For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது - வைரல் வீடியோ!

தெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது - வைரல் வீடியோ!

By Staff
|

பெயர் வெளியிடப்படாத அந்த பெண் ஒரு பெண்ணுரிமை போராளி / ஆர்வலர் ஆவார். இந்த பெண்ணின் போராட்டத்திற்கு பெண்ணியவாதிகள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனகள் எழுந்துள்ளன. சிலர் இவரது போராட்டத்திற்கு ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

வாட்டிகன் நகரின் செயிண்ட் பீட்டர் ஸ்கொயர் பகுதியில் தான் இந்த பெண் போராளி மேலாடை இன்றி தனது குழந்தைக்கு பாலூட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த வகையில் மிக விரைவாக விரைந்து வந்த காவலர்கள் இந்த பெண்ணை கைது செய்து அழைத்து சென்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய் பாலூட்டுதல்!

தாய் பாலூட்டுதல்!

இந்த போராட்டத்தில் போது, அந்த பெண் ஆர்வலர் தனது மார்பகம் மற்றும் முதுகில் Alma Mater என்ற வாசகத்தை கருப்பு மை கொண்டு எழுதி இருந்தார். இதற்கு இலத்தின் மொழியில் தாய் பாலூட்டுதல் என்ற பொருள் என்று கூறப்படுகிறது. ஃபெமன் என்ற பெயரில் இவர்கள் இயக்கம் நடத்தி வருகிறார்கள். இதில் பல பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் ஒரு பெண்ணுரிமை ஆர்வலர்,' இந்த பெண் ஆர்வலரின் நோக்கமானது, தாய்மார்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தங்கள் குழந்தைக்கு தாய் பாலூட்டலாம் என்பதை போப் பிரான்சிஸ் கவனத்திற்கு எடுத்து செல்வதே ஆகும்" என்று கூறுகிரார்கள்.

இந்த இயக்கத்தின் மூலம் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: Femen.org

விமர்சனங்கள்!

விமர்சனங்கள்!

பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் உட்பட பலரும் இந்த போராளியின் போராட்டம் குறித்து பல கருத்துக்கள், விமர்சனங்களை முன்வைத்துள்ளனர் இதில் ஒருசிலர் இது வரவேற்கத்தக்கது என்றும், ஒரு சிலர் இப்படியான போராட்டம் அவசியமற்றது. மேலும், இந்த போராட்டத்தில் குழந்தையை உட்படுத்தியது சரியானதாக இல்லை என்றும் குறிப்பிட்டு தங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Image Source: Femen.org

வீடியோ!

வாட்டிகன் நகரின் செயிண்ட் பீட்டர் சதுரத்தில் மேலாடை இன்றி தாய் பாலூட்டி போராட்டம் நடத்தி காவலர்களால் பெண் போராளி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் காணொளிப்பதிவு. இந்த வீடியோ பதிவு மேற்கத்திய நாடுகளில் சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அவசியம்!

அவசியம்!

தாய் பாலானது மிகவும் அவசியமானது என்பதை தாண்டி, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. ஆனால், நமது வாழ்வியல் மாற்றத்தின் காரணமாக இன்று பல தாய்மார்கள் குழந்தைகளுக்கு ஒரு வயதுக்குள் தாய் பாலூட்டுவதை நிறுத்தி விடுகிறார்கள். ஒருபுறம் இப்படியான செயல்கள் என்றால். மறுபுறம் பொதுவிடங்களில் குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுவது தவறான செயலாக காணப்படுகிறது.

குழந்தை பசியில் அழும் நிலையில் பெண் தாய் பாலூட்டினால், அதை வக்கிர கண்களால் காண்போர் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

Image Source: Femen.Org

மலையாள பத்திரிக்கை!

மலையாள பத்திரிக்கை!

சமீபத்தில் கேரள பத்திரிகை ஒன்று தாய் பாலூட்டுவதை ஊக்கவிக்கும் வகையில் தனது அட்டைப்படத்தில் ஒரு பெண் தாய் பாலூட்டுவது போன்ற படத்தை பிரசுரம் செய்து இணையத்தில் பெரும் ஈர்ப்பை பெற்றது. ஆனால், அந்த படத்தில் இடம்பெற்றிருந்த பெண் ஒரு நடிகை மற்றும் மாடல் என்றும், அவர் தாய் பாலூட்டிய குழந்தை அவர் குழந்தையே இல்லை என்ற செய்தியும் பின்னாட்களில் வெளியாகி கலவையான விமர்சனத்திற்கு ஆளானது.

சமீப காலமாக பல நாடுகளில் பொது இடத்தில் தாய் பாலூட்டுவது குறித்து விழிப்புணர்வு பிரச்சார போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Image Source: Grahalakshmi Magzine

நீங்க சாப்பிடுவீங்களா?

நீங்க சாப்பிடுவீங்களா?

இந்தியா மட்டுமின்றி மற்ற உலக நாடுகளிலும் குழந்தைகளுக்கு வெளியே தாய் பாலூட்ட வேண்டுமெனில், ரெஸ்ட்ரூமில் வைத்து பாலூட்டுமாறு கூறப்படும் கருத்துக்கள் பல காலமாக காணப்பட்டு வருகிறது. இப்படியான கருத்தை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்னர் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்து சில மாணவிகள் "would you eat here?" என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை உருவாக்கினார்கள்.

அதாவது, கழிவறையில் உட்கார்ந்து நீ உணவு உண்பாயா? பிறகு ஏன் எங்கள் குழந்தைகள் மட்டும் அங்கே இருந்து தாய் பால் அருந்த வேண்டும் என்பதை வெளிபடுத்தும் பிரச்சாரமாக இது அமைந்தது.

Image Source:would you eat here? Campaign

ஜெயலலிதா!

ஜெயலலிதா!

சென்ற அதிமுக ஆட்சியின் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேருந்து நிலையங்கள் போன்ற பொதுவிடங்களில் தாய்மார்களுக்காக பொது இடங்களில் தாய் பாலூட்டும் பூத்கள் அமைக்கப்படும் என்றார். சில இடங்களில் அவை திறக்கப்பட்டன. ஆனால், அவை இப்போது காணாமல் போன நிலையில் இருக்கிறது.

நாம் முன்பு கூறியது போலவே தாய் பால் என்பது குழந்தைகளின் உணவு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கான மருந்து. குறைந்தபட்சம் இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை குழந்தைகளுக்கு தாய் பாலூட்ட வேண்டும். இதனால், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் வலிமையாகும்.

மேலும், பொதுவிடங்களில் பெண்கள், தாய்மார்கள் தாய் பாலூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஆண்கள் அதை வக்கிரமாக காணாமல்... நம்மை பெற்றெடுத்ததும் ஒரு பெண் தான். நாம் கட்டி குடும்பம் நடத்துபவரும் ஒரு பெண் தான் என்பதை அறிந்து. அந்த இடத்தில் அவருக்கு இடம் கொடுத்து நகர்ந்து செல்தல் உத்தமம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Topless Breast Feeding Woman Activist Arrested in Vatican!

A female actvist was arrested by police after she protested in the streets of vatican. Apparently the woman was topless and she breastfed her baby out in open.
Desktop Bottom Promotion