள் குழு ஒன்று உருவாகியிருக்கிறது.

பெண் என்றால் எனக்கு கீழே, எனக்கு பணிவிடை செய்ய வேண்டும், அவளை நான் அடித்து துன்புறுத்தலாம் என்ற எண்ணவோட்டத்தில் இருந்த ஆண்கள் மத்தியில் இந்த மற்றம் வரவேற்கதக்கது தான்.

#19

#19

நிகழ்ச்சியை அதிகம் பார்ப்பது கிட்டத்தட்ட 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் 15 முதல் 24 வயதுடையவர்கள் என்று அறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியிருக்கும் Rashtriya Kishor Swasthya Karyakram (RKSK) என்ற திட்டத்தைப் பற்றி அவர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது இளம்பருவத்தினருக்கு ஏற்படக்கூடிய சத்து குறைபாடு, உடலியல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும்.

இதனால் இந்த சீரியலின் இரண்டாவது சீசனில் டீன் ஏஜ் பருவத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Tv Serial Make a Change in Society

Tv Serial Make a Change in Society
Story first published: Friday, March 16, 2018, 15:00 [IST]
Desktop Bottom Promotion