For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இதெல்லாம் நீங்க ரஷ்யாவுல மட்டும் தான் பார்க்க முடியும் - புகைப்படத் தொகுப்பு!

  By John
  |

  ரஷ்யாவுல மட்டும் காணப்படுறதா இணையங்கள உலா வர படங்கள் தான் இதெல்லாம். ரஷ்யான்னு சொன்னாலே புடின், அந்த நாட்டு ராணுவம், பனிமலைகள், இப்போ சமீபத்துல துவங்குன புட்பால் உலக கோப்பை எல்லாம் நினைவுக்கு வரும்.

  Things You Can See Only in Russia!

  இதுக்கெல்லாம் மேல அந்த நாட்டு அழகான மாடல்களும் நினைவுக்கு வருவாங்க. மாடல்ன்னு இல்லாம பொதுவாவே ரஷ்யா நாட்டு பெண்கள் உயரமும், அழகும் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கவங்க தான்.

  இப்படியான ரஷ்யாவுல நடக்குறதா சொல்லப்படுற இந்த படங்கள்..  வெறும் கேலிக்கான படங்கள் மட்டும் தான். ஏன்னா ரஷ்யர்கள் கொஞ்ச பயங்கரமான ஆட்களும் கூட... அங்க பயங்கரமான விஷயங்களும் கூட நடக்கும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  மகராசி!

  மகராசி!

  அம்மா, தாயி சுட்டுக்கிட்டு புடாத... அப்பறம் நஷ்டம் உனக்கு தான்... ரஷ்யா புள்ளைங்க அழகா இருக்கும்னு தானய்யா சொன்னாங்க... இப்படி விவகாரமா இருக்காய்ங்க... இவன் என்னமோ அவார்டு வாங்குற மாதிரி ஜாலியா பாக்கெட்டுக்குள்ள கை விட்டுட்டு நிக்கிறான். தம்பி... சுட்டா தெறிச்சிடும்...

  அம்புட்டு அறிவு!

  அம்புட்டு அறிவு!

  பைக்கு கார்க்கு.. நோ பார்க்கிங்ல வண்டிய நிறுத்துனா இந்த பூட்டு போட்டா ஒரு நியாயம் இருக்கு. அவனால வண்டிய எடுக்க முடியாது... பரிதவிச்சு போவான்... ஃபைன் கட்டுவான்... ஃபூல்... இது பீரங்கி... வண்டிய ஸ்டார்ட் பண்ணா பூட்டு அப்பளம் மாதிரி நொறுங்கிடும். இதுக்கு நம்ம தர்மாகோல் எம்புட்டோ பரவாயில்ல போலயே!

  MOST READ: மாதவிடாய் ஏற்பட்ட மாணவிக்கு சமயோசிதமாய் சிந்தித்து உதவிய சக மாணவன் - ரியல் ஹீரோ!

  அடப்பாவிங்களா...

  அடப்பாவிங்களா...

  சிலர் பெரிய பெரிய மால், ஷாபிங் காம்ப்ளெக்ஸ்ல எல்லாம் ரெஸ்ட் ரூமுக்கு உள்ள கூட கேமரா வெச்சிருப்பாங்க. அட என்னடா இவனுங்க... இப்படி பண்றானுங்கன்னு தோணும். இத பாருங்களேன்... ரெஸ்ட் ரூம்யே கூண்டு போட்டு பூட்டி வெச்சிருக்காங்க. அதுக்கு பேசமா ஒரு தாழ்பாள் போட்டு பூட்டி இருக்கலாமே... ரொம்ப அறிவு ஜீவிகளா இருப்பாங்க போல.. ஒரு வேலை ரெஸ்ட் ரூம் க்கு தண்டனை ஏதாவது கொடுத்திருப்பாங்களோ!

  MOST READ: ஓய்வு பெறும் இந்திய இராணுவ நாய்கள் கொலை செய்யப்படுவது ஏன்?

  சரக்கு வண்டி!

  சரக்கு வண்டி!

  பொதுவா சரக்கு லாரி, சரக்கு வண்டி நாம பார்த்திருப்போம். ஏன் சரக்கு ஏத்திட்டு போற வண்டியை கூட நாம பார்த்திருப்போம். ஆனால், சரக்கு ஊத்திட்டு போற சரக்கு வண்டிய இப்ப தான் பார்க்குறோம். நம்ம ஊருல இது விக்கிற விலை என்ன... இவங்க என்னன்னா பெட்ரோ டீசல் மாதிரி ஊத்துறாங்க... என்னத்த சொல்ல... விட்டா நம்ம ஊருல பெட்ரோல், டீசல் விலையே இந்த ரெட்டு வந்திரும் போல.

  ஆடு!

  ஆடு!

  பரவால இந்த தம்பி பாடுறத கேட்க இம்புட்டு கூட்டம், ஒரு ஆடு வேற நிக்கிது. நம்ம ஊருல ஒருத்தங்க "பூ" மலர்ந்தே தீரும்னு அங்கங்க கூட்டம் போட்டு பேசுறாங்க.. கேட்க ஒரு பய போக மாட்டேங்கறான். ஆமா, இத கவனிக்கலையே.. என்ன எல்லாரு கண்ணும் சோம்பீஸ் மாதிரி இருக்கு. அடேய்களா! நீங்க எல்லாம் யாரு!?

  டீ-டிக்காஷன்!

  டீ-டிக்காஷன்!

  தம்பி வேலைக்கு டான்னு கரக்ட் டைம்க்கு ஆபீஸ் ரீச் ஆயடுவாப்புல. அதுக்குன்னே பிரத்யேகமா இந்த வண்டிய டிசைன் பண்ணியிருக்காரு. நல்லவேளை குளிக்கிற ஃபெசிலிட்டு மட்டும் வெச்சாப்புல...மத்தது ஏதாவது வெச்சிருந்த ஊரே நாறிடும்!!!

  வித்-அவுட்!

  வித்-அவுட்!

  நம்ம ஊருல தான் ட்ரெயின்ல வித் அவுட் போவாங்கன்னு நெனச்சு வருந்திட்டு இருந்தோம்... பரவாயில்ல... இந்தியர்களுக்கு நாங்க எதுலையும் குறைஞ்சவங்க இல்லன்னு நிரூபிக்கிறாங்க ரஷ்யர்கள்.

  ஆனாலும், இப்படி எல்லாம் வித்அவுட் அடிக்க கூடாது. இதோ! போட்டோ புடிச்சு போட்டுடாங்க.

  MOST READ: குடலில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகள்..!

  செல்ஃபீ புள்ள!

  செல்ஃபீ புள்ள!

  இந்த மாமன் கிட்ட உனக்கு என்னமா பிடிச்சது.. கட்டுடல் தேகமா... தேக்கு மர பாடியா.. பனியில உருண்டு விளையாடுற திறமையா.. இல்ல அடிச்சுப்போட்ட மாதிரி தூங்குற அழகா.. அய்யோ சிரிக்கிறாளே! வாவ்!!!

  ஏன்மா உனக்கு செல்ஃபீ எடுக்க வேற ஆளே இல்லையா..

  நான் சொல்ற கேளுங்க!

  நான் சொல்ற கேளுங்க!

  போலீஸ்கார் நான் சொல்றத கேளுங்க... நான் எந்த தப்பும் பண்ணல. எனக்கொரு வாய்ப்பு கொடுங்க. அந்த புள்ள தான் என் கூட செல்ஃபீ எடுத்துச்சு. நான் எந்த சில்மிஷமும் பண்ணல... பொண்ணுக சொல்றத மட்டும் ஒருதலைப்பட்சமா கேட்காதிங்க... ஐ எம் இன்னசன்ட்!

  ஹீட்டர் வண்டி!

  ஹீட்டர் வண்டி!

  இப்ப வர எல்லா கார்லயும் ஏசி இருக்கான்னு பார்த்து, பார்த்து தான் வாங்குறாங்க. அதுலயும் லேட்டஸ்ட் டெக்னாலஜி இல்லன்னா ரிஜக்ட் பண்ணிடுறாங்க.

  ஆனா, அங்க ஊரே ஏசி மாதிரி இருக்கிறதுனால வண்டிக்குள்ள ஹீட்டர் வெச்சிக்குறாங்க. எப்பா தம்பி... ஒரு வேலை ஓட, ஓட வண்டி எரிஞ்சுட்டா என்ன பண்ணுவீங்க...

  எச்சரிக்கை!

  எச்சரிக்கை!

  அதிகமா குடிச்சு சீக்கிரம் மேல போயிடுவாங்கன்னு தான் சொல்லுவாங்க. இவங்கள பாருங்களேன்... சீக்கிரமா மேல போய் குடிக்கிறாங்க. சியர்ஸ் சொல்றது அப்பறம் இருக்கட்டும்... கொஞ்சம் தடுமாறி கீழ விழுந்தாலும்... உங்க உடம்ப சுத்தி சியர் கேர்ள்ஸ் ஆடுற மாதிரி ஆயிடும். ஐ மீன்... பாடை கட்டிடுவாங்கன்னு சொல்றேன்...

  என்ன சுகம்!

  என்ன சுகம்!

  அட! ரஷ்யாவுலயே அடடே! போட வைக்கிற விஷயம் இதுதாங்க...கண்ணுக்கு எட்டுற தூரத்துல ஒரு பனிமலை. மரத்துல கட்டுன ஒரு வீடு. வெளிய ஊஞ்சல் மாதிரி ஒரு குளியல் தொட்டு. கீழ நெருப்பூட்டி இதமான சூட்டுல ஜாலியா குளிக்கிறாங்க.. இது கூட அழகான பொண்ணுக வேற. இதவிட ரம்மியமான அழகு வேற என்ன இருக்கும் சொல்லுங்கள்... வாழ்றாங்க சார்!

  MOST READ: காசிக்கு அடுத்ததாக ராமேஸ்வரத்தை புனிதமாகக் கருதுவது ஏன்? அந்த சுவாரஸ்ய கதை இதுதான்...

  வேற லெவல்!

  வேற லெவல்!

  தலைக்கு மீறிய போதைன்னா இதுதான் போல... ஏன்மா பழங்கள்ல, காய்கறியில, ஆரஞ்சு ஜூஸ்ல, ஏன் வேற மாதிரி ரொமான்ஸா கூட சரக்கு அடிப்பாங்க... ஆனா... செருப்புல எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல.

  அழகியே!

  அழகியே!

  ரஷ்யா மாடல் பொண்ணுக மட்டும் இல்ல சாதாரணமே அழகா இருப்பாங்க.. அதுலயும் உசருமா வேற இருக்காங்க... ஆனா, ஆளும் வளரனும், ஆறிவும் வளரனும் அது தான்பா வளர்ச்சின்னு எழுதி வெச்சிருக்காங்க. இவங்க தான் உதாரணம்.. ஏன்மா இம்புட்டு அழகா இருக்கே.. இங்கயா படுத்து போஸ் கொடுக்கிறது.

  முரட்டுத்தனமான காதல்...

  முரட்டுத்தனமான காதல்...

  அறை எண் 305ல் கடவுள் படத்துல சந்தானம் ஆத்திர ஆத்திரமா காதலிக்கிறேன்னு சொல்வாப்புல. அது காமெடி.. ஆனா, இவங்க நிஜமாவே ஆத்திர, ஆத்திரமா தான் காதலிப்பாங்க போல. பொண்ணு கத்து பேசலாம்.. ஆன கத்தி வெச்சு பேச கூடாது.

  விடாதிங்க அவன...

  விடாதிங்க அவன...

  ஃபிஸிக்கலி சேலஞ்சுடு கார் போல... பாவம் கேலி கிண்ட எல்லாம் பண்ணாதிங்க. ஆனால், காருக்குள்ள உட்கார்ந்து போட்டோ எடுக்குறாங்கன்னு தெரிஞ்சும் அசால்டா போஸ் கொடுக்குறான் பாருங்களேன்.. அவன சும்மா விடாதீங்க!

  சதுரங்க வேட்டை!

  சதுரங்க வேட்டை!

  சதுரங்க விளையாட்டுல வெட்டி தான் விளையாடுவாங்க. இந்த பயலுக வெடிச்சு விளையாடுவாங்க போல... என்னமோ பண்ணுங்க தம்பி. இப்படி எல்லாம் ரணகளமாவா இருக்கும் ரஷ்யா. பெயருல இருக்க மாதிரியே கொஞ்சம் ரஷ்ஷா தான் இருப்பாங்க போல.

  MOST READ: பொடுகுத் தொல்லையை நிரந்தரமாக போக்க ஷாம்புவுடன் தேங்காய்ப்பாலை இப்படி தேய்ங்க...

  All Image: Source 1, 2

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Things You Can See Only in Russia!

  Here are things that could only ever happen in Russia.They are people who managed to enjoy life to the fullest despite the harsh circumstances that come with living in such cold weather. Here, we have some pictures of Russia that will amaze the heck out of you!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more